மெர்சிடீஸ் பென்ஸ் அக்டோபர் 2015 ல் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது.
published on நவ 09, 2015 02:38 pm by manish
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
மெர்சிடீஸ் நிறுவனம் தனது வரலாற்றில் மிக அதிக அளவிலான காலாண்டு விற்பனையை சமீபத்தில் தான் பதிவு செய்துள்ளது. இப்போது அதை தொடர்ந்து அக்டோபர் மாதம் அதிகப்படியான வாகனங்களை விற்பனை செய்து சாதனை செய்துள்ளது. இந்நிறுவனம் 10 .1% வளர்ச்சியுடன் தனது நான்காவது காலாண்டை துவக்கியது. 155 , 189 வாகனங்களை அக்டோபர் மாதம் உலகம் முழுதும் விற்பனை செய்துள்ளது. இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் 1,531,541 வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இது மெர்சிடீஸ் நிறுவனத்திற்கு கடந்த வருடத்தை விட 14 .6 % கூடுதல் வளர்ச்சியாகும்.
டியேம்ளர் AGயின் நிர்வாக குழு உறுப்பினர் ஓலா கல்லேனியஸ் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ சீனாவில் 2014 அக்டோபரில் விற்பனை ஆன வாகனங்களின் எண்ணிக்கையை ஏற்கனவே நாங்கள் கடந்து விட்டோம். எங்களுடைய SUV ரக வாகனங்கள் சீனாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, GLK SUV வாகனங்கள் எங்களது அனைத்து கார்களை விட மிகவும் பிரபலமாக உள்ளது. விற்பனையான மொத்த GLK வாகனங்களில் பாதிக்கு மேல் சீனாவில் தான் விற்பனை ஆகி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த GLK மாடலுக்கு மாற்றாக அறிமுகமாக உள்ள GLC SUV வாகனங்கள் இன்னமும் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து மேலும் எங்கள் நிறுவனத்திற்கு அதிகப்படியான வளர்ச்சியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் ".
2014 ஜனவரி - செப்டெம்பர் காலகட்டத்தில் மெர்சிடீஸ் பென்ஸ் விற்பனை செய்த வாகனங்களை விட இந்த 2015 ஆண்டின் அதே ஜனவரி - செப்டெம்பர் காலகட்டத்தில் 34% கூடுதலாக விற்பனை செய்துள்ளது. இந்த அசாத்திய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக மெர்சிடீஸ் நிறுவனத்தின் '15 ல் 15' திட்டம் தான் காரணமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த திட்டத்தின் படி, இந்தியாவில் இந்த 2015 ஆம் வருடம் 15 மாடல்களை அறிமுகப்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். உந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இதையும் படியுங்கள்