50 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் MIT மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகம் உடன் கைகோர்த்து சுயமாக ஓட்டும் கார் தயாரிப்பில் டொயோட்டா களமிறங்குகிறது
modified on செப் 07, 2015 04:01 pm by nabeel
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
அடுத்த 5 ஆண்டுகளில் 50 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் சுயமாக ஓட்டும் காரின் தயாரிப்பில் களமிறங்க டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜப்பான் வாகன தயாரிப்பாளரான இந்நிறுவனம், ஸ்டான்ஃபோர்டு பல்கலை கழகம் மற்றும் மஸ்சசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) ஆகியவற்றுடன் இணைந்து, புத்திசாலித்தனமான சுயமாக ஓட்டும் கார்களை உருவாக்கும் முயற்சிக்கு உதவும் வகையில், ஒரு கூட்டு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவ தீர்மானித்துள்ளது. சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், காருக்கு தனது சுற்றுப்புறத்தை கண்டறிந்து கொள்ளவும், விபத்துகளை தவிர்க்கும் சில நடவடிக்கைகளை எடுக்கவும் அறிய செய்யும் ஒரு அமைப்பை உருவாக்குவதே, இந்த ஆராய்ச்சியின் குறிக்கோள் ஆகும்.
ஸ்டான்ஃபோர்டு செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடத்தின் (ஆர்ட்டிஃபிஷ்யல் இன்டலிஜென்ஸ் லேபாரட்ரி) இயக்குநர் ஃபை-ஃபை லி, ஸ்டான்ஃபோர்டு தரப்பில் இந்த ஆராய்ச்சியை வழி நடத்துவார். MIT தரப்பில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயன்ஸ் பிரிவின் பேராசிரியர் டேனியலா ரஸ், இந்த ஆராய்ச்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார். இது குறித்து ஃபை-ஃபை லி கூறுகையில், “புத்திசாலித்தனமான வாகனங்களுக்கு சாலையில் உள்ள பொருட்களை கண்டறியவும், மனிதர்கள் மற்றும் சாதனங்களின் நடத்தைகளை கண்டறியவும், பல்வேறு சூழ்நிலைகளில் பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான ஓட்டுநர் நடவடிக்கைகளை எடுக்கவும், எங்கள் அணியின் செயல்பாடு உதவிகரமாக இருக்கும்” என்றார்.
டொயோட்டாவின் மூத்த நிர்வாக அதிகாரி கியோடாகா ஐஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாங்க ஆரம்ப கட்டத்தில் புத்திசாலித்தனமான வாகனத் தொழில்நுட்பத்தில் முடுக்கம் (ஆக்சிலரேஷன்) உடன் போக்குவரத்து இறப்புகளைத் தவிர்ப்பதற்கு உதவுவதை உடனடி இலக்காக கொண்டுள்ளோம். ரோபோட்டிக்ஸ் மற்றும் மொபிலிட்டி மூலம் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்த உதவுவதையே முக்கிய இலக்காக வைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
பென்டகனில் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் ஏஜென்சியின் (DARPA) முன்னாள் திட்ட மேலாளராக இருந்த கில் பிராட்டை, இந்த பணித் திட்டத்திற்கான பொறுப்பாளராக டொயோட்டா நிறுவனம் நியமித்துள்ளது. இது குறித்து பிராட் கூறுகையில், “இந்த சிறப்பான கூட்டு நடவடிக்கையின் மூலம் மிகவும் கடினமான வாகன பயணத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பயன்படுத்தப்பட உள்ளது. ஸ்டான்ஃபோர்டு, MIT மற்றும் டொயோட்டா ஆகியோரின் திறமைகளை பகிர்ந்துக் கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்து செயல்பாட்டில், நானும் ஒரு பாகமாக இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்படும் புத்திசாலித்தனமான வாகன தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு விதமான சூழ்நிலைகளிலும் இவ்வாகனத்தை சுற்றிலும் உள்ள பொருட்களை கண்டறிதல், சுற்றுப்புற சூழ்நிலைகளை குறித்த உயர்வான முடிவுகளை எடுப்பது மற்றும் வாகனத்தில் இருப்பவர்கள், மற்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் ஆகியோரின் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பது ஆகிய பணிகளை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர்” என்றார்.
0 out of 0 found this helpful