மெர்சிடிஸ் பென்ஸின் ஆடம்பரமான அதிநவீன அடுக்கு மாடி குடியிருப்புகள் – கண்களுக்கு விருந்து (படங்கள் உள்ளே)
குடியிருப்புகள் துறையில் (ரெஸிடென்ஷியல் ப்ராப்பர்டி) முதலீடு செய்துள்ள முதல் வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பெறுகிறது. இந்த புதிய கூட்டு முயற்சியில், ஃப்ரேசர்ஸ் ஹாஸ்பிடாலிட்டி குழுமத்துடன் இணைந்து மெர்சிடிஸ் நிறுவனம் செயல்படும். மெர்சிடிஸ் நிறுவனம், தனது அற்புதமான வடிவமைப்பு திறனையும், நவீன தொழில்நுட்ப நுணுக்கத்தையும், தனது ஆடம்பரமான வாடகை குடியிருப்பு கட்டடங்களிலும் கொண்டு வர நினைக்கிறது. தனது புதிய ரியல் எஸ்டேட் தொழிலை லண்டனில் உள்ள கேன்ஸிங்க்டன் என்னும் இடத்தில் ஆரம்பிக்க உள்ளது. இந்த இடம், பிரிட்டனிலேயே உயர்தட்டு ரியல் எஸ்டேட் சொத்துக்கள் நிறைந்த இடமாகும். 6 விதமான சர்வீஸ்ட் அபார்ட்மெண்ட்களில் இருந்து, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதி, நவம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படும். இவற்றை வாடகைக்கு விடுவது, ‘மெர்சிடிஸ் பென்ஸ் லிவிங் @ ஃப்ரேசர்' என்ற பெயர் கொண்ட கூட்டு நிறுவனம். மெர்சிடிஸ் நிறுவனம், இந்த தொழிலை மேலும் விரிவாக்க, சிங்கப்பூரிலும் 9 அடுக்கு மாடி குறியிருப்புகளை வாடகைக்குவிட திட்டமிட்டுள்ளது. உயர்தரமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆடம்பரமான பிரதிபலிப்பை இந்த கட்டடங்களின் உட்புற அலங்காரங்களிலும், நவீன வடிவமைப்பிலும், பகட்டான ஃபர்னீச்சர் தேர்விலும் உணர முடிகிறது. பளபளவென்று மின்னுகின்ற ஷிவரோவ்ஸ்கி கிரிஸ்டலில் கோர்க்கப்பட்ட சரவிளக்குகள் மற்றும் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்ட உணவு அறை மற்றும் வசிப்பு கூடம், போன்றவை மெர்சிடிஸின் அதிநவீன ஆடம்பரச் சின்னங்களாக விளங்குகின்றன. படுக்கை அறையில், கட்டிலில் உள்ள ஹெட் ரெஸ்ட்டில் படிக்க உதவும் விளக்குகள் (ரீடிங் லைட்) பொருத்தப்பட்டுள்ளன. இவை, நமக்கு மெர்சிடிஸ் கார்களில் உள்ள புரொஜெக்டர் முன்விளக்குகளை நினைவு படுத்துகின்றன. சர்வீஸ்ட் அபார்ட்மெண்டில் வசிக்க வரும் விருந்தாளிகள், இங்கு பொருத்தப்பட்டுள்ள பொழுதுப்போக்கு அமைப்பில், இணையற்ற பொழுதுபோக்கு அம்சங்களை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், மெர்சிடிஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் பிரௌஸ் செய்து அறிந்துகொள்ள முடியும். பொழுது போக்கவும், இந்நிறுவனத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், உயர் நவீன பாங்கில் வடிவமைக்கப்பட்ட மெர்சிடிஸ் மீ ஸ்மார்ட் TV பயன்பாடு (app) மற்றும் மீடியா வால் திரை பயன்படுகிறன.
“தற்போது, நிரந்தரமாக பயணம் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்கள், அறிமுகமில்லாத நகரங்களில் வாழவும் வேலை செய்யவும் வேண்டியுள்ளது. அவர்கள் கையில் வெண்ணை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய வேண்டியதில்லை, ஏனெனில், எங்கள் சர்வீஸ்ட் அபார்ட்மெண்ட் பாதுகாப்பையும், வீட்டில் இருப்பது போன்ற உணர்வையும், வசதியையும் அளிக்கின்றது. இந்த வசதிகள் சாதாரணமாக இல்லாமல், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது போலவே, மிகவும் உயர்வான தரத்தில், முழுநிறைவு தரும் விதத்தில் இருக்கும்,” என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிசினஸ் இன்னொவேஷன் துறைத் தலைவர், வில்ஃப்ரெட் ஸ்டீஃபன் கருத்து தெரிவித்தார்.
மேலும் வாசிக்க: