சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனம் ஜப்பானில் 3.7 லட்சம் வாகனங்களை திரும்ப அழைத்துள்ளது.

sumit ஆல் பிப்ரவரி 19, 2016 04:48 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

Mitsubishi Motors

இரண்டு தினங்களுக்கு முன்னர் டொயோடா நிறுவனம் சீட் பெல்ட் குறைபாடு காரணமாக தனது 2.9 மில்லியன் வாகனங்களை உலகம் முழுமையிலும் இருந்து திரும்ப அழைத்திருந்தது. இப்போது மிட்சுபிஷி நிறுவனத்தினர் தங்களது ஜப்பானில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் 3.7 வாகனங்களை திரும்ப அழைத்துள்ளனர் . வலப்பக்கம் இன்டிகேடர் ஸ்விட்ச் சரிவர இயங்காததே இதற்கு காரணம் என்று மிட்சுபிஷி கூறியுள்ளது.

2005 முதல் 2015 வரை தயாரிக்கப்பட்ட அவுட்லேன்டர் , பெஜேரோ மற்றும் கேளன்ட் மாடல் வாகனங்களில் இந்த குறைபாடு உள்ளது. இவை தவிர மிட்சுபிஷி நிறுவனத்தின் மற்றுமொரு MPV வாகனமான டெலிகா வாகனங்களும் இந்த குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் குறிபிட்டுள்ள இந்த கார்களில் பெஜேரோ மட்டும் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் உள்ள பெஜேரோ கார்களில் இந்த சிக்கல் தென்படவில்லை.

இரண்டு தினங்களுக்கு முன்னர் டொயோடா சீட் பெல்ட் குறைபாடு காரணமாக டொயோடா நிறுவனம் தனது 2.9 மில்லியன் வாகனங்களை உலகம் முழுமையிலும் இருந்து திரும்ப அழைத்திருந்தது . பின்புற இருக்கையில் இணைக்கப்பட்டுள்ள சீட் பெல்ட் விபத்து சமயத்தில் அறுந்து பயணிகளுக்கு காயம் ஏற்பட காரணமாகி விடுமோ என்ற கவலையில் டொயோடா தனது வாகனங்களை திரும்ப அழைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள் தங்களது டீலர்கள் இடத்திலேயே இந்த குறைபாட்டை சரி செய்து விட முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னரும் ஒரு முறை டொயோடா நிறுவனம் காற்றுப்பைகளில் (ஏயர்பேக்) உள்ள குறைபாடு காரணமாக கணிசமான எண்ணிக்கையில் வாகனங்களை திரும்ப பெற்றது நினைவிருக்கலாம். அப்போது தங்களுடைய காற்றுப்பைகள் சப்ளையர் தகடா மீது டொயோடா குற்றம் சாட்டியது.

Pajero Sport

சமீப காலங்களில் , தங்கள் வாகனங்களில் பாதுகாப்பு சம்மந்தமான அம்சங்களை இணைப்பதில் வாகன தயாரிப்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. உலகம் முழுதும் பல கோர விபத்துக்கள் நடைபெற்று பலர் உயிர் இழப்பதாலும் , அத்தகைய தருணங்களில் சம்மந்தப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்குகள் போடப்படுவதாலும் இந்நிறுவனங்கள் இப்போது மிகவும் தற்காப்பு உணர்வுடன் செயல்படுகின்றன. இந்தியாவிலும், அனைத்து கார்களிலும் ஏயர்பேக் (காற்று பைகள் ) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவது பற்றி இந்திய அரசு தீவிரமாக
ஆலோசித்து வருகிறது. போட்டி அதிகமாக உள்ள இந்திய சந்தையில் , குறைந்த விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் தற்போது தங்களது டாப் எண்டு மாடல்களில் மட்டும் தான் காற்று பைகளை பொருத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பாதுகாப்பற்ற கார்கள் தயாரிக்கப்பட்டு விபத்து நேரத்தில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் உயிர் இழப்பும் நேருகிறது.

மேலும் வாசிக்க : 2016 மிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட்ஸ் / சேலன்ஜரின் மறைப்பு திரை விலகியது

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை