ஆட்டோ எக்ஸ்போ 2025 மூலமாக இந்தியாவில் களமிறங்கியது VinFast VF8
vinfast vf8 க்காக ஜனவரி 18, 2025 08:43 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
வின்ஃபாஸ்ட் VF8 என்பது ஒரு பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இது VF7 மற்றும் ஃபிளாக்ஷிப் VF9 -க்கு இடையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இது 412 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும்.
-
VF8 என்பது 2-வரிசை சீட்களை கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இது 5-சீட்டர் கட்டமைப்பில் வருகிறது.
-
வெளிப்புறத்தில் V-வடிவ கிரில், நேர்த்தியான LED DRL -கள் மற்றும் LED டெயில் லைட்ஸ் மற்றும் 20-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.
-
பிரெளவுன் மற்றும் பிளாக் டூயல்-டோன் கேபின் தீம் உடன் வருகிறது.
-
15.6-இன்ச் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, சூடான மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இந்த காரில் உள்ள ஹைலைட்ஸ் ஆக இருக்கும்.
-
87.7 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது 412 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.
வின்ஃபாஸ்ட் VF8 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமான மற்றொரு ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். VF8 என்பது வியட்நாமிய EV-தயாரிப்பாளரின் 2-வரிசை 5-சீட்டர் EV ஆகும். இது VF7 மற்றும் ஃபிளாக்ஷிப் VF9 எஸ்யூவி -களுக்கு இடையில் இது விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இந்த வின்ஃபாஸ்ட் எஸ்யூவி ஆனது ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னுடன் வருகிறது மற்றும் 412 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. காரை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.
வழக்கமான வின்ஃபாஸ்ட் வடிவமைப்பு
முதல் பார்வையில் VF8 அதன் V-வடிவ வடிவமைப்பின் காரணமாக வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எஸ்யூவி என எளிதில் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. முன்பக்கத்தில் இது V-வடிவ கிரில், நேர்த்தியான LED DRL -கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு சாய்வான பின்புற முனை உள்ளது. காரில் 20-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எஸ்யூவி -யின் பின்புறம் டெயில்கேட்டில் உள்ள வின்ஃபாஸ்ட் மோனிகரை இணைக்கும் LED டெயில் லைட்களும் உள்ளன.
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
வின்ஃபாஸ்ட் VF8 எலக்ட்ரிக் எஸ்யூவி பிரவுன் மற்றும் பிளாக் டூயல் டோன் கேபின் தீமுடன் வருகிறது. டாஷ்போர்டு மினிமலிஸ்டிக் உள்ளது மற்றும் பெரிய 15.6-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சீட்கள் பிரெளவுன் நிற லெதரெட் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளன.
ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள், பவர்டு முன் இருக்கைகள் மற்றும் மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை உள்ளன. பாதுகாப்புக்காக 11 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்
வின்ஃபாஸ்ட் VF8 எலக்ட்ரிக் எஸ்யூவியை 87.7 kWh பேட்டரி பேக் மற்றும் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது:
பேட்டரி பேக் |
87.7 kWh |
87.7 kWh |
WLTP கிளைம்டு ரேஞ்ச் |
471 கி.மீ |
457 கி.மீ |
பவர் |
353 PS |
408 PS |
டார்க் |
500 Nm |
620 Nm |
டிரைவ் டைப் |
ஆல்-வீல் டிரைவ் (AWD) |
ஆல்-வீல் டிரைவ் (AWD) |
VF8 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதன் மூலம் அதன் பேட்டரியை வெறும் 31 நிமிடங்களில் 10 முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
எதிர்பார்க்கப்படும் இந்தியா வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்
VF8 எலக்ட்ரிக் எஸ்யூவி எப்போது வெளியிடப்படும் என்பதை வின்ஃபாஸ்ட் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது இந்திய சந்தைக்கு வந்தால் இது ஹூண்டாய் அயோனிக் 5, கியா EV6 மற்றும் வால்வோ C40 ரீசார்ஜ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.