• English
  • Login / Register

ஆட்டோ எக்ஸ்போ 2025 காட்சிக்கு வைக்கப்பட்டது புதிய VinFast VF 7

published on ஜனவரி 18, 2025 09:12 pm by anonymous for vinfast vf7

  • 14 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வின்ஃபாஸ்ட் VF 7 வரவிருக்கும் BYD சீலையன் 7 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 6 மற்றும் கியா EV6 ஆகியவற்றுக்கு போட்டியாக பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி பிரிவில் களமிறங்கும்.

VinFast VF 7 showcased at auto expo 2025

  • பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் வெளியிடப்பட்ட வின்ஃபாஸ்ட் VF 7 அதி நவீன வடிவமைப்பை கொண்டுள்ளது.

  • மினிமலிஸ்டிக் உட்புறத்துடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • முன்-சக்கரம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் டிரெய்ன் ஆப்ஷன்களுடன் ஒரே ஒரு 75.3 kWh பேட்டரி பேக் கொண்ட இரண்டு வேரியன்ட்களில் இது கிடைக்கும். 

  • 15-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகிய வசதிகள் கிடைக்கும். 

  • வின்ஃபாஸ்ட் VF 7 -க்கான விலை ரூ. 50 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2025 ஆட்டோ எக்ஸ்போவில்.வின்ஃபாஸ்ட் நிறுவனம் காட்சிக்கு வைக்கப்பட்ட VF 7 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மூலமாக இந்தியாவில் களமிறங்கியுள்ளது. VF 7க்கான விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் வாகன உற்பத்தியாளர் அதை பிரீமியம் EV பிரிவில் நிலைநிறுத்தியுள்ளது. இந்த கட்டுரையில் VF 7 -ன் வடிவமைப்பு, உட்புறம், ரேஞ்ச் மற்றும் வசதிகளை விளக்கியுள்ளோம்.

வின்ஃபாஸ்ட் VF 7 வடிவமைப்பு

ஒட்டுமொத்தமாக வின்ஃபாஸ்ட் VF 7 -க்கான தெளிவான வடிவமைப்பு அணுகுமுறையை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இது உங்கள் கவனத்தை உடனடியாக ஈர்க்கும் நேர்த்தியான LED DRL -கள் உள்ளன. ஹெட்லைட் செட்டப் அவற்றின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு EV ஆக இருந்தாலும் அதன் தோற்றத்தை மேம்படுத்தி காட்டும் வகையில் பாரம்பரிய தேன்கூடு வடிவ கிரில்லை காரில் கொடுத்துள்ளது.

VinFast VF 7 Design

பக்கவாட்டில் VF 7 மஸ்குலர் தோற்றத்தை கொண்டுள்ளது. வீல் ஆர்ச்கள் மற்றும் பக்க உடல் கிளாடிங்குகள் உள்ளன. இது ஃப்ளஷ் ஃபிட்டட் டோர் ஹேண்டில்களையும் கொண்டுள்ளது. அதன் வெளிப்புறத்தில் பிரீமியம் டச் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் அதன் கனெக்டட் எல்இடி டெயில் லைட்களுடன் நேர்த்தியாக உள்ளது. VF 7 காரின் 4,545 மி.மீ நீளம், 1,890 மி.மீ அகலம், 1,635 மி.மீ உயரம் மற்றும் 2,840 மிமீ வீல்பேஸ் ஆக உள்ளது. 

வின்ஃபாஸ்ட் VF 7 இன்டீரியர்

VinFast VF 7 Interior

மினிமலிஸ்டிக் வடிவமைப்பு அணுகுமுறை VF 7 -ன் உள்ளே தொடர்கிறது. அதன் டேஷ்போர்டில் ஃபுளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழே டிரைவ் மோடு தேர்வுக்கான பட்டன்களும் உள்ளன. அதே சமயம் சென்டர் கன்சோல் போதுமான ஸ்டோரேஜை கொண்டுள்ளது. உட்புறம் முழுவதும் ஏராளமான சில்வர் ஆக்ஸென்ட்களுடன் டூயல்-டோன் கலர் ஆப்ஷனை கொண்டுள்ளது. 

VF 7 காரில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இல்லை. இருப்பினும் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே இதில் உள்ளதால் அது ஒரு பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

வின்ஃபாஸ்ட் VF 7 வசதிகள்

வின்ஃபாஸ்ட் VF 7 ஆனது 15 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக 8 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா செட்டப் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் போன்றவை அடங்கும்.

வின்ஃபாஸ்ட் VF 7 ரேஞ்ச் மற்றும் பவர்டிரெய்ன்

வின்ஃபாஸ்ட் VF 7 ஆனது ஒரே ஒரு 75.3 kWh பேட்டரி பேக்குடன் மட்டுமே கிடைக்கும். ஆனால் இரண்டு நிலைகளில் உள்ளது. பேஸ் வேரியன்ட் 204 PS/310 Nm சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் செட்டப்பை கொண்டுள்ளது. இது ஃபிரன்ட்-வீல் டிரைவ் ட்ரெய்னுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டாப்-ஸ்பெக் வேரியன்ட் 354 PS/ 500 Nm டூயல் எலக்ட்ரிக் மோட்டார் செட்டப்பை கொண்டுள்ளது. மற்றும் ஆல்-வீல் டிரைவ்டிரெய்னுடன் இணைக்கப்பட்டுள்ளது. முந்தையது 450 கி.மீ உரிமை கோரப்பட்ட ரேஞ்சையும், மற்றொன்று 431 கி.மீ கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.

வின்ஃபாஸ்ட் VF 7 விலை மற்றும் போட்டியாளர்கள்

வின்ஃபாஸ்ட் VF 7 -க்கான விலை விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. இதன் விலை ரூ.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அறிமுகப்படுத்தப்பட்டதும் இது மஹிந்திரா XEV 9e, BYD சீலையன் 7, ஹூண்டாய் அயோனிக் 6 மற்றும் கியா EV6 ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on VinFast vf7

explore மேலும் on vinfast vf7

  • vinfast vf7

    Rs.50 Lakh* Estimated Price
    செப் 18, 2025 Expected Launch
    ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
space Image

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா சாஃபாரி ev
    டாடா சாஃபாரி ev
    Rs.32 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience