ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் பல எலக்ட்ரிக் கார்களை காட்சிக்கு வைக்கவுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம்
வின்ஃபாஸ்ட் நிறுவனம் 3-டோர் VF3 எஸ்யூவி மற்றும் VF வைல்ட் பிக்கப் டிரக் கான்செப்ட் உட்பட பலவிதமான எலக்ட்ரிக் வாகனங்களைக் காட்சிக்கு வைக்கவுள்ளது.
வின்ஃபாஸ்ட் வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் இந்தியாவில் களமிறங்கும் என்பதை சமீபத்தில் உறுதிபடுத்தியது. வியட்நாமை சேர்ந்த EV நிறுவனம் இப்போது சிறிய VF3 மற்றும் VF9 உட்பட பல எலக்ட்ரிக் வாகனங்களை ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆன்லைன் டீஸர்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி VF7 அதன் அரங்கில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு மாடல்களின் முக்கிய விவரங்களை பார்ப்போம்:
வின்ஃபாஸ்ட் VF3
VF3 சிறிய 3-டோர் எஸ்யூவி 3,190 மீட்டர் நீளம் கொண்டது. 2,075 மிமீ வீல்பேஸ் மற்றும் 191 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இது 18.64 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது 215 கி.மீ வரை செல்லக் கூடியது. இது ஒரே ஒரு ரியர் ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட 43.5 PS/110 Nm எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் பேட்டரியை 36 நிமிடங்களில் 10 முதல் 70 சதவீதம் வரை செய்யலாம்.
வின்ஃபாஸ்ட் VF9
வின்ஃபாஸ்ட் பெரிய 7-சீட்டர் VF9 எஸ்யூவி -யை ஆட்டோ நிகழ்வுக்குக் கொண்டு வருவதாகவும் வெளியிட்டது. இது 5.1 மீட்டர் நீளம் கொண்டது. 3.1 மீட்டருக்கு மேல் வீல்பேஸ் மற்றும் 183.5 மிமீ வரை கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இது 123 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இது 531 கி.மீ தூரம் வரை செல்லும். வின்ஃபாஸ்ட் 408 PS மற்றும் 620 Nm (இன்டெகிரேட்டட்) வெளியிடும் டூயல் எலக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப்பை வழங்கியுள்ளது. DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி இதன் பேட்டரியை 35 நிமிடங்களில் 10 முதல் 70 சதவீதம் வரை டாப் அப் செய்துவிட முடியும்.
மேலும் படிக்க: டொயோட்டா, லெக்ஸஸ் மற்றும் BYD கார்களை நீங்கள் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் பார்க்கலாம்
வின்ஃபாஸ்ட் VF வைல்ட்
வின்ஃபாஸ்ட் ஷோகேஸுக்காக உறுதிப்படுத்திய மற்றொரு மாடல் VF வைல்ட் ஆகும். இது 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்க சந்தையில் வெளியிடப்பட்டது. எலக்ட்ரிக் பிக்கப் டிரக் கான்செப்ட் 5.3 மீட்டர் நீளமும் 1,997 மி.மீ அகலமும் கொண்டது. அதன் படுக்கை (பேலோட் பே) பின் இருக்கைகள் தானாக கீழே மடிந்து 5 முதல் 8 அடி வரை விரிவடையும். ஒரு கான்செப்ட் ஆக இருப்பதால், அதன் இறுதி தயாரிப்புக்கு தயாராக உள்ள விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த கான்செப்ட் ஃபிக்ஸ்டு பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் டிஜிட்டல் ORVM -களை கொண்டுள்ளது.
வின்ஃபாஸ்ட் VF7
ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் வின்ஃபாஸ்ட் -ன் பெவிலியனில் VF7 எஸ்யூவி இருக்கும் என தெரிகிறது. இது 4,545 மிமீ மற்றும் 2,840 மிமீ வீல்பேஸ் கொண்ட 5-சீட்டர் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இது 59.6 kWh மற்றும் 75.3 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறுகிறது. இது 498 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது. உலகளவில் இது ஃபார்வர்டு-வீல் டிரைவ் (FWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.
வின்ஃபாஸ்ட் பற்றி ஒரு சுருக்கம்
வின்ஃபாஸ்ட் என்பது வியட்நாமை சேர்ந்த ஒரு EV நிறுவனம் ஆகும். இது 2017 ஆண்டில் செயல்படத் தொடங்கியது பின்னர் வியட்நாமில் மட்டுமல்ல மற்ற சர்வதேச சந்தைகளிலும் அதன் இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் வின்ஃபாஸ்ட் வியட்நாமில் 3 எலக்ட்ரிக் கார்கள், இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு எலக்ட்ரிக் பஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. 3 கார்களில், இரண்டு கார்கள் உலகளாவிய சந்தைகளுக்கானவை. 2022 ஆண்டில் வின்ஃபாஸ்ட் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் தனது ஷோரூம்களை திறந்தது. ஏற்கெனவே வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதன் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் கட்டத் தொடங்கியுள்ளது
வியட்நாமிய EV தயாரிப்பாளர் இந்திய சந்தைக்கு பெரிய திட்டங்களை வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.