• English
    • Login / Register

    டாடா ஹாரியரின் தானியங்கி அமைப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டன

    டாடா ஹெரியர் 2019-2023 க்காக பிப்ரவரி 07, 2020 02:09 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 31 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    டாட்டா விரைவில் ஹாரியரின் புதிய உயர்-தனிச்சிறப்பு, சிறப்பம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

    Tata Harrier Automatic Key Details Revealed

    • புதிய எக்ஸ்‌இசட்+ வகையில் கைமுறை மற்றும் தானியங்கி ஆகிய இரண்டு செலுத்துதல் முறையையும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

    • வெளிப்புற காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளி திறப்பு மேற்கூரை, மின்சார அமைப்பிலான ஓட்டுநர் இருக்கை, பின்புறக் காட்சியை காணக்கூடிய  கண்ணாடியின் தானியங்கி மாறுதல் அமைப்பு போன்ற கூடுதல் அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

    • பிஎஸ்6 அலகில் இருந்தாலும் அதே 2.0லிட்டர் டீசல் இயந்திரத்துடன் வழங்கப்படும்.

    • இது பிஎஸ்4 மாதிரியைக் காட்டிலும் 30பிஎஸ் அதிக ஆற்றலை உருவாக்கும்.

    • தற்போதைய உயர்-சிறப்பம்சம் பொருந்திய எக்ஸ்இசட் வகையுடன் ஒப்பிடும்போது கைமுறைக்கு குறைந்தபட்சம் ரூபாய் 1 லட்சத்துக்கு அதிகமாக விலை இருக்க வாய்ப்புள்ளது.

     ஓரிரு சோதனை ஓட்ட காட்சிகள் சமீபத்தில் ஆன்லைனில் வெளிவந்தன, இது ஹாரியர் ஏடியின் உட்புற அமைவுக் குறித்த ஒரு காட்சியைக் கொடுத்தது. இப்போது, டாடா இரண்டு புதிய முன் காட்சிகளின் எஸ்யூவியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது, அதோடு முக்கிய விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

    Tata Harrier Automatic Key Details Revealed

    டாடா தானியங்கி செலுத்துதல் விருப்பத்துடன் ஹாரியரின் புதிய, உயர்-சிறப்பம்ச வகையான (எக்ஸ்இசட் +) ஐ வழங்க வாய்ப்புள்ளது. ஒரு கைமுறை பற்சக்கரபெட்டியுடன் இந்த புதிய வகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் தானியங்கி மாறுதலுடன் கூடிய  ஐஆர்விஎம் (பின்பக்க காட்சி கண்ணாடியின் உள்ளே) மற்றும் மின்சார அமைப்பிலான ஓட்டுநர் இருக்கை மற்றும் வெளிப்புற காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளி திறப்பு மேற்கூரை ஆகியவை இடம் பெறும் என்று சமீபத்திய முன்காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

    Tata Harrier Automatic Key Details Revealed

    இந்த சிறப்பம்சங்களைத் தவிர, கருப்பு மேற்கூரை, புதிய உலோக சக்கரங்கள் (18 அங்குலங்கள்) மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸான் ஃபேஸ்லிப்டில் காணப்பட்ட இணைய அணுகல் கார் தொழில்நுட்பம் போன்றவற்றுடன் புதிய சிவப்புவண்ணத்தில் வெளிப்புற நிறத்திண்மையை இது பெறும். மேலும் என்னவென்றால், அதே மூன்று கம்பிகளுடைய திசைதிருப்பி, 8.8 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, பழுப்புநிற தோலினால் ஆன இருக்கை அமைவு, ஓட்டுநர் இயக்கக்கூடிய முறை தேர்வு, மற்றும் இழுக்கக்கூடிய கைத்தடைக்கருவி அமைப்பு ஆகியவற்றுடன் இது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Tata Harrier Automatic Key Details Revealed

    டாடா பிஎஸ் 6-இணக்கமான 2.0-லிட்டர் டீசல் இயந்திரத்துடன் ஹாரியர் தானியங்கியை வழங்கும். இது ஹூண்டாயில் இருந்து பெறப்பட்ட 6-வேக முறுக்கு திறன் மாற்றியுடன் பொருத்தப்பட்டு இருக்கும். சமீபத்திய முன்காட்சியைப் பொறுத்தவரை, ஆற்றல் உற்பத்தி 140பி‌எஸ் இலிருந்து 170பி‌எஸ் வரை உயரும் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இது எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் போல மாதிரிக்கு இணையான ஆற்றலை உருவாக்கும். எனினும், இந்த எஸ்யூவி முந்தைய முறுக்கு திறனைத்(350 என்எம்) தொடர்ந்து உற்பத்தி செய்யும்.

    Tata Harrier

    குறைந்தபட்சமாக கைமுறை வகைக்கான ஹாரியரின் தற்போதைய உயர்-சிறப்பம்ச எக்ஸ்இசட் வகையுடன் ஒப்பிடும்போது ரூபாய் 1 லட்சத்துக்கும் அதிகமான விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 டாடா ஹாரியர் ஆனது எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ், க்யா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டாவின் தற்போதைய உயர்-சிறப்பம்ச வகைகள் போன்ற தற்போதுள்ள போட்டி கார்களுடன் தனது போட்டியை தொடரும். டாடா வரவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் இதை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.

    மேலும் படிக்க: டாடா ஹாரியர் டீசல்

    was this article helpful ?

    Write your Comment on Tata ஹெரியர் 2019-2023

    explore மேலும் on டாடா ஹெரியர் 2019-2023

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience