2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் புதுப்பிக்கப்பட்ட சான்டா-ஃபே வெளி வருகிறது
ஹூண்டாய் சான்டா ஃபீ க்கு published on sep 15, 2015 06:32 pm by manish
- 8 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் இந்த கார், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர்: இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னதாகவே வந்துவிட்டது போல தோன்றுகிறது. இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் சான்டா-ஃபே காரின் திரைமறைவை, பிராங்பேர்ட் இன்டர்நேஷ்னல் மோட்டார் ஷோ, 2015-ல் ஹூண்டாய் நிறுவனம் நீக்கியுள்ளது. கொரியன் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் அளிக்கும் உயர்தர பேட்ஜ்கள் மூலம் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு காராக இது விளங்க வாய்ப்புள்ளது. காரின் வெளிப்புறத்தில், கிரோம் மூலம் முழுமை பெறும் ஹூண்டாயின் அறுங்கோண வடிவிலான (ஹெக்ஸாகோனல்) முன்புற கிரில் அமைப்பு காணப்படுகிறது. பின்புறம் மற்றும் முன்புறத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்களை கொண்டுள்ளது. ஹெட்லெம்ப்களில் LED டேடைம் ரன்னிங் லைட்களை, புதிய சில்வர் டிரிம் சூழ்ந்த வண்ணம் உள்ளது. ஹெட்லெம்ப்களில், புதிய அமைப்பிலான செனான் பிரோஜக்டர் ஹெட்லெம்ப்களும், பின்புறத்தில் LED கிராஃபிக்ஸ் கொண்ட டெயில்லைட்களும் காணப்படுகிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸின் உலகளாவிய பாதுகாப்பு தத்துவத்திற்கு ஏற்ப, இந்த காரில் பல புத்தம் புதிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. எதிர்பாராத அவசர சூழ்நிலைகளில் ஆட்டோநோமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் வசதி ஓட்டுநருக்கு எச்சரிக்கை அளித்து, தேவைப்பட்டால் தன்னிச்சையாக வாகனத்தை நிறுத்தவும் செய்கிறது. இது போன்ற வசதிகளை அளிக்கும் வகையில், இந்த காரில் ரேடார் மற்றும் கேமரா சென்சர்கள் போன்ற உயர்தர பாதுகாப்பு சாதனங்கள் காணப்படுகிறது. இந்த சாதனம் மூலம் காரை நோக்கி வரும் மற்ற வாகனங்களை கண்டறிந்து, 360 கோணத்திலான காட்சியமைப்பை பெற்று, குருட்டுத் தன்மையை நீக்கி, சரியான கணிப்பு மூலம் திடீர் வாகன விபத்தை தவிர்க்க முடிகிறது.
ஹூண்டாய் சாண்டா-ஃபே காரின் உட்புறத்தில், DAB டிஜிட்டல் ரேடியோ மற்றும் இன்ஃபினிட்டி பிரிமியம் சவுண்ட் ஆகியவற்றை கொண்ட கொரியன் வாகன தயாரிப்பாளரின் ஆடியோ விஷுவல் நேவிகேஷன் சிஸ்டத்தால் நிறைந்துள்ளது. இவற்றின் மூலம் பயணிகளுடன் ஒரு உயர்தர பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஹூண்டாய் நிறுவனத்தின் எண்ணம் நிரூபிக்கப்படுகிறது. இந்த இன்ஃபினிட்டி பிரிமியம் சர்ரவுண்ட் ஆடியோ சிஸ்டம், 12 ஸ்பீக்கர்கள் மூலம் 630 வாட்ஸ் ஒலியை வெளியிட வல்லது. குவாண்டம் லாஜிக் சர்ரவுண்ட் (QLS) அமைப்பை பெற்ற இந்த காரில், ஒரு பல பரிணாம (மல்டி-டைமென்ஷனல்) சர்ரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை பெற முடிகிறது. பயணிகளின் இதமான மற்றும் சவுகரியமான பயணத்தை அதிகரிக்கும் வகையில், இரண்டாம் வரிசையில் உள்ள பயணிகளின் சீட்கள் முன்னும் பின்னும் நகர்த்த தக்க அமைப்பை கொண்டுள்ளது. இதன்மூலம் 15 mm அதிக நகர்வு பெற்று, மொத்த மாற்றியமைப்பாக 270 mm-யை பெற முடிகிறது.
புதிய சான்டா ஃபே-யில் உள்ள 2.2-லிட்டர் CRDi டீசல் என்ஜின், ஹூண்டாயின் தயாரிப்புகளில் அதிக சக்தி வாய்ந்த யூனிட்டாக இருக்க போகிறது. இந்த தரமான என்ஜின், 200bhp மற்றும் 440 Nm முடுக்குவிசையை அளிக்கிறது. பெட்ரோல் வகையை பொறுத்த வரை, மேம்பட்ட தீட்டா II 2.4-லிட்டர் என்ஜின், 187bhp மற்றும் 241 Nm முடுக்குவிசையை அளிக்கிறது. இந்த மேற்கூறிய ஆற்றல் அளிக்கும் அமைப்பு, தரமான 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது தேர்விற்குட்பட்ட ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
- Renew Hyundai Santa Fe Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful