• English
  • Login / Register

மூன்றாவது டொயோடா ஈடியோஸ் மோட்டார் ரேசிங் அறிவிக்கப்பட்டுள்ளது.

published on செப் 25, 2015 04:53 pm by konark

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மும்பை: எடியோஸ் மோட்டார் ரேசிங் கார் பந்தயங்களின் இரு வெற்றிகரமான சீசன்கள் முடிவுற்ற நிலையில் , டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனம் அதன் தொடர்ச்சியாக மூன்றாவது EMR கோப்பைக்கான போட்டிகளை வருகிற செப்டம்பர்  26 மற்றும் 27 ஆம் தேதிகளில் புத் பன்னாட்டு சர்க்யூட் அரங்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது..

டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்கெடிங் பிரிவின் இயக்குனர் மற்றும் மூத்த துணை தலைவரான திரு, ராஜா இன்று நொய்டாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பின்வருமாறு கூறினார். “ இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எடியோஸ் மோட்டார் ரேசிங் 2015  பந்தயங்களை நடத்துவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். இந்த EMR கோப்பைக்கான போட்டி இளைய தலைமுறை புதிய போட்டியாளர்களுக்கு இத்தகைய போட்டிகளில் பங்கேற்க   வாய்ப்பளிப்பது மட்டுமின்றி இந்தியாவில் நடக்கும் வேறு பல பெரிய பந்தயங்களில் முழுத்  திறமையுடன் கலந்துக் கொள்ள அவர்களை தயார் செய்கிறது.  தங்களது திறமைகளை மேம்படுத்தி சாதிக்க துடிக்கும் இளம் போட்டியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற சீரிய  நோக்கத்துடன்  தான் நாங்கள் இந்த போட்டியை நடத்துகிறோம். இந்த சீசன் பந்தயங்கள் மிகச் சிறப்பாக அமையும், அதிலும் நாடு முழுக்க இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல திறமையான போட்டியாளர்கள் தங்கள் திறமையை அற்புதமாக வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்.” 

12 புதிய ஓட்டுனர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் முழு விவரம் பின் வருமாறு  -  ஹிஷம் E.K.P , ஹஷிம்  E.K.P, சுசிந்திர கௌடா, தீபக் P,  கார்த்திக் கோஞ்சடி, அர்ஜுன்.S, சையத் நஸீர், மேஸான் அனீஸ், வைபவ் பார்கர், வினோத் கோபால்சாமி, அபின் தாமஸ், உத்சவ் ஷா, தபேஷ்வர் சாஜித், விவேக் ராமச்சந்தர், மற்றும் ஜக்ஜோத் சிங்.

ஈடியோஸ் மோட்டார் ரேசிங் தொடர் ஒரு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட  கார்களைக் கொண்டு நடத்தப்படும் போட்டியின் அடிப்படையை பின்பற்றி நடத்தப்படுகிறது.  பந்தயங்களில் கலந்துக்கொள்ளும் கார்களை மாற்றியமைக்க தேவையான   விசேஷ பாகங்களை TRD ( டொயோடா ரேசிங் டெவெலப்மென்ட், ஜப்பான் ) நிறுவனம் வழங்கி போட்டிக்கு தேவையான அதிகபட்ச செயல்திறனையும் உயர்மட்ட பாதுகாப்பு தரத்தையும் உறுதிபடுத்துகிறது. 

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience