டாடாவின் புதிய ஹேட்ச்சின் பெயர் ஸிகா
published on நவ 25, 2015 11:36 am by arun
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
மும்பை:
டாடாவின் புதிய சிறிய ஹேட்ச்சிற்கு ஒருவழியாக பெயரிடப்பட்டுள்ளது! இந்த பிராஜெக்ட்டை உள்ளான முறையில் கைட் என்று அழைத்தாலும், இந்த சிறிய ஹேட்ச்சிற்கு அதிகாரபூர்வமாக இனி டாடா ஸிகா என்று அழைக்கப்படும்.
கடந்த ஜூலை மாதம், பிரபல F1 டிரைவரான நரேன் கார்த்திகேயன் இந்த ஸிகாவை இயக்க, அதன் கடைசிக்கட்ட சோதனையில் ஈடுபட்ட போது, நாங்கள் வேவுப் பார்க்க முடிந்தது. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி இந்த ஹேட்ச்சின் சர்வதேச அளவிலான அறிமுகத்தை நடத்த டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த கைட் கார், நானோ மற்றும் போல்ட் ஆகிய கார்களின் அளவுகளுக்கு இடைப்பட்ட அளவில் காணப்படலாம். ஸிகாவில் ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் ஆகிய இரு வகையான மோட்டார்களை பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள ஒரு புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மூலம் 84 bhp மற்றும் 110Nm முடுக்குவிசையை வெளியிட ஸிகாவிற்கு உதவுகிறது. டீசல் மில்லில் உள்ள 1.0 லிட்டர் யூனிட் (தற்போதைய இன்டிகாவிற்கு ஆற்றலை அளிக்கும் பழைய 1.4 மோட்டாரை சார்ந்தது) மூலம் 67 bhp மற்றும் 140Nm வெளியீடை பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு காம்பேக்ட் சேடன் பிளாட்பாமில் அமையப் பெறும் என்பதால், 4 மீட்டர் அளவின் கீழ் எளிதில் சேர்ந்துக் கொள்ளும். அதே நேரத்தில் இதில் உள்ள என்ஜின்கள், இந்த சேடனுக்கு தகுந்த ஆற்றலை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸிகாவின் பேஸ் பெட்ரோல் வகையின் விலை ஏறக்குறைய ரூ.3.5 லட்சம் விலை நிர்ணயத்தில் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த விலை வரிசையில் உள்ள பல நிறுவப்பட்ட ஹேட்ச்களாக வேகனார், கிராண்ட் i10 மற்றும் சிலிரியோ ஆகிய கார்களுக்கு போட்டியாக அமையலாம். அதன் விலைக்கு ஏற்ப ஒரு சிறப்பான இயக்கத்தை அளித்து, ஸிகா போட்டியாக அமைய வேண்டும்.
இதையும் படியுங்கள்