மெர்சிடிஸ்-மேபேச் எஸ்600: இந்தாண்டு இந்தியாவில் அறிமுகமாக கூடுதல் வாய்ப்பு
published on ஆகஸ்ட் 14, 2015 06:14 pm by manish
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: கடந்த 2 வார கால இடைவெளியில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எஸ் கிளாஸை சேர்ந்த 3 புதிய வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதை வைத்து பார்த்தால், இந்தியாவிற்கு கொண்டு வர மெர்சிடிஸிடம் இன்னும் நிறைய வாகனங்கள் இருப்பது போல தெரிகிறது. மேலும் எஸ் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு வாகனம், வரும் வாரத்தில் வர உள்ளது. அது மெர்சிடிஸ் மேபேச் எஸ்600 ஆக கூட இருக்கலாம். ஆடம்பர சேடனில் முன்னணி வகிக்கும் மெர்சிடிஸ்-மேபேச், கடந்த 2014 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆட்டோ ஷோவில் வெளி உலகிற்கு காட்டப்பட்டது.
7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைந்த 6.0 லிட்டர் பைடர்போ V12 பெட்ரோல் என்ஜின் கொண்டு இயங்கும் இந்த கார், இறக்குமதிக்கான அனுமதிக்காக காத்திருக்கிறது. இந்த காரில் இருந்து 523 hp @ 4,900-5,300 rpm மற்றும் 830 Nm டார்க் @1,900-4,000 rpm பெறுவதன் மூலம் 5 நொடிகளில் 0-வில் இருந்து மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்ட முடிகிறது. எரிபொருள் சிக்கனத்தை பொறுத்த வரை, நகர எல்லைக்குள் லிட்டருக்கு 5.53 கி.மீட்டரும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 8.5 கி.மீ என அதிகரிப்பதாக எஸ்600-யை குறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழக்கமான எஸ் கிளாஸ் கார்களுடன் ஒப்பிடும் போது, மேபேச் எஸ்600-ன் நீளம் 207மிமி அதிகமாகவும், வீல்பேஸ் பரிணாமம் 200மிமி நீளமாகவும் காணப்படுகிறது. காரின் மொத்த அளவான 5,453 மிமி-யில் வீல்பேஸ் 3,365 மிமி கொண்டுள்ளது.
காரின் உட்பகுதியை பொறுத்த வரை, சுகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான எஸ்63 ஏஎம்ஜி சேடனில் இருந்தது போலவே, மெர்சிடிஸ்-மேபேச் 600-லும் மேஜிக் பாடி கன்ட்ரோல் சஸ்பென்ஸன் காணப்படுகிறது. மேலும் பனோராமிக் ஸ்லைடிங் ரூஃப், பவர் ஆப்ரேட்டிவ் சன் ஷேட்ஸ், ஹீட்டடு வின்டுஷில்டு, ஹெட்ஸ்-ஆப் டிஸ்ப்ளே, LED இன்டலிஜன்ட் லைட்டிக் சிஸ்டம் மற்றும் மேஜிக் ஸ்கை கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவற்றை உட்கொண்டுள்ள இந்த காரில், வாடிக்கையாளர் ஒரு பட்டனை அழுத்தினால் காரின் மேற்கூரையில் மற்றும் உட்புறத்தின் களையை மாற்றி அமைத்துக் கொள்ளும்.
பாதுகாப்பை பொறுத்த வரை, முன்புறம், பக்கம், திரை மற்றும் மார்பு பகுதிக்கு ஏற்ற ஏர்பேக்கள் உள்ளன. பின்புறத்தில் உள்ள பயணிக்கு, சீட் பெல்ட் ஏர்பேக் மற்றும் இருக்கை மெத்தை ஏர்பேக்கள் ஆகியவை உள்ளன. மேலும் ப்ரீ-சேப் பிரேக் உடன் கூடிய பாதசாரிகள் அங்கீகாரம், டிஸ்ட்ரோனிக் பிளஸ் உடன் ஸ்டீரிங் அசிஸ்ட், BAS பிளஸ் உடன் கிராஸ் டிராஃபிக் அசிஸ்ட், ஆக்டிவ் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் ஹைபீம் அசிஸ்ட் பிளஸ் மற்றும் நைட் வ்யூ அசிஸ்ட் பிளஸ் ஆகிய கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை மெர்சிடிஸ்-மேபேச் எஸ்600 வழங்குகிறது.