• English
  • Login / Register

2015 டாடா சஃபாரி: தன்னைவிட இரண்டு மடங்கு விலை அதிகமான SUV –க்களை விட அதிகமான டார்க்கை உற்பத்தி செய்கிறது!

published on டிசம்பர் 01, 2015 03:50 pm by raunak for டாடா சாஃபாரி ஸ்டோர்ம்

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவில் சஃபாரி ஸ்டார்ம் காருடன் இணைக்கப்பட்டுள்ள ஹெக்ஸாவின் VARICOR 400 இஞ்ஜின் மாடல் அபரிதமான 400 Nm என்ற டார்க்கை உற்பத்தி செய்து, டொயோடா ஃபோர்ச்யூனரை முந்தி, மிட்சுபீஷி பஜெரோ ஸ்போர்ட்டுக்கு இணையாக மகத்தான சக்தியை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், அதன் பிரிவில் உள்ள கார்களை விட அதிக அளவில் மாபெரும் சக்தியை உற்பத்தி செய்கிறது என்பதையும் நாம் குறிப்பிடவேண்டும்.

நாம் குறிப்பிட்டுள்ள இந்த விவரம் மேற்கூறிய SUV மாடலுக்கான சாதகமான PR போலத் தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல. தற்போது, டாடாவின் சஃபாரி ஸ்டார்ம் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பொருத்தப்பட்டுள்ள புதிய வரிகோர் 400 இஞ்ஜின் இந்த காரின் தரத்தை மேலும் உயர்த்தி உள்ளது என்பதே உண்மை.

மேற்கூறிய SUV கார்கள் அனைத்தும், சஃபாரியின் செக்மெண்ட்டிலேயே வரவில்லை, ஆனால் அவற்றின் விலை, டாடா நிறுவனம் தனது வரிகோர் 400 வேரியண்ட்டிற்கு நியமித்துள்ள ரூ. 13.52 லட்சங்கள் என்ற விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளன, எனினும், அவை டாடாவின் மாடலுடன் ஒப்பீடு செய்யப்படுகின்றன. 2015 ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த மோட்டார், ஹெக்ஸா கான்செப்ட்டுடன் இணைத்து வெளியிடப்பட்டது. எனவே, இதே இஞ்ஜின் கான்செப்ட்டை தயாரிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று, அடுத்த 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், மேற்கூறிய அனைத்து விலை உயர்ந்த SUV கார்களிலும் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தவிர ஆட்டோமேடிக் ஆப்ஷனும் உள்ளது. ஆனால், சஃபாரி மாடல் புதிய 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனும், 4WD அமைப்பையும் பெற்றுள்ளது. இப்போது, முக்கியமான புள்ளி விவரங்களை ஒப்பிடுவோம். ஃபோர்ச்சியூனரின் 2.5 லிட்டர் இஞ்ஜின் 144 PS / 343 Nm உற்பத்தி செய்கிறது; பஜெரோ ஸ்போர்ட்டின் இஞ்ஜின் 178 PS / 400 Nm என்ற அளவில் உற்பத்தி செய்கிறது; ஆனால், சஃபாரியின் புதிய இஞ்ஜின் 156 PS / 400 Nm என்ற அளவில் சக்தியை உற்பத்தி செய்தாலும், மற்ற இரண்டு கார்களின் விலையில் இருந்து, கிட்டத்தட்ட பாதி விலையில் கிடைக்கிறது.

புதிய இஞ்ஜின், உயர்தர VX டிரிம்மில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. ஏனைய டிரிம்களில், ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் வெளியான ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பொருத்தப்பட்டிருந்த அதே இஞ்ஜின் வெர்ஷன் பொருத்தப்பட்டு, 5 ஸ்பீட் கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டு வரும். ஃபேஸ்லிஃப்ட் மாடலைப் பொறுத்தவரை, உட்புற அழகிற்கே அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களைப் பற்றி தெரிந்து கொள்ள இதை வாசியுங்கள்.

was this article helpful ?

Write your Comment on Tata Safar ஐ Storme

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • �டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience