• English
    • Login / Register

    ரூ.3 கோடியில் இந்தியாவில் அறிமுகமானது Mercedes-Benz G-Class Electric

    மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக் க்காக ஜனவரி 09, 2025 09:47 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 46 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    மெர்சிடிஸ் G-கிளாஸ் எலக்ட்ரிக் ஆனது அதன் எஸ்யூவி போல இருக்கும். இது குவாட்-மோட்டார் செட்டப்களுடன் கூடிய ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் டிரெயின் உடன் வருகிறது.

    • மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எலக்ட்ரிக் வழக்கமான பாக்ஸி எஸ்யூவி வடிவமைப்புடன் வருகிறது.

    • குளோஸ்டு கிரில் உடன் பம்பர் மற்றும் ஆப்ஷனலான ஸ்கொயர் டெயில்கேட் ஹவுஸிங் போன்ற EV -களுக்கான விஷயங்கள் உள்ளன.

    • பிளாக் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் கேபின் கிடைக்கிறது.

    • டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை இந்த காரில் உள்ளன.

    • 116 kWh பேட்டரி பேக் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 455 கி.மீ வரை WLTP கிளைம்டு ரேஞ்சை கொடுக்கிறது.

    • 4 எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை 587 PS மற்றும் 1164 Nm ஒருங்கிணைந்த அவுட்புட்டை கொடுக்கின்றன.

    மெர்சிடிஸ்-பென்ஸ் EQG கான்செப்ட் இந்தியாவில் 2024 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் அறிமுகமானது. 2025 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி -யான ஜி-கிளாஸ் எலக்ட்ரிக் அதன் தயாரிப்பு வடிவத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் பதிப்பு ஒன்றின் விலை ரூ. 3 கோடியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் பெயரை நிரூபிக்கும் வகையில் எலக்ட்ரிக் ஜி-வேகன் ஆனது பிரபலமான எஸ்யூவி தன்மையை வடிவமைப்பிலும் மட்டுமல்லாமல் அதன் இன்ஜின் திறனிலும் தக்க வைக்கிறது.

    ஆல்-எலக்ட்ரிக் மெர்சிடிஸ்-பென்ஸ் G-கிளாஸ் பற்றிய விவரங்களை பார்ப்போம்:

    வேரியன்ட்

    விலை

    400d ஏஎம்ஜி லைன்

    ரூ.2.55 கோடி

    ஏஎம்ஜி ஜி 63

    ரூ.3.60 கோடி

    எலக்ட்ரிக் ஜி-கிளாஸ் (ஜி580 எடிஷன் ஒன்)

    ரூ.3 கோடி

    அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

    தற்போதைக்கு ஜி-கிளாஸ் எலக்ட்ரிக் எடிஷன் ஒன் விலையை மெர்சிடிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே சமயத்தில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ஏற்கனவே 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை புக் செய்யப்பட்டு விட்டது

    வடிவமைப்பு: சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஜி-கிளாஸ் ஆக உள்ளது

    Mercedes-Benz EQG (G 580)

    எலக்ட்ரிக் ஜி-கிளாஸ் அதன் பாரம்பரிய பாக்ஸி எஸ்யூவி வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. வட்ட வடிவ LED டிஆர்எல்கள் மற்றும் அடாப்டிவ் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் 84 தனிப்பட்ட LED களும் உள்ளன. இருப்பினும் இது சில EV-குறிப்பிட்ட வடிவமைப்பு எலமென்ட்களையும் கொண்டுள்ளது. அதாவது ஒளிரும் சுற்றுப்புறத்துடன் கூடிய குளோஸ்டு பிளாக் கிரில் மற்றும் ஏர்டேம்களுக்கான புதிய மெஷ் கிரில் கொண்ட புதிய வடிவிலான பம்பர் ஆகியவை உள்ளன. இது 18-இன்ச் பிளாக்டு-அவுட் அலாய் வீல்களும் உள்ளன. இது எஸ்யூவி AMG வேரியன்ட்டில் 20-இன்ச் வரை அப்டேட் செய்து கொள்ளலாம். 

    பின்புறம் ஸ்டாண்டர்டான ஜி-கிளாஸுடன் தெளிவான ஒற்றுமையைக் காட்டுகிறது மற்றும் வழக்கமான மாடலின் ஸ்பேர் வீலுக்கு பதிலாக சார்ஜர்களை வைப்பதற்காக ஸ்கொயர் டெயில்கேட்-மவுண்டட் ஹவுசிங் மூலம் தேர்வு செய்யலாம். 

    வழக்கமான ஜி வேகன் கேபின்

    Mercedes-Benz EQG (G 580) cabin

    வெளிப்புறத்தைப் போலவே ஜி-கிளாஸ் எலக்ட்ரிக் காரின் உட்புறமும் ஜி-கிளாஸின் வழக்கமான ICE பதிப்பைப் போலவே இருக்கும்.  இது ஆல் பிளாக் தீம், டச் ஹாப்டிக் கன்ட்ரோல்களுடன் கூடிய மெர்சிடிஸின் சமீபத்திய மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், ஏசி வென்ட்களுக்கான ஸ்கொயர்-ஆஃப் ஹவுசிங்ஸ் மற்றும் பிளாக் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

    டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளேவுக்கு ஒன்று), மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆகியவை அடங்கும். இது டூயல் 11.6-இன்ச் பின்புற ஸ்கிரீன்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பர்மெஸ்டர் 3D சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

    பல ஏர்பேக்குகள், லேன்-கீப் அசிஸ்ட், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) மற்றும் டிரைவர் அட்டென்டிவ்னெஸ் வார்னிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன. இது 360 டிகிரி கேமரா மற்றும் டிராஃபிக் சைன் அசிஸ்ட் உடன் வருகிறது.

    குவாட் மோட்டார் செட்டப் 1000 Nm அவுட்புட்டை கொடுக்கிறது

    மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எலக்ட்ரிக் எலக்ட்ரிக் எஸ்யூவியில் 116 கிலோவாட் (பயன்படுத்தக்கூடிய) பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:

    பேட்டரி பேக்

    116 kWh (பயன்படுத்தக்கூடியது)

    கிளைம்டு ரேஞ்ச்

    455 கி.மீ வரை (WLTP)

    எலக்ட்ரிக் மோட்டார்கள்

    4 (ஒவ்வொரு சக்கரத்திலும் ஒன்று)

    டிரைவ் டைப்

    ஆல்-வீல் டிரைவ் (AWD)

    பவர்

    587 PS

    டார்க்

    1164 Nm

    ஜி-கிளாஸ் எலெக்ட்ரிக் 3 டன்களுக்கு மேல் எடை கொண்டதாக இருந்தாலும் கூட வெறும் 4.7 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை இது எட்டி விடும். காரின் 3 டிரைவ் மோடுகள் உள்ளன - கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் இன்டிவிஜுவல் - இரண்டு ஆஃப்ரோடு மோடுகள்: டிரெயில் மற்றும் ராக்.

    ஒரு திறமையான ஆஃப்-ரோடர்

    Mercedes-Benz EQG (G 580) rear

    எலக்ட்ரிக் ஜி-கிளாஸ் விர்ச்சுவல் டிஃபெரென்ஷியல் லாக்குகளுக்காக டார்க் வெக்டரிங்கை பயன்படுத்துகிறது. இது ஒவ்வொரு சக்கரத்திற்கும் துல்லியமான டார்க்கை கொடுக்க உதவுகிறது. இது கடினமான சூழ்நிலைகளில் காரை கடந்து செல்ல உதவி செய்கிறது. இது நான்கு எலக்ட்ரிக் மோட்டார்கள், ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒன்று, ஒவ்வொரு மோட்டாரும் அதன் சொந்த கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் திறனுக்காக ஸ்விட்ச்சபிள் லோ-ரேஞ்ச் செட்டப்பை உள்ளடக்கியது. ஜி-கிளாஸ் எலக்ட்ரிக்கின் மிகவும் ஈர்க்கக்கூடிய வசதிகளில் ஒன்று 'ஜி-டர்ன்.' இந்த தனித்துவமான செயல்பாட்டில் மூலம்  எலக்ட்ரிக் எஸ்யூவி -யை நின்ற இடத்தில் சுழற்ற அனுமதிக்கிறது. ஒரு போலவே 360 டிகிரி ரொட்டேட்டிங்கையும் செய்கிறது. ஜி வேகன் எலக்ட்ரிக் 850 மிமீ வாட்டர் வேடிங் திறனை கொண்டுள்ளது.

    போட்டியாளர்கள்

    மெர்சிடிஸ்-பென்ஸ் G-கிளாஸ் ஆனது மெர்சிடிஸ்-பென்ஸ் G-கிளாஸ், ஜீப் ரேங்லர் மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆகியவற்றுக்கு எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Mercedes-Benz ஜி கிளாஸ் எலக்ட்ரிக்

    explore மேலும் on மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience