டோக்கியோ மோட்டார் ஷோவின் பந்தயத்தில் டொயோட்டாவும் களமிறங்குகிறது
published on அக்டோபர் 13, 2015 04:16 pm by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
எல்லோருடைய கண்களையும் கவர்ந்திழுக்க தயாராக உள்ள டோக்கியோ மோட்டார் ஷோவில், பெரும்பாலான முன்னணி வாகன தயாரிப்பாளர்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்து திறன்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஜப்பான் நாட்டு கார் தயாரிப்பாளரான டொயோட்டாவும், இந்த பந்தயத்தில் களமிறங்கி உள்ளது.
இந்த ஷோவில் அரங்கேற்றமாக, தனது S-FR, FCV பிளஸ் மற்றும் கிகாய் ஆகிய மூன்று தயாரிப்புகளை டொயோட்டா காட்சிக்கு வைக்கிறது. இம்மூன்றும் தொழில்நுட்பம் மிகுந்த கார்களாக உள்ள நிலையில், இதில் FCV பெரிய அளவிலான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி வசதிகள் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் ட்ரையல்பிளேஸர் என்ற புகழை கொண்ட ஜப்பான் தயாரிப்பாளரான இந்நிறுவனம், கடந்தாண்டு விற்பனைக்கு வெளியிட்ட மிராய் ஹைட்ரஜன் ஃப்யூயல்-செல் வெஹிக்கிளின் தொடர்ச்சியாக, FCV பிளஸை காட்சிக்கு வைக்கிறது. இந்த காரில் ஒரு ஹைட்ரஜன் டேங்க் இருப்பதை தவிர, வெளிப்புறத்தில் சேமிக்கப்பட்ட ஹைட்ரஜனில் இருந்து மின்னூட்டத்தை தயாரிக்கும் திறனை இந்த கார் கொண்டுள்ளது. இந்த காரை ஒரு போக்குவரத்து முறையாக பயன்படுத்தப்படாத நிலையில், தனது சுற்றுப்புறத்திற்கு ஏற்ற ஆற்றலை சமுதாயத்துடன் சேர்ந்து பயன்படுத்திக் கொள்ளும். கார்களின் சாதாரண செயல்பாடுகளையும் மிஞ்சும் வகையில், இக்காரில் உள்ள ஃப்யூயல்-செல் ஸ்டாக் கூட, மின்னூட்டத்தை தயாரிக்க வல்லது. கடந்த காலங்களை போலவே, தனது தயாரிப்பில் புதுமையை புகுத்தி அதன் எல்லைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இந்நிறுவனம் கருதுகிறது.
படித்து பாருங்கள்: டோக்கியோ மோட்டார் ஷோவில் தடம் பதிக்க மாஸ்டா தயார்
ஒரு ஸ்போர்ட்ஸ் காரான S-FR, ரேர்-வீல்-டிரைவ் கார் விரும்பிகளை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. உகந்த எடை பகிர்ந்தளிப்பு (ஆப்டிமல் வெயிட் டிஸ்டிரிப்யூஷன்) மற்றும் இன்டிபெண்டேன்டு சஸ்பென்ஸன் ஆகியவை சேர்ந்து, இந்த காரின் இயக்கத்திற்கு பொறுப்புள்ள கூடுதல் இணைப்புகளாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கான பரிந்துரை: டோக்கியோ மோட்டார் ஷோ 2015ல் இக்னிஷை, மாருதி காட்சிக்கு வைக்கிறது
கிகாய் தொழில்நுட்பம், தனது ஆக்கக்கூறுகளை வெளிப்படையாக காட்டுவதோடு, ஜன்னல் கண்ணாடிகளின் வழியாக தெரியும் அப்பர் கன்ட்ரோல் ஆர்மின் இயக்கங்கள் மூலம் சாலையின் தொடர்புகளை உணர்ந்து கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. முக்கோண வடிவிலான இறுக்கை அமைப்பின்படி, டிரைவர் நடுவிலும், பின்புறத்தில் 2 பயணிகளையும் கொண்டிருக்கும்.
தொடர்புடைய செய்தி: டோக்கியோ மோட்டார் ஷோவில் சுசுகி நெக்ஸ்ட் 100