சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் மீண்டும் வரும் மிட்சுபிஷி நிறுவனம்… ஆனால் நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல

published on பிப்ரவரி 20, 2024 05:24 pm by rohit

ஜப்பானிய பிராண்ட் ஆன மிட்சுபிஷி, இந்தியாவின் மிகப் பெரிய மல்டி பிராண்ட் டீலர்களில் ஒன்றான TVS VMS உடன் கூட்டு சேர்ந்துள்ளது

2020 முதல் பாதியில் BS6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து இந்திய பயணிகள் கார் சந்தையில் இருந்து மிட்சுபிஷி வெளியேறியது. தற்போது 2024 ஆம் ஆண்டில் இந்திய கார் சந்தையில் மீண்டும் நுழைவதாக இப்போது அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மல்டி பிராண்ட் டீலர்களில் ஒன்றான டிவிஎஸ் வெஹிகிள் மொபிலிட்டி சொல்யூஷன் (TVS VMS) -ல் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை மிட்சுபிஷி பெற்றுள்ளது. ரெனால்ட், மஹிந்திரா மற்றும் ஹோண்டா போன்ற பல கார் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படும் வாகனங்களின் விநியோகத்தை TVS VMS நிர்வகிக்கிறது

ஒப்பந்தத்தின் விவரங்கள்

பல ஆன்லைன் அறிக்கைகளின்படி, மிட்சுபிஷி பல்லாயிரக்கணக்கான அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீட்டை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைகளை முடிப்பது சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகளின் ஒப்புதலுக்கு உட்பட்டது, அதைத் தொடர்ந்து மிட்சுபிஷி தனது ஊழியர்களை டீலர்களுக்கு அனுப்பும் என்று கூறப்படுகிறது. இந்த முதலீடு இந்தியாவில் ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களுக்கான விரிவான மொபிலிட்டி தீர்வுகளை முன்னேற்றுவதில் மிட்சுபிஷியின் திட்டத்தை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் மல்டி-பிராண்ட் சேல்ஸ் மட்டுமல்ல, வாடகை மற்றும் பிற வாகன முயற்சிகளையும் உள்ளடக்கியது. TVS VMS மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பரந்த வாடிக்கையாளர் தளத்தை மேம்படுத்துவதன் மூலம் இது நிறைவேற்றப்படும்.

மிட்சுபிஷி கார்கள் திரும்பி வருமா ?

மிட்சுபிஷி இந்திய வாகனத் துறையில் செயலில் உள்ள நிலைக்குத் திரும்பினாலும், கார்களை இந்தியாவுக்குத் திரும்ப கொண்டுவருவதற்கான உறுதியான திட்டங்கள் எதுவும் இப்போதைக்கு அதனிடம் இல்லை. இந்த புதிய மல்டி-பிராண்ட் டீலர்ஷிப்களுடன் மிட்சுபிஷி தனது சொந்த கார்களை இந்தியாவிற்கு கொண்டு முடிவு தேர்வுசெய்தால், EV -களையும் கொண்டு வருவதில் கவனம் செலுத்தக்கூடும். எனவே, இப்போது பஜேரோ ஸ்போர்ட் திரும்புவதற்கு நாம் காத்திருக்க வேண்டாம்.

ஜப்பானிய கார் பிராண்டுகள் மற்றும் மாடல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மிட்சுபிஷி மேற்கொள்ளும்.மேலும் ஜப்பானிய கார் உற்பத்தியாளர்களின் துணை பிராண்டுகள் இந்தியாவில் ஸ்டோர்களை அமைக்கும் வாய்ப்பை உருவாக்க இந்த புதிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது. இதன் பொருள், இந்தியாவில் மஸ்டா மற்றும் இன்பினிட்டி (நிஸானின் பிரீமியம் சப் பிராண்ட்) போன்றவற்றின் கார்களை நாம் பார்க்க முடியும்.

இந்த மிட்சுபிஷி பார்ட்னர்ஷிப் மூலம் இந்தியாவில் எந்தெந்த ஜப்பானிய கார்களை பார்க்க விரும்புகிறீர்கள்? கமெண்டில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க: இந்தியாவில் டிரேட்மார்க்கிற்காக பதிவு செய்யப்பட்ட Ford Mustang Mach-e Electric எஸ்யூவி… இறுதியாக இந்தியாவில் வெளியாகவுள்ளதா ?

r
வெளியிட்டவர்

rohit

  • 21 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

கம்மெண்ட்டை இட
2 கருத்துகள்
S
s hussain
May 2, 2024, 1:36:53 PM

Mitsubishi motors is a very good brand & it should come back to India, previously they have come with wrong partner HINDUSTAN MOTORS they are hopeless, sold the ambassador model without any charges

R
rohit r jagiasi
Mar 9, 2024, 3:01:42 PM

Would love to see Mitsubishi Pajero, Outlander & Lancer

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை