புதுப்பிக்கப்பட்ட 2015 மாருதி சுசுகி எர்டிகா நாளை அறிமுகம் செய்யப்படுகிறது
published on அக்டோபர் 09, 2015 04:31 pm by raunak for மாருதி எர்டிகா 2015-2022
- 15 Views
- 3 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
சியஸை போல, எர்டிகாவிலும் ஒட்டுமொத்த எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கும் வகையில் SHVS மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர்:
மாருதி சுசுகி நிறுவனம், தனது புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவை நாளை அறிமுகம் செய்ய உள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி காய்கின்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷ்னல் ஆட்டோ ஷோவில் (GIIAS), இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல் உலக அரங்கேற்றம் பெற்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவில், பல புதிய அம்சங்கள் மற்றும் புத்துயிர் பெற்ற வெளிப்புற அமைப்புகளை கொண்டுள்ள நிலையில், சில இயந்திரவியல் மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயத்தில் சிறிய உயர்வை தவிர, பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை குறித்து பார்க்கும் போது, மறு-வடிவமைப்பு பெற்ற முன்பக்க பம்பரில் உள்ள ஃபேக் லெம்ப்பை சுற்றிலும் காணப்படும் கிரோம் அலங்காரம் (அப்ளிக்யூ) உடன் புதிய மூன்று-ஸ்லாட் கிரோம் கிரில் காணப்படுகிறது. ஹெட்லைட்களில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், போனட்டில் நுண்ணிய மாற்றங்களை பெற்றுள்ளது. பின்புறத்து தகவமைப்பில், கிரோம் ஸ்டிரிப்பை ஆக்கிரமித்தது போல எர்டிகா பெயரும், மாற்றம் எதுவும் செய்யப்படாத டெயில்லைட்களுக்கு இடையில் ஒரு ஜோடி எதிரொலிப்பான்களும் (ரிஃப்ளெக்டர்கள்) காணப்படுகிறது.
உட்புறத்தை பொறுத்த வரை, ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் போலவே எர்டிகாவிலும் செய்யப்பட்டுள்ளது. புஸ்-பட்டன் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப், மின்னூட்டத்தினால் மடங்கி கொள்ளும் வெளிப்புற பின்பக்கத்தை பார்க்க உதவும் மிரர்கள், புதிய மெத்தை அமைப்பு ஆகியவை காணப்படுகிறது. மற்ற கார்களுடனான போட்டியை தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவில் நேவிகேஷன் உடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு கொண்டு வரப்படலாம். மேலும், இந்தோனேஷியாவின் புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவை போல, இந்திய பதிப்பிலும் கடைசி வரிசை சீட்களை 50:50 என்று மடக்கும் வசதியும் கொண்டு வரப்படுகிறது.
இதையும் படியுங்கள்:
மாருதி எர்டிகா 2015: இதோ, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை
இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் புதுப்பிக்கப்பட்ட சுசுகி எர்டிகாவின் அரங்கேற்றம் – இந்தோனேஷியாவில் இருந்து நேரடி (போட்டோ கேலரி)
புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவின் வகைகள் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்தது
என்ஜின்களை பொறுத்த வரை, புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவில் 1.4-லிட்டர் K14B பெட்ரோல் மற்றும் 1.3-லிட்டர் DDiS 200 ஆகியவற்றை கொண்டிருக்கும். 1.3-லிட்டர் DDiS-ல் ஒருவேளை சுசுகியின் SHVS-யை (ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிக்கிள் சிஸ்டம்) பெற்று, ஸ்டார்ட்-ஸ்டாப் மற்றும் பிரேக் எனர்ஜி ரிஜெனரேஷன் பணிகளை மேற்கொள்ளலாம். தற்போது வெளியே செல்லும் மாடல்களில் SHVS-யை பெற்று, லிட்டருக்கு 20.77 கி.மீ மைலேஜ் அளிப்பதை போல, இதிலும் SHVS-யை பெறும்பட்சத்தில், டீசல் என்ஜினின் எரிபொருள் சிக்கனத்தில் ஏற்றம் காண முடியும். இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலின் பெட்ரோல் பதிப்பில் கூட, இந்த முறை ஒரு ஆட்டோமேட்டிக் தேர்வு கொண்டுவரப்பட வேண்டியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில், எர்டிகாவில் தரமான ஏர்பேக்குகளை மாருதி நிறுவனம் கொண்டுவர வாய்ப்புள்ளது.
0 out of 0 found this helpful