• English
  • Login / Register

அக்டோபர் 14 ஆம் தேதி GLE-கிளாஸை, மெர்சிடிஸ்-பென்ஸ் அறிமுகம் செய்கிறது

published on அக்டோபர் 06, 2015 02:15 pm by அபிஜித் for மெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

GLE-Class exteriors

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மிட்-சைஸ் பிரிமியம் SUV-யான GLE-யை, இந்த மாதம் 14 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. M-கிளாஸின் பெயர் மாற்றமாக GLE-கிளாஸ் இருக்கும். அதே நேரத்தில் இது ஒரு M-கிளாஸின் புதுப்பிக்கப்பட்ட மாடலாகவும் இருக்கும். இதற்கான காரணம் என்னவெனில், தனது கார்களின் பேட்ஜ்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ள தயாரிப்பாளர், GL-கிளாஸை இனிமேல் GLC என்றும், M-கிளாஸை, GLE என்ற பெயரில் மறுஅறிமுகமும் செய்துள்ளது. இதிலிருந்து தனது SUV-களின் முதல் எழுத்துகளை G-ல் துவங்கி, ஒரு ஒத்திசைவான நிலைக்குக் கொண்டு வர தயாரிப்பாளர் எண்ணம் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. BMW X3, ஆடி Q5 மற்றும் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய கார்களுடன், இந்த புதிய GLE போட்டியிட உள்ளது.

இந்த வரவிருக்கும் GLE-கிளாஸின் முன்பகுதியை பார்த்தால், சமீபகால மெர்சிடிஸ் கார்களான C-கிளாஸ், S-கிளாஸ், CLS-கிளாஸ் ஆகியவை போன்றே பெரும்பாலும் தோற்றம் அளிக்கிறது. காரின் முன்பகுதியில் அதே முனைப்பு நீண்ட பக்கவாட்டை கொண்ட ஃப்ளோயிங் ஹெட்லெம்ப்கள் உடன் கூடிய கண் இமைகள் போன்ற DRL-களை கொண்டுள்ளது. காரின் பக்கவாட்டு பகுதியும், பின்பகுதியும் எந்த மாற்றமும் செய்யப்படாமல், தற்போதைய M-கிளாஸை நினைவுப்படுத்துகிறது.

GLE-Class interiors

காரின் உட்பகுதியில், ஒரு புதிய இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் மற்றும் கூடுதல் வட்டவடிவிலான AC ஜன்னல்கள் மற்றும் டேஷ் செட்அப் ஆகியவற்றை கொண்டு, தற்போதைய காரில் இருந்து சிறிய அளவிலான மாற்றத்தை பெற்றுள்ளது. மேலும் ஒரு புதிய ஸ்டீயரிங் வீல்லை பெற்று ஆடம்பரமாக காட்சியளிக்கிறது.

Also Read: Mercedes to Invest Rs 1000 Crore in India, Eyes Rapid Expansion

அதிகம் கவனிக்கப்படாத சில நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்த்தால், இந்த காருக்கு இரு டீசல் தேர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது M-கிளாஸில் செயல்பட்டு வரும் 2.2-லிட்டர் இன்-லைன் 4-சிலிண்டர் மற்றும் 3.0-லிட்டர் V6 ஆகிய இரு என்ஜின்களை, GLE-கிளாஸிலும் நிறுவப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடப்பெயர்ச்சியை பொறுத்த வரை, இரு என்ஜின்களும் ஒரே மாதிரியானவை என்றாலும், டர்போசார்ஜரின் சிறிய அளவிலான மாற்றங்கள், ஒரு புதிய ECU மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட் / ஸ்டாப் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் அவை அதிக சீரியத் தன்மையும், எரிபொருள் சிக்கனத்தையும் கொண்டிருக்கும். இவற்றின் டிரான்ஸ்மிஷன் பணிகளை புதிய 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேற்கொள்ளும். இது தற்போதைய 7-ஸ்பீடு யூனிட்டை விட சிறந்தது மற்றும் அதிக மேம்பாடு கொண்டதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More: Mercedes-Maybach Launches S600 Sedan at Rs 2.6 Crore  

Know More:Mercedes-Benz M-Class

was this article helpful ?

Write your Comment on Mercedes-Benz ஜிஎல்இ 2015-2020

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience