மெர்சிடீஸ் தனது எஎம்ஜி ஜிடி கார்களை நவம்பர் 24, 2015 ல் அறிமுகப்படுத்துகிறது.
மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி க்காக அக்டோபர் 28, 2015 02:00 pm அன்று அபிஜித் ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் முன்னணி சூப்பர் கார் AMG – GT நவம்பர் 24, 2015 ல் அறிமுகமாகிறது. இந்த இரண்டு பேர் மட்டும் ( டூ - சீட்டர்) அமர்ந்து செல்லக்கூடிய இந்த சூப்பர் கார் மணிக்கு 0 – 100 கி.மீ வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் தொட்டுவிடுவது மட்டுமல்லாமல் அதிகபட்சமாக மணிக்கு 305 கி. மீ வேகத்தில் பாய்ந்து செல்லும் வல்லமை கொண்டது. இந்த விவரங்கள் இந்தியாவில் அறிமுகமாகப் போகும் மாடலான AMG வரிசை கார்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த AMG GT S கார்களின் விவரங்கள் என்பது விசேஷ செய்தியாகும்.
க்லேசிக் GT கார் வடிவமைப்பை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் நீளமான உடல் அமைப்பும், அமரும் இடம் கச்சிதமாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளின் அமைப்பு மற்றும் காரின் உடல் பகுதியில் உள்ள வளைவுகள் ஒரு ரெட்ரோ சூப்பர் காரை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. AMG GT காரின் உட்புறம் ஏராளமான ரெட்ரோ ஸ்விட்ச் பொருத்தப்பட்டும் , உயர்ரக அலுமினிய ட்ரிம் பயன்படுத்தப்பட்டும் ஒரு விமானத்தின் உட்புறத்திற்கு இணையாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள அசாத்தியமான 503 பிஎச்பி சக்தியை வெளியிடும் 4.0 லிட்டர் V8 என்ஜின் மூலம் இந்த AMG GT S கார்கள் சக்தியூட்டப்பட உள்ளன.
நாம் மேலே குறிப்பிட்டுள்ள என்ஜின் சம்மந்தமான விவரங்களை காட்டிலும் சிறப்பான பொறியியல் தொழில்நுட்பங்கள் இந்த கார்கள் சீறிபாய்ந்து செல்ல உதவிகரமாக உள்ளது. உதாரணத்திற்கு , புவி ஈர்ப்பு மையத்தை கீழிறக்கி என்ஜினை நன்கு கீழாக பொருந்தச் செய்யும் சம்ப் லூப்ரிகேஷன் சிஸ்டம் , சட்டென்று சக்தியை கடத்தும் விதத்தில் இரண்டு ஹெட் நடுவில் அமைக்கப்பட்டுள்ள டர்போ சார்ஜர்கள் , காரின் எடை சீராக அதன் உடல் பகுதி முழுதும் பரவி இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் இரட்டை க்ளட்ச் பாக்ஸ் பின்புற ஏக்ஸலுக்கு மேலே பொருத்தப்பட்டிருப்பது போன்ற தொழில்நுட்ப அம்சங்களை சொல்லலாம்.
இதையும் படியுங்கள் : சிஎல்எ தான் மெர்சிடீஸ் நிறுவனத்தின் அதிகமாக விற்பனை ஆகும் மாடல் : விற்பனை புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டது.
AMG GT கார்களின் விலை இந்திய ரூபாயில் 2.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும், போர்ஷ் 911 வரிசை கார்கள் மற்றும் ஜேகுவார் F டைப் கார்களுடன் போட்டியிடும் என்றும் தெரிகிறது.
பென்ஸ் இந்த வருடம் 15 கார்களை அறிமுகப்படுத்துவதாக ஏற்கனவே சொல்லி இருந்ததை நாம் அறிவோம். அந்த திட்டத்தில் பென்ஸ் நிறுவனத்தினர் மிகவும் உறுதியுடன் உள்ளனர் என்பதற்கு சான்றாக இந்த வருடத்திய 14 ஆவது அறிமுகமாக, இதுவரை அறிமுகமான கார்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த இந்த AMG GT கார்கள் அறிமுகமாக உள்ளன.
மெர்சிடீஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்கள் :
- மெர்சிடீஸ்-பென்ஸ் GLE எஸ்யுவி வாகனங்கள் 58.9 லட்சங்களுக்கு அறிமுகம்
- மெர்சிடீஸ்-பென்ஸ் C63 S AMG ரூ. 1.3 கோடிக்கு அறிமுகம்!