• English
  • Login / Register

இந்தியாவிற்கான புதிய பெட்ரோல் என்ஜின்களை, லேண்ட் ரோவர் கொண்டு வருகிறது

published on ஜனவரி 20, 2016 05:34 pm by konark

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டெல்லி- NCR பகுதிகளில் 2,000cc கன திறன் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட டீசல் வாகனங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதை சமாளிக்கும் வகையில், டாடா மோட்டார்ஸிற்கு சொந்தமான லேண்ட் ரோவர் நிறுவனம், அதன் சர்வதேச அளவிலான பெட்ரோல் என்ஜின்களின் வரிசையில், ஒரு 2-லிட்டர் இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் மற்றும் ஒரு 3-லிட்டர் V6 மோட்டார் ஆகியவற்றை கொண்டு வர உள்ளது.

இந்த 2-லிட்டர் பெட்ரோல் என்ஜினை ரேஞ்ச் ரோவர் இவோக் வாகனத்தில் பயன்படுத்தி, ஒரு 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல அதிக சக்திவாய்ந்த 3-லிட்டர் V6-யைக் கொண்டு, ஒரு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்று டிஸ்கவரி, ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் ஆகியவை இயக்கப்பட வாய்ப்புள்ளது. லேண்ட் ரோவரின் குறிப்பிட்ட சில மாடல்களுக்கு 5-லிட்டர் சூப்பர்சார்ஜ்டு V8-யை, தற்போதைய முதலீடாக கொண்டுள்ளது. இதன் தற்போதைய முதலீட்டில், ரேஞ்ச் ரோவர் இவோக், டிஸ்கவரி, டிஸ்கவரி ஸ்போர்ட், ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச் ரோவர் LWB ஆகியவை உட்படுகின்றன.

கடந்தாண்டில், இந்நிறுவனத்தின் மூலம் டிஸ்கவரி ஸ்போர்ட், ரூ.46 லட்சம் என்ற மிகவும் போட்டியை ஏற்படும் விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் இது ஒரு 2.2-லிட்டர் டீசல் என்ஜினை பயன்படுத்துவதால், டெல்லி NCR பகுதியில் நீங்கள் இந்த வாகனத்தை தற்போது வாங்க முடியாது. இந்த டீசல் தடையினால் இந்திய கார் தயாரிப்பாளரான மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் விளைவாக, அது ஒரு புதிய 1.9-லிட்டர் டீசல் என்ஜினை வடிவமைத்து வருகிறது. இதை ஸ்கார்பியோ மற்றும் XUV5OO ஆகியவற்றில் பொருத்த உள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து ஜாகுவார் லேண்ட் ரோவரை, டாடா மோட்டார்ஸ் வாங்கியது. அதன்பிறகு கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த பிரிட்டிஷ் வாகனத் தயாரிப்பு நிறுவனம், நம் நாட்டு சந்தைக்குள் நுழைந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 4,87,065 வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம், இதுவரை இல்லாத உயர்ந்த சர்வதேச விற்பனை புள்ளி விபரத்தை பதிவு செய்தது. இது அதன் முந்தைய ஆண்டின் விற்பனையை விட 5 சதவீதம் அதிகம் ஆகும்.

மேலும் வாசிக்க 

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience