மேம்படுத்தப்பட்ட எர்டிகாவை, மாருதி சுசுகி இன்று அறிமுகப்படுத்துகிறது
published on அக்டோபர் 15, 2015 04:50 pm by cardekho for மாருதி எர்டிகா 2015-2022
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
தற்போது விற்பனையில் உள்ள எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்த, மாருதி சுசுகி நிறுவனம் முழுமையாக தயாராகிவிட்டது. இந்த ஜப்பானிய நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கைக்கிண்டோ இந்தோனேஷியா சர்வதேச வாகன கண்காட்சியில் (GIIAS) புதிய மேம்படுத்தப்பட்ட எர்டிகாவை காட்சிப்படுத்தியது.
வாகன உலகில் தற்போது நிலவி வரும் கடினமான போட்டியில், புதிய வரவுகளான ஹோண்டா மொபிலியோ, ரினால்ட் லாட்ஜி மற்றும் விற்பனையில் ராஜாவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் டொயொட்டோ இன்னொவா ஆகிய கார்களுடன் எர்டிகா மோத வேண்டியுள்ளது. எனவே, இந்த பிரபலங்கள் மத்தியில் எர்டிகாவை நட்சத்திரமாக ஜொலிக்க வைக்க, மாருதி நிறுவனம் புதிய எர்டிகாவில் இஞ்ஜின், வடிவம் மற்றும் பல அம்சங்களை மேம்படுத்தியுள்ளது.
முதன்முதலில் உளவு பார்க்க நேர்ந்தபோது, மேம்படுத்தப்பட்ட எர்டிகாவில் SHVS என்ற பெயர் இருந்தது. எனவே, எர்டிகா ஃபேஸ் லிஃப்ட்டில் சியாஸ் காரில் உள்ள ஹைபிரிட் தொழில்நுட்ப சாராம்ஸம் பொருத்தப்பட்டு வரும் என்று தெரிகிறது. சியாஸின் டீசல் SHVS கார், லிட்டருக்கு 2 கிலோ மீட்டர் வரை அதிகமான எரிபொருள் சிக்கனத்தைத் தந்தது. எனவே, புதிதாக வரவிருக்கும் MPV -யும் இதே விதமான எரிபொருள் சிக்கனம் அல்லது இதை விட அதிகமான மைலேஜ் தரும் என்று தெரிகிறது. மேலும், சமீபத்தில் வெளியான மாருதி சுசுகியின் அனைத்து மேம்படுத்திய கார் ரகங்களைப் போலவே, எர்டிகாவின் பெட்ரோல் ரக கார் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தரும், ஆனால், மைல்ட் ஹைபிரிட் அமைப்பு டீசல் இஞ்ஜினில் மட்டுமே பொருத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. கார் ஓடாமல் நின்று கொண்டிருந்தால், இஞ்ஜின் தானாக நின்று விடும் ஸ்டார்ட்-ஸ்டாப் அமைப்பு மற்றும் ப்ரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் ஆகிய சிறப்பம்ஸங்கள் சுசூக்கியின் SHVS அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளன.
புதிய எர்ட்டிகாவின் இஞ்ஜின் பற்றி பேசும் போது, இதன் டீசல் ரகம் DDiS 200 இஞ்ஜின் பொருத்தப்பட்டு, 90 PS மற்றும் 200Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இதன் பெட்ரோல் ரகத்தில் K14B இஞ்ஜின் பொருத்தப்பட்டு, 95 PS மற்றும் 130 Nm டார்க்கை உற்பத்தி செய்யவல்லதாக இருக்கிறது. டீசல் மற்றும் பெட்ரோல் ரகங்களில் 5 வேக கையியக்க ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு வரும். எனினும், பெட்ரோல் ரகத்தில் மட்டும் தானியங்கி CVT வசதி விருப்பத் தெரிவாக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்ஸ மேம்பாடுகள் என்று பார்த்தால், சுசுகியின் 7 அங்குல ஸ்மார்ட் பிளே இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு, சாவி இல்லாமல் உள்ளே செல்லக்கூடிய அமைப்பு, எளிதாக இயக்கவும் நிறுத்தவும் உதவும் புஷ் பட்டன், 60:40 என்ற விகிதத்தில் பிரிக்கக் கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகள், புதிய இருக்கை மற்றும் விதான விரிப்புகள் மற்றும் பலவற்றை நாம் குறிப்பிட வேண்டும்.
மேலும் வாசிக்க:
- மாருதி எர்டிகா 2015: வாடிக்கையாளர்களுக்கு தெரிய வேண்டிய முக்கிய விவரங்கள்
- கசிந்து வெளியான செய்தி: மேம்படுத்தப்பட்ட எர்டிகாவின் வகைகள் மற்றும் சிறப்பாம்ஸ குறிப்புகள்
மேலும் தெரிந்து கொள்ள:
மாருதி எர்டிகா: ஒரு முழுமையான மதிப்பாய்வுரை
0 out of 0 found this helpful