மும்பையில் 2வது கிளாஸிக் கார்களின் அணிவகுப்பு: மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா ஏற்பாடு செய்கிறது
published on நவ 25, 2015 11:25 am by nabeel
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்தாண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில், ஒரு விண்டேஜ் / கிளாஸிக் கார் அணிவகுப்பை நடத்த தேவையான ஏற்பாடுகளை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. மோட்டார் ஸ்போர்ட் துறையில் இந்த பிராண்ட் 120 ஆண்டுகளை நிறைவு செய்ததை கெளரவப்படுத்தும் வகையில் கடந்தாண்டு நடத்தப்பட்ட கார் அணிவகுப்பின் தொடர்ச்சியாக, இது நடத்தப்படுகிறது. இதுவரை எந்த வழியாக இந்த அணிவகுப்பு நடைபெறும் என்பது முடிவாகவில்லை என்றாலும், மும்பையின் மத்திய பகுதியை இது நிச்சயம் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு நடைபெற்ற அணிவகுப்பில், ஏராளமான கார்கள் பங்கேற்ற நிலையில், இந்த முறையும் மிக நீண்ட கார்களின் பட்டியல் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணிவகுப்பில் 170V, W113 SL, W107 SLm, R129SL, W120 போன்டன்ஸ், W111 ஃபின்டெயில் சலூன்ஸ், W123s மற்றும் W124s உள்ளிட்ட மாடல்கள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு அணிவகுப்பு அழைப்பிதழில் 50 கார்கள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அணிவகுப்பில் மொத்தம் 70 கார்கள் பங்கேற்றன. மேலும் அந்த நிகழ்ச்சியில் மோட்டார் ஸ்போர்ட் துறையில் 120 ஆண்டுகள் நிறைவு செய்த ஆண்டுவிழா உடன், மற்றொருபுறம் மெர்சிடிஸ்-பென்ஸ் முதல் முறையாக வென்ற FIA F1-ன் உலக கட்டமைப்பாளர்களின் சாம்பியன்ஷிப் (வோல்டு கன்ஸ்ட்ரக்டர்’ஸ் சாம்பியன்ஷிப்) குறித்தும் கொண்டாடப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு நிகழ்ச்சியின் துவக்கத்தில், மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO ஆன இபர்ஹார்டு கிர்ன் கூறுகையில், “கடந்த 1894 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகின் முதல் ஆட்டோமொபைல் போட்டியில் மெர்சிடிஸ்-பென்ஸ் பங்கேற்று வரலாறு படைத்துள்ளது. கடந்த 1908 ஆம் ஆண்டு அதன் முதல் கிராண்டு பிரிக்ஸ் பட்டத்தை வென்று, பல்வேறு விருதுகளையும் பெற்றது. F1-ல் சில முக்கிய சட்டத்திட்டங்கள் மாற்றப்பட்ட பிறகு, அதன் முதல் பயணத்திலேயே அப்படி செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்” என்றார்.
இதையும் படிக்கவும்
மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா AMG GT S கார்கள் ரூ. 2.4 கோடிக்கு இன்று அறிமுகப்படுதப்பட்டது