ரூ.2.6 கோடி விலையில் மெர்சிடிஸ்-மேபேச் S600 செடான் அறிமுகம்
published on செப் 25, 2015 06:52 pm by manish
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம், தனது மேபேச் பிரிமியம் ஆடம்பர சப்-பிராண்ட் காரை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்நிறுவனம் மெர்சிடிஸ்-மேபேச் S600 மாடலை, இந்திய சந்தையில் ரூ.2.6 கோடி (எக்ஸ்-ஷோரூம், புனே) விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட மேபேச் S600 காரை, உலகிலேயே மிகவும் அமைதியான கார் என்று அந்நிறுவனம் அறிவித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த காருக்கான முன்பதிவு துவங்கி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விநியோகம் துவங்கியது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் S63 AMG மூலம் 43% சந்தை வளர்ச்சி கிடைத்ததாக, இந்த ஜெர்மன் வாகன தயாரிப்பாளர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர் வட்டத்தை விரிவாக்க, மெர்சிடிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு மெர்சிடிஸ் நிறுவனத்தின் 15 கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில், S600 காரும் ஒன்றாகும். மேலும் இது அந்நிறுவனத்தின் 12வது அறிமுகம் ஆகும். S-கிளாஸ் கார்களை இந்நிறுவனம் இந்தியாவிலேயே கூட்டிணைக்கிறது (அசம்பிளிங்). மேபேச் S600 கார்களை முழுக்க முழுக்க வெளிநாட்டு உருவாக்கம் (CBU) மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
மேபேச் S600 காரின் உட்புறத்தில் பயணிகளுக்கு அதிக இடவசதி கிடைக்கும் வகையில், சாதாரண S-கிளாஸ் கார்களை விட, இது 200mm அதிக நீளம் கொண்ட வீல்பேஸை பெற்றுள்ளது. மசாஜ்ஜிங் சீட்கள், சிறப்பான பின்பக்க சென்டர் ஆம்ரெஸ்ட்கள், மேஜிக் ஸ்கை கன்ட்ரோல் சன்ரூஃப் மற்றும் பர்மஸ்டர் 3D ஆடியோ சிஸ்டம் ஆகிய சில ஆடம்பர அம்சங்களை, இந்த சேடனில் காண முடிகிறது. மேலும் இந்த காரில் தரமான பின்புற எக்ஸிக்யூட்டிவ் சீட்டிங் பேக்கேஜ்ஜை கொண்டுள்ளது.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று கூர்ந்து கவனிக்கும் போது, இந்த ஆடம்பர சேடனை இயக்கும் 6.0-லிட்டர் V12 பை-டர்போ மோட்டார், 523bhp ஆற்றலையும், 830Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இந்தியாவில் காணப்படும் சாதகமற்ற சாலை அமைப்பை கருத்தில் கொண்டு, V12-யை நம் நாட்டிற்கு கொண்டு வர மெர்சிடிஸ் நிறுவனம் தயக்கம் காட்டுவதாக எழுந்த வதந்திகளை, மேற்கண்ட ஆற்றல் அமைப்பு ஒன்றுமில்லாமல் செய்துள்ளது. இந்த என்ஜின், 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டு, மணிக்கு 249 கி.மீ என்ற அதிகபட்ச வேகத்தை எட்டி சேர உதவுகிறது.
குறிப்புகள்:
- என்ஜின்: 6.0-லிட்டர் பை-டர்போ V12
- ஹார்ஸ்பவர்: 523bhp
- முடுக்குவிசை: 830Nm
- கியர்பாக்ஸ்: 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்
- விலை: 2.6 கோடி (எக்ஸ்-ஷோரூம், புனே)