இந்தியாவில் V12 எஞ்சின்கள் உடன் கூடிய மெர்சிடீஸ் பென்ஸ் AMG வரிசை கார்கள் அறிமுகமாகாது.
manish ஆல் ஆகஸ்ட் 31, 2015 11:15 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
மெர்சிடீஸ் பென்ஸ், அதிலும் குறிப்பாக மெர்சிடீஸ் பென்ஸ் AMG வரிசை கார்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பரவலாக இந்தியா முழுமையிலும் 43% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வருட இறுதிக்குள் இன்னும் 5 மாடல் கார்களை அறிமுகம் செய்ய பென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் எந்த ஒரு மாடலும் அதி சக்ரத்தி வாய்ந்த V12 எஞ்சின்களுடன் வெளியிடப்பட மாட்டாது என்று பென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிக சமீபத்திய வெளியீடான S 63 செடான் கார்கள் 5.5 லிட்டர் இரட்டை டர்போ V8 என்ஜின் பொருத்தப்பட்டு தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 9 சொகுசு AMG வரிசை செடான் கார்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
எபெர்ஹார்ட் கேர்ன், மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ பேசுகையில் பின்வருமாறு கூறினார். “ இப்போதைக்கு AMG V12 இன்ஜின்களை இந்தியாவுக்குள் கொண்டுவரும் திட்டம் ஏதும் எங்களுக்கு இல்லை. S 63 செடான் கார்கலில் பொருத்தப்பட்டுள்ள V8எஞ்சின்கள் எங்களுடைய பல உயர்தர கார்களுக்கு மிக அற்புதமாக பொருந்துகிறது. MFA தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள AMG S 63 மற்றும் ஏனைய AMG வரிசை கார்களில் எண்கள் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறோம். அது மட்டுமின்றி இந்திய சாலைகளுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது என்பது எண்கள் கருத்து.”
மற்ற உலக சந்தைகளில் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் 630 பிஎச்பி அளவு சக்தியை வெளியிடக்கூடிய 6.0 லிட்டர் V12 என்ஜின்களை G 65, SL 65 ரோட்ஸ்டர், S 65 செடான் மற்றும் S 65 கூபே கார்களில் பயன்படுத்துகிறது. V12 AMG மாடல் எஞ்சின்களுக்கு அதிநவீன மற்றும் அதிக முதலீட்டுடன் கூடிய விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் கட்டமைப்பு தேவை படுகிறது. அது AMG வரிசை கார்களின் விற்பனை திருப்திகரமாக இல்லாத போது சாத்தியப்படாது. இந்த V12 என்ஜின்களின் அதிவேக சக்திக்கு ஈடுகொடுக்கும் சாலைகளோ அல்லது அதற்கான சரியான சந்தையோ இன்னும் இந்தியாவில் உருவாகவில்லை என்றே மெர்சிடீஸ் பென்ஸ் நிருவனம் நினைக்கிறது.
வளர்ந்து வரும் சொகுசு கார்கள் சந்தையை ஆக்ரமிக்க ஆடி மற்றும் பிஎம்டபல்யு நிறுவனங்களும் வரிந்துகட்டி கொண்டு பென்ஸ் நிறுவனத்தின் வழியை பின்பற்ற தொடங்கியுள்ளது. இதை உறுதி படுத்தும் விதமாக ஆடி நிறுவனம் பத்து புதிய மாடல்களையும், பிஎம்டபல்யு நிறுவனம் 15 புத்தம் புதிய மாடல்களையும் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியிட முடிவு செய்துள்ளன.
V12 என்ஜின்கள்இந்தியாவில் இல்லை என்ற நிலையில் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் AMG வரிசையில் C 63 S என்ற காரை செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியிட உள்ளது. அதை தொடர்ந்து C 450 AMG கார்களும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவைகளை தவிர மிகவும் பிரபலமான AMG GT ஸ்போர்ட்ஸ் காரும் இந்த வருட இறுதிக்குள் வெளியிடப்படும்.