செப்டம்பர் 25 ஆம் தேதி மெர்சிடிஸ்-மேபேக் S600 அறிமுகம்
konark ஆல் செப் 09, 2015 01:58 pm அன்று பப்ளிஷ் செய்யப் பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
மும்பை: ஜெர்மன் தொழிற்சாலையில் இருந்து வரும் மேபேக் S600, இருப்பதிலேயே சிறப்பான ஓட்டுநரால் இயக்கப்படும் இயந்திரம் (அல்டிமேட் சாபர் டிரைவன் மிஷின்) என்றே எப்போதும் அறியப்படுகிறது. அதன் பின்புற சீட்களின் ஆடம்பரம் மற்றும் இதம் ஆகியவை சேர்ந்து ஆடம்பர வாகனங்களின் பிரிவில் ஒரு புதிய தர நிர்ணயத்தையே ஏற்படுத்திவிட்டது. S கிளாஸின் அட்டகாசமான ஆடம்பர காரான மேபேக் பதிப்பு, இந்த மாதம் 25 ஆம் தேதி இந்தியாவிற்குள் தடம் பதிக்கிறது.
இந்த காரில் பின்புற சீட்டின் இனிமை மட்டுமின்றி, ஒரு சாதாரண S-கிராஸின் நீளத்தை விட S600, 207 மில்லிமீட்டர் அதிக நீளத்தை கொண்டுள்ளது. இதன் மொத்த நீளம் 5,453 மில்லிமீட்டர் ஆகும். இதன் வீல்பேஸின் அளவில் 200 மில்லிமீட்டர் அதிகரிக்கப்பட்டு, அதன் நீளம் 3,365 மில்லிமீட்டராக காணப்படுகிறது.
இந்த S 600-யை சாலையில் எளிதில் கண்டறியும் வகையில், அதன் பளபளப்பான அலாய்கள் மற்றும் கூர்மையான கிரில் உடன் கூடிய C-பில்லர்களில் காணப்படும் மேபேக் லோகோக்கள் ஆகியவை அமைந்துள்ளன. பூட் லிட்டில் கூட மேபேக் பேட்ஜ் காணப்படுகிறது.
6.0-லிட்டர் V12 பை-டர்போ பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த S600 மேபேக், அதிகபட்சமாக 523 BHP ஆற்றலையும், 830 Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இந்த ஆற்றல் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் இயக்கப்படுகிறது.
வீல்பேஸ் அளவு நீளமாக இருப்பதால், ஒரு உயர்ந்த வகை S கிளாஸ் காரை விட, மேபேக் S600-ல் அதிக இடவசதி காணப்படுகிறது. உட்புறத்தில் காணப்படும் அமைவிடங்களின் பல பகுதிகளில், நம் கண்களை ஈர்க்கும் வகையில் மேபேக் லோகோக்கள் காட்சியளிக்கின்றன. பின்புறத்தில் உள்ள எக்ஸிக்யூட்டிவ் சீட்களுக்கு பொருத்தப்பட்டுள்ள பேக்ரெஸ்ட்களை தனிப்பட்ட முறையில் மாற்றியமைத்து கொள்ளும் வசதி உள்ளது. சீட் மெத்தைகளின் சாய்வு மற்றும் மட்டத்தை ஒருமிக்க, தனிப்பட்ட முறையில் மாற்றியமைத்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.