• login / register

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது கன்வர்டிபல் டான் காரை உலகம் முழுதும் அறிமுகம் செய்தது ! எவ்வளவு கம்பீரமான தோற்றம்?

வெளியிடப்பட்டது மீது sep 09, 2015 01:36 pm இதனால் manish

  • 10 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்: ரோல்ஸ் ராய்ஸ் தன்னுடைய புதிய டான் கார்களை நேற்று அறிமுகம் செய்தது . உலகளாவிய இந்த முதல் ஆன்லைன் அறிமுக நிகழ்ச்சி இந்த பாரம்பரியமிக்க கார் தயாரிப்பாளரின் ஒரு புதிய முயற்சியாகும். இணையதளங்களில் உலா வந்த இந்த காரின் புகைப்படங்களிலும் நாம் வேவு பார்த்த சில படங்களிலும் இருந்தது போன்றே அத்தனை அம்சங்களுடன் நிஜத்திலும் இந்த டான் கார் அம்சமாக காட்சியளிக்கிறது. மென்மையான கூரை பகுதிக்கும் அதில் விழும் மழை துளிக்கும் ஒரு அழகான காதல் தொடர்பு இருப்பதாகவே ரோல்ஸ் ராய்ஸ் நம்புகிறது. அதனால் தானோ என்னவோ இந்த காருக்கு மென்மையான கூரை அமைப்பை தேர்ந்தெடுத்து உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பிரபலமான ரேய்த் கூபே கார்களின் இன்னொரு மேல்கூரை இல்லா வடிவம் தான் இந்த டான் கார்கள் எனலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் டான் (DAWN) என்ற பெயரை 1949 ஆம் ஆண்டில் முதன் முதலில் பயன்படுத்தியது. முதலில் பயன்படுத்தப்பட்ட போது ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் டான் என்ற மாடல் உட்பட இந்த பெயர் கொண்ட மாடல்கள் 1954 ஆம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தன. ரேய்த் கார்களைப் போன்ற அதே வீல் பேஸ் மற்றும் இரண்டு கதவு வடிவமைப்புடன் தான் இந்த டான் கார்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்புற வடிவமைப்பும், நேர்த்தியாக கீழ்நோக்கி சரியும் பின்பக்க வடிவமைப்பும் கோஸ்ட் மாடல் கார்களை நினைவூட்டுகிறது.

இஞ்சின் கூட ரேய்த் கார்களில் பயன்படுத்தப்படும் இரட்டை - டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 624bhp என்ற அளவில் சக்தியை வெளியிடக்கூடிய 6.6 லிட்டர் V12  என்ஜின் தான் இந்த புதிய டான் கார்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. என்ஜின் அடிப்படையில் ரோல்ஸ் ராய்ஸ் டான் கார்கள் லேசான மாற்றம் செய்யப்பட்ட ரேய்த் கார்களின் இன்னொரு பிரதி என்றே வாதிக்க முடியும். இந்த பெரிய V12  என்ஜின் தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் "மேண்டரின்" உட்புற வடிவமைப்புடன் "நள்ளிரவு நீல கல்" நிறத்திலான வண்ண கலவையுடன் மிக நேரடியாக காட்சியளிக்கிறது. இந்த மென்மையான மேல் கூரை கார் மணிக்கு 50km வேகத்தில் செல்லும் போது 22 நொடிகளுக்குள் எந்த வித சத்தமும் இன்றி உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர எழுத்துக்களை நேவிகேஷன் அமைப்பிற்குள் டைப் செய்ய ஏதுவாக எழுத்துக்களை புரிந்து கொள்ளும் நவீன டச்பேட் ஒன்றும் உட்புறத்தில் பார்க்க முடிகிறது.

இந்த அழகு படைப்பை சொந்தமாக்கிக் கொள்ள துடிக்கும் வெகு சில அறிய மனிதரில் நீங்களும் ஒருவரா ? அப்படி என்றால் உங்களுக்கு நிச்சயம் இப்போதைக்கு மிஞ்சுவது ஏமாற்றமே! காரணம் , இந்த முதல் வருடத்திற்கான டான் கார்கள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இருந்தும் இதனுடைய விநியோகம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும் போது இந்த அழகு தேரின் உலாவை சாலைகளில் பார்த்து ரசிக்கலாம்.

என்ஜின்: 6.6 லிட்டர் இரட்டை - டர்போ சார்ஜ் செய்த V12

குதிரை சக்தி : 563bhp

டார்க் : 780Nm

வேகம் : 0 - 100kmph 4.9  வினாடிகளில்

அதிகபட்ச வேகம் : 250kph  ( லிமிடட்)

ட்ரேன்ஸ்மிஷன்: 8 - வேக தானியங்கி

அளவுகள் : 5285mm x 1947mm x 1502mm

எடை: 2560kg

ட்ரன்க் கொள்ளளவு : 244  லிட்டர்கள் ( கூரை திறந்த நிலையில்) 295  லிட்டர்கள் ( கூரை மூடிய நிலையில் ) 

வெளியிட்டவர்

Write your கருத்தை

Read Full News
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?