• English
  • Login / Register

டேராடூனில் முதல் 3S ஆடம்பர காரின் டீலர்ஷிப்பை, மெர்சிடிஸ்-பென்ஸ் துவங்கியது

published on டிசம்பர் 15, 2015 02:11 pm by sumit

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Mercedes-Benz Opens Dealership in Dehradun

ஜெய்ப்பூர்: உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில், ஒரு உலக தரம் வாய்ந்த டீலர்ஷிப்பை, மெர்சிடிஸ்-பென்ஸ் திறந்துள்ளது. ‘பெர்க்லி மோட்டார்ஸ்’ என்ற பெயரில் அறியப்படும், டேராடூனில் அமைந்துள்ள இந்த முதல் 3S (விற்பனை, சர்வீஸ், ஸ்பேர்) ஆடம்பர கார் டீலர்ஷிப்பில், பல்வேறு விதமான துறைகளுக்கான 30-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற பணியாளர்கள் உள்ளனர். மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO ரோலேண்டு ஃபோல்கர், பெர்க்லி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் ரன்ஜீவ் டாஹூஜா ஆகியோர், இந்த ஷோரூமை திறந்து வைத்தனர்.

வளர்ந்து வரும் டேராடூன் சந்தையின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்திய ரோலேண்டு ஃபோல்கர் கூறுகையில், “விரைவாக புரிந்து கொள்ளும் திறனுள்ள டேராடூன் வாடிக்கையாளர்கள் இடையே, உலக தரம் வாய்ந்த முதல் 3S டீலர்ஷிப்பை துவக்கி, அதன் வாடிக்கையாளர் பிணைப்பை தொடர்ந்து விரிவுப்படுத்துவதில், மெர்சிடிஸ்-பென்ஸ் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. இந்த உலக தரம் வாய்ந்த டீலர்ஷிப் மற்றும் சர்வீஸ் சென்டரின் திறப்பு மூலம் எங்களின் சர்வதேச அளவிலான தயாரிப்புகளை வெளியிடவும், தொல்லை இல்லாத எளிய சர்வீஸை அளிக்கவும், எங்களின் விரைவாக புரிந்து கொள்ளும் ஆற்றலை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரு விசாலமான பிராண்ட் மற்றும் கார் உரிமையாளரின் அனுபவத்தை அளிக்கவும், ஒரு வாசல் திறந்துள்ளது. சமீபகாலமாக ஒரு சக்திவாய்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ள டேராடூன் பகுதி, ஆடம்பர ஆட்டோமொபைல் துறைக்கு சக்திவாய்ந்த சாத்தியமுள்ள ஒரு முக்கியமான சந்தையாக உருவாகியுள்ளது. சரியான நேரத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் தனது அறிமுகத்தை பெற்றுள்ளதோடு, டேராடூனில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை ‘பெர்க்லி மோட்டார்ஸ்’ திறம்பட கையாண்டு, உத்தரகண்ட் மாநிலத்தின் சந்தையாக நிலைநிற்கும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்றார்.

திரு.ஃபோல்கர் உடனான கூட்டுறவு குறித்து ரன்ஜீவ் டாஹூஜா கூறுகையில், “மூன்று முனை நட்சத்திர சின்னத்தை அடையாளமாக கொண்ட நிறுவனத்துடன், இந்தியாவில் நம்பகமான முறையில் கைகோர்த்து இருப்பதில், நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம். ‘சிறந்தது அல்லது ஒன்றுமில்லை’ என்ற மெர்சிடிஸ்-பென்ஸின் தத்துவத்துடன், எங்களின் இலக்கு ஒன்றாக இணைந்துள்ளதோடு, எங்கள் சேவைகளின் மூலம் வாழ்நாள் வாடிக்கையாளர்களை உருவாக்க விழைகிறோம். ஆடம்பர தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான சாத்தியக்கூறுகள் திறம்பட கையாளப்படாத ஒரு தனித்தன்மை வாய்ந்த சந்தையான டேராடூனில், சந்தை வளர்ச்சிக்கான மகத்தான சாத்தியக்கூறுகளை நாங்கள் காண்கிறோம். பெர்க்லி மோட்டார்ஸில், எங்களின் விரைவாக புரிந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த தயாரிப்பு மற்றும் சேவைகள் அனுபவத்தை அளிக்க, நாங்கள் தயாராக உள்ளோம். டேராடூன் மற்றும் அதன் சுற்றுபுற சந்தைகளில், மெர்சிடிஸ்-பென்ஸின் தயாரிப்புகளுக்கான தேவைகள் அதிகரித்து வருகிறது. மேலும் இங்கே மெர்சிடிஸ்-பென்ஸின் வளர்ச்சிக்கான வாடிக்கையாளர்களின் அடித்தளத்தை கண்டு, நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு ஒப்பற்ற ஆடம்பர தயாரிப்பை வாங்குதல் மற்றும் உரிமையாளர் அனுபவம் ஆகியவற்றின் மூலம் எங்களின் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Mercedes-Benz Class A Facelift

இந்த ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனம், 15 கார்களை அறிமுகம் செய்ய போவதாக வாக்களித்தது போலவே, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் A-கிளாஸின் அறிமுகத்தோடு 15 கார்களை வெளியிட்டு, தனது வாக்குறுதியை நிறைவேற்றியது. இந்த புதிய ஷோரூமிலும், இவையே காட்சிக்கு வைக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience