• English
    • Login / Register

    Mercedes-Benz EQB ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் ரூ. 70.90 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 5 இருக்கை அமைப்பிலும் இப்போது கிடைக்கிறது

    மெர்சிடீஸ் இக்யூபி 2022-2024 க்காக ஜூலை 09, 2024 06:30 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 30 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    மெர்சிடிஸ்-பென்ஸ் EQB ஃபேஸ்லிஃப்ட் இப்போது EQB 350 4MATIC AMG லைன் (5-சீட்டர்) மற்றும் EQB 250+ (7-சீட்டர்) என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    • அதன் புதிய EQB 250+ வேரியன்ட் ஒரு பெரிய 70.5 kWh பேட்டரி பேக்கை 535 கிமீ (WLTP உரிமைகோரல்) வரை அதிக டிரைவிங் ரேஞ்சை கொடுக்கக்கூடியது.

    • புதுப்பிக்கப்பட்ட EQB 350 4MATIC (5-சீட்டர்) அதே 66.5 kWh பேட்டரி பேக்குடன் தொடர்கிறது.

    • EQB காரின் 5-சீட்டர் வேரியன்ட் AMG லைன் டிரிமில் உள்ளேயும் வெளியேயும் ஸ்போர்ட்டியர் வடிவமைப்புக்கான விஷயங்களை பெறுகிறது.

    • 710W 12-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 

    • EQB இப்போது அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிளையும் பெறுகிறது.

    மெர்சிடிஸ்-பென்ஸ் EQB டிசம்பர் 2022 முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்றும் சமீபத்தில் மிட்லைஃப் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் இப்போது EQB எலக்ட்ரிக் எஸ்யூவியை 5-சீட்டர் ஆப்ஷனில் கொடுக்கிறது. இது AMG லைன் வடிவமைப்பு எலமென்ட்களை உள்ளேயும் வெளியேயும் பெறுகிறது. மறுபுறம் EQB காரின் 7-சீட்டர் வேரியன்ட் இப்போது அதிக டிரைவிங் ரேஞ்ச் -க்கான ஒரு பெரிய பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. 2024 மெர்சிடிஸ்-பென்ஸ் EQB -க்கான வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் இதோ.

    வேரியன்ட்

    விலை

    EQB 250+ 7-சீட்டர்

    ரூ.70.90 லட்சம்

    EQB 350 4MATIC AMG லைன் 5-சீட்டர்

    ரூ.77.50 லட்சம்

    விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

    EQB காரின் 5 இருக்கைகள் கொண்ட AMG லைன் வேரியன்ட்டின் விலை 7 இருக்கைகள் கொண்ட வேரியன்ட்டை விட ரூ.6.6 லட்சம் அதிகம்.

    EQB 5-சீட்டரில் புதிதாக என்ன இருக்கிறது?

    EQB எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட EQB 350 4MATIC 5-சீட்டர் AMG லைன் வேரியன்ட் உள்ளேயும் வெளியேயும் ஸ்போர்டியர் டிஸைன் எலமென்ட்களை கொண்டுள்ளது. வெளிப்புற ஹைலைட்களில் ஒரு ஸ்டார் வடிவத்துடன் அப்டேட்டட் குளோஸ்டு பிளாக் முன் கிரில் மற்றும் புதிய வடிவிலான முன் பம்பர் ஆகியவை அடங்கும். பக்கத்தில் இது புதிய 19-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. EQB 350 இப்போது ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஸ்போர்ட்ஸ் சீட்களுடன் ஆல் பிளாக் இன்ட்டீரியரை பெறுகிறது. 

    புதிய வசதிகள்

    2024 EQB காரில் உள்ள வசதிகளில் லேட்டஸ்ட் ஜெனரேஷன் MBUX Gen 2 டிரைவிங் மோடு உடன் இரண்டு 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று) அடங்கும். 710W 12-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகிய வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. EQB 350 இப்போது டிஸ்ட்ரோனிக் ஆக்டிவ் டிஸ்டன்ஸ் அசிஸ்ட் மற்றும் ஆக்டிவ் லேன் கீப் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகிய வசதிகளை பெறுகிறது. 

    மேலும் பார்க்க: மெர்சிடிஸ்-பென்ஸ் EQA கார் ரூ.66 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    பேட்டரி பேக் & ரேஞ்ச்

    2024 EQB இப்போது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மேலும் அவற்றின் விவரங்கள் கீழே உள்ளன:

    வேரியன்ட்

    EQB 250+

    EQB 350 4MATIC

    பேட்டரி பேக்

    70.5 kWh

    66.5 kWh

    பவர்

    190 PS

    292 PS

    டார்க்

    385 Nm

    520 Nm

    ரேஞ்ச் (WLTP)

    535 கிமீ வரை

    447 கிமீ வரை

    டிரைவ் வேரியன்ட்

    2-வீல் டிரைவ் (2WD)

    ஆல்-வீல் டிரைவ் (AWD)

    EQB இன் 7-சீட்டர் பதிப்பு ஒரு பெரிய 70.5 kWh பேட்டரி பேக்கை பெறுகிறது. இது அதன் 5-சீட்டர் வேரியன்ட் உடன் ஒப்பிடும்போது 88 கி.மீ அதிக டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது. 

    போட்டியாளர்கள்

    2024 மெர்சிடிஸ்-பென்ஸ் EQB ஆனது வோல்வோ XC40 ரீசார்ஜ், வோல்வோ C40 ரீசார்ஜ், மற்றும் BMW iX1 ஆகியவற்றுக்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும். 

    ஆட்டோமோட்டிவ் உலகில் நடப்பவை தொடர்பான உடனடி அப்டேட் வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.

    was this article helpful ?

    Write your Comment on Mercedes-Benz இக்யூபி 2022-2024

    explore similar கார்கள்

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    related news

      டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

      • பிரபலமானவை
      • உபகமிங்
      ×
      We need your சிட்டி to customize your experience