2015 லாஸ் ஏஞ்சில்ஸ் ஆட்டோ ஷோவில், GLS-கிளாஸை மெர்சிடிஸ்-பென்ஸ் வெளியிட்டது
published on நவ 20, 2015 06:30 pm by nabeel for மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 2016-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
தற்போது நடைபெற்று வரும் லாஸ் ஏஞ்சில்ஸ் ஆட்டோ ஷோவில், தனது GLS-கிளாஸ் SUV-யை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இது பெரும்பாலும் ஒரு புதுப்பிக்கப்பட்ட GL ஆக இருந்தாலும், தற்போது இந்த GL உடன் S பிராண்டிங்கும் சேர்ந்து வருகிறது.
S பிராண்டிங் மூலம் இந்த SUV-க்கு, சில கடினமான பாடி தன்மைகளாக, புதிய கிரில் மற்றும் முழு LED ஹெட்லெம்ப்கள் ஆகியவற்றை பெற்று, ஒரு புதிய மரியாதைக்குரிய முன்பக்க தோற்றத்தை கொண்டுள்ளது. பக்கவாட்டு மற்றும் பின்புற தன்மைகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், புதிய 21-இன்ச் AMG லைட்-அலாய் வீல்கள் மற்றும் ஒரு மெல்லிய பின்புறத் தோற்றம் ஆகியவற்றை போல லேசான மாற்றங்களை கொண்டுள்ளது.
இயந்திரவியலில், GLS-கிளாஸில் ஒரு 4.7-லிட்டர் ட்வின்-டர்போ V8 என்ஜின் மூலம் 449bhp ஆற்றலை அளித்து, GLS550 என்று அழைக்கப்பட உள்ளது. இதில் ஒரு 9-ஸ்பீடு டயல்-கிளெச் கியர்பாக்ஸை பெற்று, ஒரு தடையற்ற டிரைவ்வை பெற முடிகிறது. இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் பேஸ் வகையில், ஒரு 3.0-லிட்டர் ட்வின்-டர்போ V6 என்ஜினை பெற்று, GLS450 என்று அழைக்கப்பட உள்ளது.
உட்புறத்தில், ஒரு 8-இன்ச் கலர் மீடியா டிஸ்ப்ளே ஆன ஒரு உள்ளுணர்வு கொண்ட டச்பேட் உடன் கூடிய கமெண்ட் சிஸ்டம் பெற்ற ஒரு பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீனை தவிர, மற்றபடி எந்த முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களையும் நாம் காண முடிவதில்லை. இந்த சிஸ்டத்தில் உள்ள ரிமோட் ஆன்லைன் சர்வீஸ் மூலம் விண்டோஸ்கள் மற்றும் டோர்கள், மைல்லேஜ், டயர் பிரஷர்கள் மற்றும் மற்ற கண்டறியும் தகவல்கள் உள்ளிட்ட வாகன தகவல்களை பயணத்தில் எங்கேயும், எப்போதும் பெற உதவியாக அமைகிறது. அப்ஹோல்ஸ்டரி மட்டும் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கேபினின் சாராம்சம் மட்டும் அப்படியே உள்ளது. வரும் 2016 ஆம் ஆண்டின் மத்தியில் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற நிலையில், அடுத்து வரவுள்ள 2016 ஆட்டோ எக்ஸ்பே-வில் காட்சிக்கு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: