Mercedes-Benz EQE எஸ்யூவி ரூ. 1.39 கோடி விலையில் வெளியிடப்பட்டது
மெர்சிடிஸ் பென்ஸ் EQE எலக்ட்ரிக் எஸ்யூவி ஒரே ஒரு ஃபுல்லி-லோடட் வேரியண்டில் வருகிறது. இந்த கார் 550 கிமீ வரை தூரம் வரை செல்லும் என மெர்சிடிஸ் உறுதியளிக்கிறது.
-
EQE எஸ்யூவி ஆனது ஆல்-வீல் டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னுடன் இணைக்கப்பட்ட 90.56kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது.
-
இது 408PS மற்றும் 858 Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது, மேலும் 210 கிமீ/மணி என்ற அதிகபட்ச வேகத்தைக் கொண்டுள்ளது.
-
உள்ளே, EQE எலக்ட்ரிக் எஸ்யூவி 56 -இன்ச் MBUX ஹைப்பர்ஸ்கிரீன் அமைப்பை கொண்டுள்ளது.
-
9 ஏர்பேக்குகள், டிரான்ஸ்பரன்ட் பானட் அம்சத்துடன் கூடிய 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
-
இது 10 வருட பேட்டரி உத்தரவாதத்துடன் வருகிறது, இதுவரை வேறு எந்த நிறுவனத்தாலும் EV -க்கு இது போன்ற உத்தரவாதம் வழங்கப்படுவதில்லை.
EQB 3-ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் EQS எலக்ட்ரிக் செடான் ஆகிய கார்களை தொடர்ந்து மெர்சிடிஸ் - பென்ஸ் EQE எலக்ட்ரிக் எஸ்யூவி இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் மூன்றாவது ஆல்-எலக்ட்ரிக் காராக இது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் ஒரே EQE 500 4MATIC என்ற ஒரு ஃபுல்லி லோடட் வேரியண்டில் கிடைக்கிறது - அறிமுக விலையாக ரூ. 1.39 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக்-மெர்க் எஸ்யூவி -யில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.
அடையாளம் காணக்கூடிய EQ வடிவமைப்பு
மெர்சிடிஸ் - பென்ஸ் EQE எலக்ட்ரிக் எஸ்யூவியின் வடிவமைப்பு, ஜெர்மன் கார் தயாரிப்பாளரின் பிற மின்சார கார்களில் இருக்கக்கூடிய சமீபத்திய EQ ஸ்டைலிங் -கை உள்ளடக்கியது. முன்புறத்தில், இணைக்கப்பட்ட LED ஸ்ட்ரிப் மற்றும் அதன் மையத்தில் மெர்சிடிஸ் லோகோவுடன் நட்சத்திரம் போன்ற வடிவத்துடன் மையமாக பிளாக் கிரில் உள்ளது. இந்த மூடிய கிரில் நேர்த்தியான தோற்றமளிக்கும் LED ஹெட்லைட்களுடன் இணைகிறது, மேலும் கீழே மூடப்பட்ட நிலையில் ஏர் டேம் கொடுக்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் எஸ்யூவி ஏரோடைனமிக் -கிற்கு வசதியாக சாய்வான கூரை மற்றும் குறைந்த மடிப்புகளுடன் நேர்த்தியான தோற்றத்தை கொண்டுள்ளது. EQE எலக்ட்ரிக் எஸ்யூவி ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹாண்டில் மற்றும் ஏரோடைனமிக் -கிற்கு ஏற்ற வகையில் 21-இன்ச் அலாய் வீல்களை பெறுகிறது. கூடுதலாக, கிளாடிங் வீல் ஆர்ச்களை சுற்றி கொடுக்கப்பட்டுள்ளது, இது EQE -யின் ஒட்டுமொத்த எஸ்யூவி தோற்றத்தை மேம்படுத்துகிறது. EQE எலக்ட்ரிக் எஸ்யூவியின் பின்புறத்தில், மற்ற EQ மாடல்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட மற்றொரு வடிவமைப்பு, கனெக்டட் LED டெயில் லேம்ப் செட்டப்பின் டிஸைன் எலமென்ட் ஆகும் இது அனைவரும் உற்று நோக்கும் வகையில் உள்ளது.
மேலும் படிக்க: 2023 Mercedes-Benz GLC: அறிமுகம் -தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
EQE எஸ்யூவி -யின் உள்ளே
வெளிப்புறத்தைப் போலவே, மெர்சிடிஸ் EQE எஸ்யூவி -யின் உட்புறமும் மற்ற மின்சார மெர்சிடிஸ் மாடல்களில் காணப்படும் அதே வடிவமைப்பு பாணியை இதிலும் பின்பற்றுகிறது. கேபினின் முக்கிய சிறப்பம்சமாக 56--யின்ச் MBUX ஹைப்பர்ஸ்கிரீன் செட்டப் உள்ளது, இதில் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, சென்ட்ரல் -யின்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் முன்பக்க பயணிகள் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். டால்பி அட்மோஸுடன் கூடிய 15-ஸ்பீக்கர் 750W பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், ஆக்டிவ் ஆம்பியன்ட் லைட்டிங், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை இந்த காரின் கேபினில் உள்ளா வேறு சில குறிப்பிடத்தக்க வசதிகளாகும்.
9 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டிரான்ஸ்பரன்ட் பானட் உடன் கூடிய 360 டிகிரி கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன . எலக்ட்ரிக் எஸ்யூவி -யானது லேன் கீப் அசிஸ்ட், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) களை கொண்டுள்ளது. இது ஒரு ப்ரீ-சேஃப் அம்சத்துடன் வருகிறது, இது விபத்தின் போது ஏற்படும் காயங்களை பெருமளவில் தடுக்க, அவசரகால சூழ்நிலையில் பயணிகளை கேபினின் நடுப்பகுதிக்கு மாற்றுகிறது.
மேலும் படிக்க:
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
EQE எலக்ட்ரிக் எஸ்யூவி -யானது 90.56kWh பேட்டரி பேக்குடன் வருகிறது, மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேரியன்ட் |
EQE 500 4MATIC |
பேட்டரி |
90.56kWh |
டிரைவ்டிரெய்ன் |
AWD |
பவர்/டார்க் |
408PS/ 858Nm |
உரிமைகோரப்பட்ட ரேஞ்ச் (WLTP) |
550 கிமீ வரை |
ஆக்சலரேஷன் 0-100 (கி.மீ.) |
4.9 வினாடிகள் |
EQE எலக்ட்ரிக் எஸ்யூவி இரண்டு சார்ஜிங் ஆப்ஷன்களை சப்போர்ட் செய்கிறது: ஒரு 11 kW AC மற்றும் 170kW DC ஃபாஸ்ட் சார்ஜிங். ஃபாஸ்ட் சார்ஜிங் மூலமாக 30 நிமிடங்களுக்குள் EQE -யின் பேட்டரியை 10 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் பணம் செலுத்தினால், மெர்சிடிஸ் - பென்ஸ் வாங்குபவர் தேர்ந்தெடுக்கும் இடத்தில் (வீடு, அலுவலகம் போன்றவை) சார்ஜ் வசதிக்காக வால்பாக்ஸ் சார்ஜரையும் நிறுவும். மேலும், மெர்சிடிஸ் 60kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் அல்லது 180kW DC அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்கக்கூடிய 140 க்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்கள் நாடு முழுவதும் இருக்கின்றன.
சிறப்பான அம்சங்களுடன் இந்த சொகுசு எஸ்யூவி வருகிறது, மேலும் EQE ஆனது மேம்பட்ட சவாரி தரத்திற்காக AIRMATIC ஆக்டிவ் சஸ்பென்ஷனுடன் வருகிறது.
மெர்சிடிஸ் - பென்ஸ் EQE காருக்கு 10 வருட பேட்டரி உத்தரவாதத்தை வழங்குகிறது, இது வேறு எந்தவொரு உற்பத்தியாளராலும் EV -யைப் பொறுத்தவரையில் வழங்கப்படும் அதிகபட்ச உத்தரவாதக் காலமாகும். மேலும், EQE எலக்ட்ரிக் எஸ்யூவி -க்கான சர்வீஸ் இடைவெளி 2 ஆண்டுகள்/30,000 கிமீ ஆகும். இதற்கு இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் மாடலை போல அடிக்கடி சர்வீஸ் தேவைப்படாது, காரணம் அதில் அதிக எண்ணிக்கையிலான நகரும் பாகங்கள் மற்றும் ஃபுளூயிட்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சர்வீஸ் தேவைப்படும்.
போட்டியாளர்கள்
மெர்சிடிஸ் - பென்ஸ் EQE எலக்ட்ரிக் எஸ்யூவி ஆடி Q8 e-tron, BMW iX, மற்றும் ஜாகுவார் i-Pace போன்றவற்றுக்கு விலை உயர்ந்த மாற்றாக வருகிறது.
மேலும் படிக்க: மெர்சிடிஸ் - பென்ஸ் EQE எஸ்யூவி ஆட்டோமெட்டிக்