வலிமைமிக்க எண்டேவர்: ஃபார்சியூனரின் தலைமை பீடத்தைப் பிடிக்குமா?
published on ஜனவரி 21, 2016 05:39 pm by nabeel for போர்டு இண்டோவர் 2015-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
டொயோடா ஃபார்சியூனர் என்ற பெயரை கேட்டாலே அதிரும் அளவிற்கு இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராகத் திகழ்கிறது. ஆஜானுபாகமாகவும், கம்பீரமாகவும் தோற்றமளிக்கும் இந்த காருக்கு நிகர் எதுவுமில்லை. 2009 –ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து, இப்போது வரை தனது போட்டியாளர்களை எளிதாக சமாளித்தபடி, SUV பிரிவின் தலைமை பீடத்தை தன்னகத்தே தக்க வைத்துள்ளது. ஆனால், இந்த நிலை தற்போது மாறி வருகிறது. ஏனெனில், ஹுண்டாய் நிறுவனத்தின் சாண்டா ஃபே தற்போது இந்திய சந்தையில் காலூன்றத் தொடங்கி விட்டது. சாண்டா ஃபே தவிர, சமீபத்தில் வெளியான செவ்ரோலெட் டிரைல் பிளேசர் காரும், ஜப்பானிய டொயோடா ஃபார்ச்யூனருடன் நேருக்கு நேர் நின்று போட்டியிட தயாராகி விட்டது. போட்டி அத்தோடு முடியவில்லை, பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு மற்றுமொரு முறை பழிவாங்குவதைப் போல, எண்டேவர் என்னும் புதிய அமெரிக்க காரை இந்திய சந்தையில் இறக்கி, ஜப்பானிய நிறுவனமான டொயோடாவிற்கு மேலும் ஒரு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளனர். ஃபோர்ட் நிறுவனத்தின் புதிய நெக்ஸ்ட்-ஜென் எண்டேவர் அதிக வலிமை வாய்ந்ததாகவும், முரட்டுக் காளை போன்ற தோற்றத்துடனும், எக்கச்சக்கமான சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது. சக்திவாய்ந்த 3.2 லிட்டர் TDCi டர்போ டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், இந்த வாகனம் ஜல்லிக்காட்டு காளையை போல சீறிப் பாய்ந்து ஓடுகிறது. பல வருடங்களாக SUV பிரிவின் தலைவனாக வீற்றிருக்கும் ஃபார்ச்யூனரின் இடத்தைப் பிடிக்க தேவையான முக்கியமான சமாசாரங்களை எண்டேவர் காரில் அமெரிக்கர்கள் பொறுத்தியுள்ளனரா என்பதை இப்போதே தெரிந்து கொள்வோம்.
இயங்கும் திறன்
குறைந்த கொள்ளளவு கொண்ட இஞ்ஜின்கள் |
அதிக கொள்ளளவு கொண்ட இஞ்ஜின்கள் |
|||
ஃபார்ச்யூனர் |
எண்டேவர் |
ஃபார்ச்யூனர் |
எண்டேவர் |
|
டிஸ்பிளேஸ்மெண்ட் (cc) |
2494 |
2198 |
2982 |
3198 |
பிஸ்டன்கள் |
4 |
4 |
4 |
5 |
தொழில்நுட்பம் |
இன்டர்கூலர் டர்போ சார்ஜர் |
TDCi டர்போ டீசல் |
இன்டர்கூலர் டர்போ சார்ஜர் |
TDCi டர்போ டீசல் |
சக்தி (bhp@rpm) |
142 @ 3400 |
157.8 @ 3200 |
168 @ 3600 |
197.2 @ 3000 |
டார்க் (Nm @ rpm) |
343 @1600 – 2800 |
385 @ 1600 – 2500 |
343/360 @1400 – 3400 (MT/AT) |
470 @ 1750 – 2500 |
ட்ரான்ஸ்மிஷன் |
5 ஸ்பீட் MT/AT |
6 ஸ்பீட் MT/AT |
5 ஸ்பீட் MT/AT |
6 ஸ்பீட் AT |
மேலே உள்ள அட்டவணையைப் பார்க்கும் போது, இரண்டு வித இஞ்ஜின்களிலும், சக்தி மற்றும் டார்க் அளவை ஒப்பிட்டால், டொயோடா ஃபார்ச்யூனரை விட ஃபோர்ட் எண்டேவர் விஞ்சுகிறது. சக்தி மற்றும் டார்க் உற்பத்தி அளவில் மட்டுமல்ல, குறைவான rpm அளவில் இவை இரண்டும் உற்பத்தியாகின்றன என்பது ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெரியவருகிறது. எனவே, நகர சூழ்நிலைகளில் சிறந்த செயல்திறனைக் கொடுக்கும் வாகனமாக எண்டேவர் உள்ளது. அது மட்டுமல்ல, ஜப்பானிய SUV –யில் 5 ஸ்பீட் ட்ரான்ஸ்மிஷன் வசதி உள்ளது, ஆனால் அமெரிக்க SUV காரின் இஞ்ஜின் 6 ஸ்பீட் MT/AT ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இஞ்ஜின் திறனை ஒப்பிடுகையில், எண்டேவர் SUV ஃபார்ச்யூனரை விட 110 Nm அதிக டார்க்கை உற்பத்தி செய்வதால் எத்தகைய நிலப்பரப்பிலும் பாய்ந்து செல்வதற்கு தயாராக உள்ளது என்பது நிரூபனமாகிறது.
வெற்றி பெற்ற SUV: அமெரிக்க எண்டேவர்
சாகசதிறன்
வெற்றி பெற்ற SUV: அமெரிக்க எண்டேவர்
சாகசதிறன்
ஃபார்ச்யூனர் |
எண்டேவர் |
||
ட்ரைவ் லைன் |
2.5 L: 2WD |
3.0 L: 2WD / 4WD |
2.2 L: 2WD / 4WD (AT –யுடன் 2WD மட்டும்) |
சஸ்பென்ஷன் (முன்புறம் / பின்புறம்) |
டபுள் விஷ்போன் / 4 லிங்க் வித் லேட்டரல் ராட் |
இன்டிபெண்டன்ட் காயில் ஸ்பிரிங்ஸ் வித் ஆண்டி-ரோல் பார்/ காயில் ஸ்பிரிங்ஸ், வாட்ஸ் லிங்கேஜ் டைப் வித் ஆண்டி-ரோல் பார் |
|
ப்ரேக்குகள் (முன்புறம் / பின்புறம்) |
டிஸ்க் / ட்ரம் |
டிஸ்க் / டிஸ்க் |
|
கிரவுண்ட் க்ளியரன்ஸ் (மிமீ) |
220 |
225 |
|
வீல் பேஸ் (மிமீ) |
2750 |
2850 |
|
பூட் பகுதியின் கொள்ளளவு (லிட்டர்களில்) |
296 (இருக்கைகள் மடக்கப்பட்டுள்ளபோது) |
450, 2101 (இருக்கைகள் மடக்கப்பட்டுள்ளபோது) |
|
பாதுகாப்பு அம்சங்கள் |
ABS + EBD மற்றும் BA |
ABS + EBD, ESP, டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் லாஞ்ச் |
சிறந்த சஸ்பென்ஷன், சிறந்த ப்ரேக்குகள், சற்றே அதிகமான கிரவுண்ட் க்ளியரன்ஸ், 100 மிமீ அதிகமான வீல் பேஸ், பூட் பகுதியில் அதிக இடவசதி மற்றும் சிறந்த ஆஃப்-ரோட் திறன் போன்றவற்றைப் பெற்ற எண்டேவர் மீண்டும் வெற்றி பெறுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள விவரங்களின் மூலம், ஆஃப்-ரோடு சாகச பயணத்திற்கு எண்டேவர் உகந்ததென்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
வெற்றி பெற்ற SUV: எண்டேவர்
உட்புற அமைப்பு
வெற்றி பெற்ற SUV: எண்டேவர்
உட்புற அமைப்பு
ஃபார்ச்யூனர் |
எண்டேவர் |
ஆட்டோமேடிக் க்ளைமேட் கண்ட்ரோல் |
டூயல் சோன் ஆட்டோமேடிக் க்ளைமேட் கண்ட்ரோல் |
2 -வது மற்றும் 3 –வது இருக்கை வரிசைகளில் AC வெண்ட்கள் |
2 -வது மற்றும் 3 –வது இருக்கை வரிசைகளில் AC வெண்ட்கள் |
LCD டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், 6 ஸ்பீக்கர்கள் |
நாய்ஸ் கேன்சலேஷன் வசதி இணைந்த TFT டச் ஸ்கிரீன் அமைப்பு, 10 ஸ்பீக்கர்கள் |
DVD, ப்ளூடூத், USB, Aux-in |
ப்ளூடூத், USB X 2, Aux-in |
க்ரூயிஸ் கண்ட்ரோல் |
க்ரூயிஸ் கண்ட்ரோல் |
டிஸ்ப்ளே வசதியுடன் ரியர் காமிரா |
டிஸ்ப்ளே வசதியுடன் ரியர் காமிரா |
கருப்பு நிற டாஷ்போர்டு |
இரண்டு வண்ணத்தில் டாஷ்போர்டு |
லெதர் வேலைப்பாடு கொண்ட ஸ்டியரிங் மௌன்டட் ஆடியோ மற்றும் கால் கண்ட்ரோல்கள் |
லெதர் வேலைப்பாடு கொண்ட ஸ்டியரிங் மௌன்டட் ஆடியோ மற்றும் கால் கண்ட்ரோல்கள் |
டூயல் SRS காற்றுப் பைகள் |
டூயல் ஃப்ரண்ட் காற்றுப் பைகள் |
உட்புற அமைப்பிலும், ஃபார்ச்யூனரை விட எண்டேவரில் இடம்பெற்றுள்ள அம்சங்களே சிறந்ததாகவும், வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் விதத்திலும் உள்ளன. ஏராளமான சிறந்த அமைப்புகளை உள்ளடக்கிய எண்டேவரின் உட்புறம், நமக்கு உயர்தர SUV –யில் பயணம் செய்யும் உணர்வைத் தருகின்றது. ஆனால், அதே நேரம், ஃபார்ச்யூனரில் உள்ள உட்புற அம்சங்கள், பல முறை எதிர்மறை விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன. ஃபார்ச்யூனரில் உள்ள டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் போன்றவை நவீனமாக இல்லாததால், உடனடியாக டொயோடா நிறுவனம் இதனை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற SUV: எண்டேவர்
விலை & இயங்கும் செலவு
வெற்றி பெற்ற SUV: எண்டேவர்
விலை & இயங்கும் செலவு
ஃபார்ச்யூனர் |
எண்டேவர் |
|||
2.5 லிட்டர் |
3.0 லிட்டர் |
2.2 லிட்டர் |
3.2 லிட்டர் |
|
விலை (மும்பை எக்ஸ்-ஷோரூம்) |
ரூ.25,46,960 |
ரூ.25,28,583 |
ரூ. 24,75,094 |
ரூ.27,78,294 |
மைலேஜ் (km/l) |
13 |
13 |
14.12 |
10.91 |
விலை என்று வரும்போது, டொயோடாவின் ஃபார்ச்யூனர் வெற்றி பெறுகிறது. குறைந்த கொள்ளளவு கொண்ட இஞ்ஜின்கள் மற்றும் அதிக கொள்ளளவு கொண்ட இஞ்ஜின்கள் என்ற இரண்டு வகையான இஞ்ஜின்களிலும், எண்டேவர் காரை விட ஃபார்ச்யூனரின் விலை குறைவாகவே உள்ளது. மேலே கொடுத்துள்ள அனைத்து விவரங்களையும் வைத்துப் பார்த்தால், வாடிக்கையாளர்களுக்கு அதிகமான நன்மைகளைத் தருவது எண்டேவர் என்று தெரிகிறது. எனினும், எண்டேவரின் குறைவான கொள்ளளவு கொண்ட மாடல் மட்டுமே ஒப்பீட்டளவில் அதிக மைலேஜ் தருகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மேலும், ஃபார்ச்யூனரின் அதிக கொள்ளளவு தரும் இஞ்ஜின் அதிக மைலேஜ் தருகிறது என்பதும் தெளிவாகிறது.
வெற்றி பெற்ற SUV: ஃபார்ச்யூனர்
மதிப்பீடு அட்டவணை (ஸ்கோர்கார்ட்)
ஃபார்ச்யூனர் |
எண்டேவர் |
இயங்கும் திறன் |
|
சாகச திறன் |
|
உட்புற அலங்கரிப்பு மற்றும் சிறப்பம்ஸங்கள் |
|
விலை |
|
****எண்டேவர்**** |
இறுதித் தீர்ப்பு
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ் வாய்ந்த, சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஃபோர்ட் மற்றும் டொயோடா நிறுவனங்களின் தயாரிப்பான எண்டேவர் மற்றும் ஃபார்ச்யூனர் கார்களை விரிவாக ஒப்பீடு செய்த பின்னர், எண்டேவரே சிறந்ததென்று தீர்ப்பு கூற முடியும். சிறந்த ஆஃப்-ரோடு திறன், ஏராளமான வசீகரிக்கும் அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்தது என்று பல வெற்றிக்குறிகளை எண்டேவர் பெற்றிருந்தாலும், டொயோடா நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் நன்கு காலூன்றிவிட்ட நிறுவனமாகும். எனவே, ஃபார்ச்யூனர் காரை, இந்திய மக்கள் மிகவும் நம்பகமான காராகக் கொண்டாடுகிறார்கள். பல வருடங்களாக சந்தையில் SUV பிரிவின் முன்னணியில் இருக்கும் ஃபார்ச்யூனர், இந்திய மக்களின் மனதை வென்றுள்ளது என்பதற்கு சாட்சி எதுவும் தேவை இல்லை. மேலும், ஃபார்ச்யூனரை சொந்தமாக்கிக் கொண்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து, எப
0 out of 0 found this helpful