• English
  • Login / Register

ரூ.1.28 கோடி விலையில் புதிய வேரியன்ட்டை பெறும் Mercedes-Benz EQS 450

மெர்சிடீஸ் இக்யூஎஸ் எஸ்யூவி க்காக ஜனவரி 09, 2025 11:00 pm அன்று shreyash ஆல் திருத்தம் செய்யப்பட்டது

  • 38 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியா-ஸ்பெக் EQS எலக்ட்ரிக் எஸ்யூவி இப்போது EQS 450 (5-சீட்டர்) மற்றும் EQS 580 (7-சீட்டர்) என்ற இரண்டு வேரியன்ட்களில் வருகிறது.

  • புதிய EQS SUV 450 5-சீட்டர் வேரியன்ட் அதன் 7-சீட்டரரை விட ரூ.14 லட்சம் விலை குறைவானது.

  • புதிய வடிவிலான அலாய் வீல்களை தவிர, EQS SUV 450 காரில் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

  • MBUX ஹைப்பர் ஸ்கிரீன் அமைப்புடன் அதே இன்ட்டீரியர் செட்டப்பை பெறுகிறது.

  • அதே 122 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எலக்ட்ரிக் மோட்டார் 360 PS மற்றும் 800 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.

  • இது ARAI கிளைம்டு 821 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது. 

  • EQS எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் விலை இப்போது ரூ. 1.28 கோடி முதல் ரூ. 1.42 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் புதிய 5-சீட்டர் பதிப்பான EQS எஸ்யூவி 450 வேரியண்ட் ரூ.1.28 கோடியில் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் இப்போது குறைவான விலையில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் இன் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது இந்த புதிய வேரியன்ட் வடிவமைப்பில் எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை. பேட்டரி பேக்கில் மாற்றம் செய்யப்படவில்லை, ஆனால் எலக்ட்ரிக் மோட்டார் இப்போது குறைந்த ட்யூன் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்குச் செல்வதற்கு முன் ஆல் எலக்ட்ரிக் EQS எஸ்யூவி -க்கான வேரியன்ட் வாரியான விலை விவரங்களை பார்ப்போம்.

வேரியன்ட்

விலை

EQS 450 (5 இருக்கைகள்) (புதியது)

ரூ 1.28 கோடி*

EQS 580 (7 இருக்கைகள்)

ரூ.1.42 கோடி

* அறிமுக விலை

EQS எஸ்யூவி -யின் புதிய 5-சீட்டர் வேரியன்ட் அதன் 7-சீட்டர் பதிப்பை விட கிட்டத்தட்ட 14 லட்சம் ரூபாய் மலிவு விலையில் உள்ளது. இரண்டு EQS எஸ்யூவி வேரியன்ட்களும் மஹாராஷ்டிரா மாநிலம் சக்கானில் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன. 

வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை

Mercedes-Benz EQS SUV Front View

EQS எலக்ட்ரிக் எஸ்யூவியின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் மெர்சிடிஸ் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யவில்லை. இது இன்னும் மையத்தில் பெரிய மெர்சிடிஸ் பென்ஸ் லோகோவுடன் மூடிய-ஆஃப் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. நேர்த்தியான LED ஹெட்லைட்கள் உள்ளன. கனெக்டட் LED DRL ஸ்டிரிப், ஆக்ரோஷமாகத் தோற்றமளிக்கும் பம்பர் பானட்டின் அகலம் முழுமைக்கும் உள்ளது. புதிய வடிவிலான அலாய் வீல்களை தவிர பக்கவாட்டு தோற்றம் மாறவில்லை. இது ஃப்ளஷ்-டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் பயணிகள் பக்கத்தில் முன் ஃபெண்டரில் அமைந்துள்ள சார்ஜிங் ஃபிளாப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த வடிவமைப்பை முழுவதுமாக இணைப்பது கனெக்டட் LED டெயில் லேம்ப்களின் தொகுப்பாக உள்ளது. 

மேலும் பார்க்க: ரூ.3 கோடியில் இந்தியாவில் அறிமுகமானது Mercedes-Benz G-Class Electric

இன்ட்டீரியரில் மாற்றம் இல்லை

Mercedes-Benz EQS SUV DashBoard

உள்ளே இருந்து பார்க்கையில் கேபின் EQS 580 போலவே உள்ளது. டாஷ்போர்டின் முக்கிய சிறப்பம்சம் அதன் MBUX ஹைப்பர்ஸ்கிரீன் செட்டப்: 17.7-இன்ச் டச்ஸ்கிரீன், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் கோ டிரைவருக்கு 12.3-இன்ச் டச்ஸ்கிரீன். இவை அனைத்தும் சேர்ந்து 55.5 இன்ச் அளவில் இடத்தை உள்ளடக்கியது.

இது ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பல வண்ண ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பின்புற பயணிகளுக்கான பின்புற மைய ஆர்ம்ரெஸ்டில் ஒரு தனி ஸ்கிரீன் ஆகியவையும் உள்ளன. EQS எஸ்யூவி -ன் பாதுகாப்புக்காக 360-டிகிரி கேமரா, பல ஏர்பேக்குகள், மல்டி டிரைவர்-அசிஸ்ட் செட்டப் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

EQS 450 மற்றும் EQS 580 இரண்டும் ஒரே பேட்டரி பேக்கை கொண்டிருந்தாலும் கூட ​​அவற்றின் அவுட்புட் விவரங்கள் வேறுபடுகின்றன.

வேரியன்ட்

EQS 450 (5 சீட்டர்)

EQS 580 (7 சீட்டர்)

பேட்டரி பேக்

122 kWh

122 kWh

கிளைம்டு ரேஞ்ச்

821 கி.மீ

809 கி.மீ

டிரைவ் டைப்

ஆல்-வீல் டிரைவ் (AWD)

ஆல்-வீல் டிரைவ் (AWD)

பவர்

360 PS

544 PS

டார்க்

809 Nm

858 Nm

புதிய EQS 450 ஆனது EQS 580 ஐ விட 184 PS ஆக குறைந்துள்ளது. ஆனால் 12 கி.மீ கூடுதலான கிளைம்டு ரேஞ்ச் கிடைக்கும்.

போட்டியாளர்கள்

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்யூவி ஆனது ஆடி  Q8 இ-ட்ரான் மற்றும் BMW iX  ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Mercedes-Benz இக்யூஎஸ் எஸ்யூவி

explore மேலும் on மெர்சிடீஸ் இக்யூஎஸ் எஸ்யூவி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 57 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வேரியன்ட்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி e vitara
    மாருதி e vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience