2015 ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், ஆடி தனது ஈ-டிரோன் குவாண்ட்ரோ கோட்பாட்டை வெளியிட்டது
published on செப் 16, 2015 09:23 am by manish
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
தற்சமயம், சுற்று சூழலுக்கு பாதுகாப்பான எக்கோ- மோட்டாரிங்க் பற்றியே அனைத்து தரப்பினரும் கலந்துரையாடுகின்றனர். 2015 ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவிலும் இதுவே பொதுவான பேச்சாக இருந்தது. ஆடி, ஜெர்மன் கார் தயாரிப்பாளர், அதிநவீன மின்சார கார் பிரிவில் வரவுள்ள தனது புதிய ஈ-டிரோன் குவாட்ரோ SUV -இன் கோட்பாட்டை விளக்கினர். 2018 ஆம் ஆண்டு வெளிவர இருக்கும் இந்த SUV, மோட்டார் ஷோவில் வெளியிட்ட இந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமையும், என்று இந்த நிறுவனம் உறுதி கூறுகிறது.
ஆடியின் ஈ-டிரோன் குவாட்ரோ கோட்பாடு, மிகச் சிறந்த 495 bhp குதிரை திறனை உருவாக்கும். மேலும், இதன் இஞ்ஜின் செயல்திறன் ஆடியின் ஈ-டிரோன் குவாட்ரோ ட்ரைவ் தொழில்நுட்பத்தில் அமையும். ஈ-டிரோன் கோட்பாடு மூலம், 800 Nm உந்து சக்தியும்; காரை முடுக்கி விட்ட 4.2 வினாடியில், மணிக்கு பூஜ்யத்தில் இருந்து நூறு கிலோ மீட்டர் வரை வேகமாக செல்ல முடியும். கான்சப்ட் கார் தயாரிக்கும் கோட்பாட்டில் இடம்பெற்று வரும் மூன்று மின் மோட்டார்கள், இந்த அருமையான புள்ளிவிவரங்களை நிதர்சனம் ஆக்குகின்றன. எனவே, இந்த செயல்திறன் மூலம், மின்னணு முறையில் வரையறுக்கப்பட்ட (எலெக்ட்ரானிகலி லிமிடெட்) அதிகமான வேகமாக, மணிக்கு 209 கிலோ மீட்டர் வரை இந்த கார் செல்லும்.
லித்தியம் அயன் பேட்டரி பெட்டிகள், இந்த கான்செப்ட் காரின் தரை தளத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இத்தகைய அமைப்பு, புவி ஈர்ப்பு மையத்தை குறைவான உயரத்தில் இருக்கச் செய்து, காரின் ஸ்தரத் தன்மையை மேம்படுத்துவதோடு நின்று விடாமல், ஒரு சீரான இருசுப்பளு விநியோகத்தையும் (ஆக்ஸில் லோட் பேலன்ஸ்) தருவதால், இந்த SUV காரை, பந்தைய காரை கையாளும் திறனில் அருமையாக கையாள முடியும், என்று ஆடி நிறுவனம் உறுதி கூறுகிறது.
இந்த காரின் பேட்டெரியில் பொருத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சார்ஜ் அமைப்பு (CCS), இந்த காரை DC அல்லது AC ஆகிய இரண்டு விதமான கரண்டிலும் சார்ஜ் செய்ய உதவுகிறது. 50 நிமிட DC கரன்ட்டில் சார்ஜ் செய்த பின்பு, 150 kw சக்தி வெளியீட்டை ஈ-டிரோன் குவாட்ரோ காரால் தர முடியும்.
இந்த காரை, ஆடி நிறுவனத்தின் சிறப்பு இண்டக்ஷன் மின்னூட்டு (சார்ஜ்) தொழில்நுட்பத்தால், வயர் இல்லாமல் மின்காந்தபுலம் மூலம் மின்னூட்டு செய்ய முடியும். எளிமையாக மின்னூட்டுவதற்கு வசதியாக இந்த கார் தானாகவே பார்க் செய்து கொள்ளக்கூடிய, ஆடியின் ஈ-டிரோன் குவாட்ரோ கோட்பாட்டின் சிறப்பு திறன்களின் ஒன்றான பைலடெட் பார்க்கிங் அமைப்புடன் வருகிறது. இந்த அமைப்பின் மூலம், கார் மின்னூட்டு தட்டில் (சார்ஜிங் ப்ளேட்) தானாகவே சென்று சார்ஜ் செய்வதற்கு உகந்த நிலையில் நின்றுவிடும். மேலும், கர்மா பிஸ்கர் போல, மிகப் பெரிய சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் மேற்கூரை இந்த காரிலும் உள்ளது. வெயில் நன்றாக இருக்கும் போது, இதன் பேட்டெரிகள் தானாக சார்ஜ் ஆகிவிடும்.
0 out of 0 found this helpful