டாடா கைட்டின் அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச் வெளியிடப்பட்டது
published on நவ 16, 2015 12:57 pm by nabeel
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடாவின் கைட் ஹாட்ச் பேக் காருக்கான டீசர் வெளியிட்ட சிறிது நாட்களுக்குப் பின்னர், டாடா நிறுவனம் இதன் அதிகாரபூர்வ ஸ்கெட்ச்சை வெளியிட்டுள்ளது. ஹாட்ச்பேக் மற்றும் சேடான் என்ற இரு விதமான பிரிவுகளுக்கு ஏற்றார்போல தயாரிக்கப்பட்டு, இரண்டு மாடல்களிலும் இந்த கார் வெளியிடப்பட்டு, தற்போது சந்தையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் செலேரியோ, வேகன் R, செவ்ரோலெட் பீட் போன்ற பல கார்களுடன் போட்டிக் களத்தில் இறங்கும். ஆனால், தனிச்சிறப்புடைய இந்த காருக்கு சரியான போட்டி என்று வேறு எந்த காரின் பெயரையும் குறிப்பிட முடியாது, ஏனெனில், இது ஒரு தனிப் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அடக்க விலை, ரூ. 3.5 லட்சத்தில் இருந்து ரூ. 5.5 லட்சங்கள் வரை டாடா நிறுவனம் நிர்ணயிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் உள்ள டாடாவின் வடிவமைப்பு ஸ்டூடியோக்கள் இந்த காரை வடிவமைத்துள்ளன. உலகெங்கிலும் இந்த கார் விற்பனை செய்யப்படும். 2016 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஹாட்ச்பேக் கார் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போது டீசர் மற்றும் ஸ்கெட்ச்கள் வெளியானதை வைத்துப் பார்க்கும் போது, டாடா நிறுவனம் எதிர்பார்த்ததை விட சற்று முன்னரே இதனை அறிமுகப்படுத்தி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் என்று நாம் யூகிக்கிறோம்.
கைட் மாடல், இண்டிகாவில் உபயோகப்படுத்தப்பட்ட XO தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அநேகமாக, டாடாவின் குஜராத் ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படும். விளம்பர படத்தில் வரும் இந்த காரின் பின்புற விளக்கு பகுதி வித்யாசமாகவும் அனைவரும் விரும்பும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புற விளக்குகளுடன் ப்ரேக் லைட்டும் இணைந்து, தெளிவான லென்ஸ் பொருத்தப்பட்டு பளீரென்று எரியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முன்புற விளக்கு அமைப்பு டிவின்-பாட் யூனிட் என்று சொல்லப்படும் தனித்தனி ஹெட் லாம்ப் முறையில் அமைக்கப்பட்டு, இண்டிக்கேட்டர் தனியாக பொருத்தப்பட்டு உள்ளது. முன்புற கிரில் தற்போதுள்ள மாடல்களில் வருவது போலவே இருந்தாலும், அதிக வளைவுகள் கொண்டு மெருகேற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளிவந்துள்ள கைட்டின் டீசரில் டாடாவின் சர்வதேச தூதுவரான லியோனல் மெஸ்ஸி இடம்பெற்றுள்ளார். டாடாவின் உலகளாவிய புகழை அதிகரிக்க, டாடாவின் ‘மேட் ஆஃப் க்ரேட்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்த டீசர் உலகெங்கிலும் வெளியிடப்படும்.
மேலும் படிக்க
0 out of 0 found this helpful