#2015 ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோ : நான்காவது - தலைமுறை பிரியஸ் கார்கள் IAA 2015 ல் காட்சிக்கு வைக்கப்பட்டன.
published on செப் 18, 2015 03:20 pm by manish
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
டொயோடா நிறுவனம் தனது பிரியஸ் கார்களின் நான்காவது பதிப்பை 15 ஆம் தேதி ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைத்தது. இந்த கார் வடிவமைப்பை பொறுத்தவரை ஜப்பான் நாட்டு பாரம்பரியம் மிக்க சோடோ என்று அழைக்கப்படும் ஓவிய கலையின் பாதிப்போடும் , வண்ண வண்ண காகிதங்களை மடித்து செய்யப்படும் ஒரிகாமி கலையின் பாதிப்போடும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்த புதிய 2016 டொயோடா ப்ரயஸ் கார்கள் இந்நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு கோட்பாடான 'TNGA' வை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கோட்பாட்டின்படி புதிய ப்ரயஸ் கார்கள் ,முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில் கூடுதல் உறுதி கொண்டதாகவும் அதே சமயத்தில் இலகுவானதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கார்கள் சற்று பெரிதாக்கப்பட்டிருக்கின்றன. நீளம் 60 mm அளவிற்கும் அகலம் 15mm அளவிற்கும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏரோடைனாமிக் தன்மையை மேம்படுத்தும் விதத்தில் இந்த புதிய ப்ரியஸ் கார்களின் உயரமும் 20 mm அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நான்காம் - தலைமுறை ப்ரியஸ் கார்கள் அதிக மைலேஜ் மற்றும் குறைந்த எமிஷன் (புகை வெளி வருதல் ) தரும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஹைப்ரிட் சினர்ஜி டிரைவ் பவர் ட்ரைன் மூலம் சக்தியூட்டப்படுகிறது. 18% வரை எரிபொருள் சிக்கனம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் முந்தைய மாடல்களில் பொருத்தப்பட்டிருந்த மோட்டாரை விட சிறிய அளவிலானது. இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரிகளும் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்டு நீண்ட சக்தியை தரும் விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ப்ரியஸ் கார்களின் வெப்பம் சார்ந்த சக்தியும் ( தெர்மல் பவர் ) 40% வரை கூட்டப்பட்டு கேசோலின் என்ஜின் பொருத்தப்பட்ட உலகளவில் உள்ள அனைத்து வகை கார்களுக்கும் ஒரு புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ளது என்று சொன்னால் மிகையில்லை. இதற்கு முந்தைய மாடல் 38% வரை வெப்பம் சார்ந்த சக்தியை வெளியிட்டது என்பது கவனிக்கப்பட வேண்டிய செய்தி.
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை சாலை பிடிப்பு இந்த காரில் அற்புதமாக உள்ளது. லேன் டிபார்ச்சர் அலெர்ட், தானியங்கி ஹை - பீம், ரோட் சைன் உதவி, ராடர் - உதவியுடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், மற்றும் பாதசாரிகளை அடையாளம் காணும் திறமை என்று பல பாதுகாப்பு அம்சங்களை இந்த புதிய ப்ரியஸ் கார்கள் தன்னகத்தே கொண்டுள்ளன.
0 out of 0 found this helpful