மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா C63 S AMG செடான் வகை கார்களை இன்று அறிமுகம் செய்கிறது .
modified on செப் 03, 2015 01:40 pm by konark
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
மும்பை : மெர்சிடீஸ் பென்ஸ் தொடர்ந்து வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. இந்த வரிசையில் இன்று தன்னுடைய இன்னொரு தயாரிப்பை அறிமுகப்படுத்துகிறது.. C63 S AMG செடான் வகை கார் இன்று அறிமுகமாகிறது.. இந்த செடான் AMG GT S வாகனத்தில் உள்ளது போன்ற அதே 4.0 லிட்டர் இரட்டை - டர்போ V8 என்ஜின் பொருத்தப்பட்டு வெளிவந்துள்ளது. .
இந்த இஞ்சின் அசாத்தியமான 503 bhp குதிரை சக்தி மற்றும் 700 NM என்ற அளவிலான இழுவை திறனையும் வெளியிட வல்லது. இந்த இஞ்சின் 7 - வேக AMG ஸ்பீட்ஷிப்ட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு கியர் மாற்றும் செயலை மில்லி செகண்ட் நேரத்தையும் விட குறைவான நேரத்தில் செய்ய வைக்கிறது .
இந்த கார் முதல் முதலில் பாரிஸ் மோட்டார் ஷோவில் தான் காட்சிக்கு வைக்கப்பட்டது. தன்னுடைய 15 ல் 15 திட்டத்தின் படி பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் 11 ஆவது கார் இதுவாகும்.
இந்த புதிய மெர்சிடீஸ் பென்ஸ் C 63 S கார்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட MB டிசைனோ என்ற முறையின் படி உட்புறத்தில் உள்ள தோலினால் ஆன பகுதிக்கு தங்கள் விருபத்திற்கு ஏற்ற வண்ணகலவையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். டேஷ்போர்ட் மற்றும் இருக்கை வண்ணங்களையும் தங்களது தனிப்பட்ட ரசனைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.
இந்த C 63 S 0 -100 கி.மீ வேகத்தை வெறும் நான்கே நான்கு நொடியில் அடைவது மட்டுமல்லாமல் அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன் கொண்டது. . உட்புறத்தில் பந்தய கார்களை போன்ற இருக்கை வசதி, ஏராளமான கார்பன் பைபர் மற்றும் அல்காண்டரா தோல் பயன்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது.
0 out of 0 found this helpful