வோல்க்ஸ்வேகன் TDI உரிமையாளர்களுக்கு $1000 மற்றும் இலவச ரோடுசைடு அசிஸ்டென்ஸ் அளிக்கப்படுகிறது
published on நவ 16, 2015 10:03 am by bala subramaniam
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
நீங்கள் ‘பாதிக்கப்பட்ட’ 2.0L TDI என்ஜின் கொண்ட வோல்க்ஸ்வேகன் காரின் உரிமையாளரா? ஆம் என்றால், நீங்கள் $1000 வென்றிருக்கிறீர்கள். ஏனெனில் 2.0L TDI உரிமையாளர்களுக்கு, வோல்க்ஸ்வேகன் பிரிபெய்டு விசா லோயாலிட்டி கார் என்ற வடிவத்தில் $500-யும், வோல்க்ஸ்வேகன் டீலர்ஷிப் கார்டு என்ற வடிவில் $500-யும் என்று மொத்தம் $1000 அளிக்கப் போவதாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மோதல்கள் உட்பட, 24 மணிநேர ரோடுசைடு அசிஸ்டென்ஸ் அளிப்பதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
வோல்க்ஸ்வேகனின் உட்புற விசாரணைகளின்படி, தீர்மானிக்கப்பட்ட வகையில் அனுமதிக்கப்பட்ட CO2 நிலையில் சீரற்ற தன்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. உட்புற தகவலின் அடிப்படையில், ஏறக்குறைய 2 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வோல்க்ஸ்வேகன் குழுவின் 8,00,000 வாகனங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய டீசல் என்ஜின்களோடு தொடர்புடைய எல்லா செயல்முறைகள் மற்றும் பணியாற்றும் முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் மூலம், சில மாடல்களின் CO2 அளவுகள் மற்றும் எரிபொருள் உபயோகத்தின் புள்ளிவிபரங்கள் ஆகியவற்றை, CO2 சான்றிதழ் அளிப்பு செயல்முறையின் போது, மிகவும் குறைவாக அமைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்