• English
  • Login / Register

ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய VinFast VF 3

vinfast vf3 க்காக ஜனவரி 18, 2025 07:59 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 30 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வின்ஃபாஸ்ட் VF 3 என்பது 2 கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இது 215 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.

VinFast VF3 revealed at Bharat Mobility Global Expo 2025

  • வின்ஃபாஸ்ட் விரைவில் இந்தியாவில் கார்களின் விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

  • வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் சிறிய EV ஆக VF 3 இருக்கும்.

  • இது பாரம்பரிய பாக்ஸி வடிவமைப்பு மற்றும் காரின் நீளம் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கிளாடிங் ஆகியவற்றை கொண்டுள்ளது.

  • உள்ளே பிளாக் கலர் டாஷ்போர்டு தீம் மற்றும் 4 பேர் வரை சீட்களுடன் வருகிறது.

  • 10 இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன், மேனுவல் ஏசி மற்றும் முன் பவர் ஜன்னல்கள் போன்ற வசதிகளுடன் வருகிறது.

  • 41 PS மற்றும் 110 Nm ரியர் வீல் டிரைவ் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவின் வெளியீடு இந்த ஆண்டிலேயே இருக்கலாம். விலை ரூ. 10 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 என்பது 2-கதவுகளை கொண்ட சிறிய EV ஆகும். பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் இந்தியாவில் அறிமுகமானது. VF 3, இங்கு அறிமுகப்படுத்தப்பட்டால், நாட்டிலேயே மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் கார்களில் ஒன்றாகவும் MG காமெட் -க்கு நேரடிப் போட்டியாகவும் இருக்கும். VF 3 எப்படி இருக்கிறது மற்றும் அது என்ன வழங்குகிறது என்பதைப் பார்க்கலாம்.

வின்ஃபாஸ்ட் VF 3 காரின் வடிவமைப்பு

வின்ஃபாஸ்ட் VF 3 ஒரு சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். மேலும் MG காமெட் EV போன்றே இரண்டு கதவுகளை மட்டுமே கொண்டுள்ளது. VF 3 ஒரு பாக்ஸி வடிவமைப்பை கொண்டுள்ளது. முன்புறத்தில் ஒரு குரோம் கிரில் பார் ஹெட்லைட்டுகளுடன் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளன. பம்பர் பிளாக் கலரிலும் காரின் நீளம் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாடி கிளாடிங்குடன் கொடுக்கப்பட்டுள்ளது. VF 3 அலாய் வீல்கள் மற்றும் ஸ்டீல் ரிம் என இரண்டின் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.

முன்புறத்தை போலவே டெயில்கேட்டிலும் V- வடிவ அலங்காரம் உள்ளது. இது டெயில் விளக்குகளுடன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற பம்பர் பிளாக் கலரிலும் காரின் பக்க கிளாடிங் உடன் ஒன்று சேர்கிறது.

கேபின் மற்றும் வசதிகள்

இந்த சிறிய எலக்ட்ரிக் காரின் கேபின் ஆல் பிளாக் கலரில் உள்ளது. மேலும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் கொண்டுள்ளது. VF 3 ஆனது 4 பயணிகளுக்கான இருக்கைகளை வழங்குகிறது. இருப்பினும் பின் சீட்களை அடைய கோ டிரைவரின் இருக்கையை முன்பக்கத்தில் மடித்து வைக்க வேண்டியிருக்கும். இது V-வடிவ மத்திய ஏசி வென்ட்களை கொண்டுள்ளது, வென்ட்களை சுற்றி ஒரு காப்பர் கார்னிஷ்  கொடுக்கப்பட்டுள்ளது.

VF 3 10-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன், மேனுவல் ஏசி மற்றும் முன் பவர் ஜன்னல்கள் உள்ளன. இதன் பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் கொடுக்கப்படலாம்.

வின்ஃபாஸ்ட் VF 3 ரேஞ்ச்

உலகளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் VF 3 ஆனது 215 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய பேட்டரி பேக்குடன் வழங்கப்படுகிறது.

விவரங்கள்

வின்ஃபாஸ்ட் விஎஃப் 3

எலக்ட்ரிக் மோட்டார்

1

பவர்

43.5 PS

டார்க்

110 Nm

ஆக்ஸிலரேஷன் (0-50 கிமீ/மணி)

5.3 வினாடிகள்

டிரைவ் டைப்

ரியர்-வீல் டிரைவ்

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

வின்ஃபாஸ்ட் VF 3 ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா டியாகோ EV மற்றும் டாடா டிகோர் EV மற்றும் MG காமெட் EV ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on VinFast vf3

explore similar கார்கள்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience