சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

லாஸ் ஏஞ்சில்ஸ் மோட்டார் ஷோவில், புதுப்பிக்கப்பட்ட மெர்சிடிஸ் SL வெளியிடப்பட்டது

published on நவ 19, 2015 05:35 pm by manish

ஜெய்ப்பூர்:

தற்போது நடைபெற்று வரும் லாஸ் ஏஞ்சில்ஸ் மோட்டார் ஷோவில் தனது புதுப்பிக்கப்பட்ட SL காரை, மெர்சிடிஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது. இந்த காரில் பல்வேறு அழகியல் மேம்பாடுகளை கொண்டுள்ளது. இதில் புதிய அலாய் வீல்கள், நிறத் திட்டங்கள் மற்றும் பம்பர்கள் ஆகியவற்றை உட்படுத்தி, புதுப்பிக்கப்பட்ட வகைப்படுத்தலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேம்பாடுகள் வெறும் மேலோட்டமானதாக அமையாமல், புதுப்பிக்கப்பட்ட காரில் புதிய உபகரணங்களின் அம்சங்களின் ஒரு குவியலை கொண்டுள்ளது. இந்த கேட்ஜெட்டில், காரை ஓட்டும் போதும் ஸிரியை பயன்படுத்த கூடிய வகையில், உங்களின் ஐபோனுக்கு ஏற்ற கார் ப்ளே-யை கொண்டுள்ளது. ஓட்டுவதை குறித்து பார்க்கும் போது, இந்த காரை மணிக்கு 40 கி.மீ வேகத்தில் ஓட்டும் போதே, காரின் மேற்கூரையை விரிக்கவும், சுருக்கவும் கூடிய அம்சத்தை பெற்றுள்ளது.

டிரைவருக்கான பே பகுதியில், காரின் ஆக்ஸிலரேஷன், ஜிஃபோர்ஸ் மற்றும் பல காரியங்களை குறித்த புள்ளி விபரங்களை டிஸ்ப்ளேயில் காட்டப்படுகிறது. இந்த SL-யில் மெர்சிடிஸ் ஆக்டிவ் பாடி கன்ட்ரோலையும் கொண்டுள்ளது. இதன் மூலம் காரின் கையாளும் தன்மைகளை அதிகரிக்க முடியும். மேலும் நாம் ஆக்சிலரேஷன் கொடுக்கும் போது, ABC-யின் மூலம் 13mm காரை தாழ்வடைய செய்து, ஏரோடைனாமிக்ஸை அதிகரித்து, காரை சிறப்பான முறையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவுகிறது. பிரேக் அசிஸ்ட் மற்றும் செல்ப் பார்க்கிங் உள்ளிட்டவை இதில் உள்ள மற்ற உயர்தர அம்சங்கள் ஆகும். மெர்சிடிஸில் உள்ள ‘ஸ்டீயரிங் பைலட்' என்ற அமைப்புடன் சேர்ந்து இயங்கும் க்ரூஸ் கன்ட்ரோல் மூலம் தனிச்சிறப்பை பெற்று, கார் தொடர்ந்து லேனில் நிலைநிற்க உதவுகிறது.

அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்த்தால், இந்த காரில் உள்ள என்ஜின் தேர்வுகளில் உட்படும் V6 (SL400) மூலம் 362bhp ஆற்றலையும், ஒரு V8 (SL500) வகையின் மூலம் 449bhp ஆற்றலையும் பெறலாம். இவ்விரு வகையிலான கார்களும் AMG அவதாரத்தை எடுக்கும் போது, 577bhp ஆற்றலை பெற முடிகிறது. அதே நேரத்தில் SL63 மற்றும் SL65 ஆகியவற்றில் ட்வின்-டர்போசார்ஜ்டு V12-யை கொண்டு, 621bhp-யை வெளியிடுகிறது. SL65 கூட சிறப்பான ஆக்சிலரேஷன் புள்ளி விபரங்களை கொண்டு, 4 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் 0-வில் இருந்து மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டி சேர முடிகிறது. மேற்கூறிய எல்லா கார்களிலும் மின்னூட்ட முறையில் கட்டுப்படுத்தப்பட்ட (எலக்ட்ரிக்கலி லிமிடேட்) அதிகபட்ச வேகமாக, மணிக்கு 250 கி.மீ. வரை செல்ல முடியும். இதில் AMG வகைகளில் ‘டிரைவர்ஸ் பேக்கேஜ்-ஜை தேர்வு செய்வதன் மூலம் மேற்கூறிய வேகத்தை மணிக்கு 300 கி.மீ. ஆக கூட்ட முடியும்.

இதையும் படியுங்கள்

m
வெளியிட்டவர்

manish

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை