அமெரிக்க வாகன சந்தையில் லேண்ட் ரோவர் முதல் இடம் , வளர்ச்சி 37%
published on ஜனவரி 08, 2016 10:22 am by sumit
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா மோட்டார்ஸ் லேண்ட் ரோவர் நிறுவனம் யு.எஸ். வாகன சந்தையில் அசாத்திய வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் 37% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 70,582 வாகனங்களை கடந்த ஆண்டு விற்பனை செய்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை, 2015 ஆம் ஆண்டிற்கான விற்பனை வளர்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது லேண்ட் ரோவர் நிறுவனம்.
மொத்த விற்பனையான வாகனங்களில் டிஸ்கவரி ஸ்போர்ட் வாகனங்களின் பங்களிப்பு 10% ஆகும். ஏராளமான மாடல்கள் கொண்ட லேண்ட் ரோவர் வரிசையில் , ஏதோ ஒரு மூலையில் உள்ள இந்த டிஸ்கவரி ஸ்போர்ட் கார்கள், கடந்த வருடம் அமெரிக்க சந்தையில் லேண்ட் ரோவர் நிறுவனம் முதல் இடத்தைப் பிடிக்க பெரியதொரு காரணமாக விளங்கியது. வெறும் $37,455 விலையுடன் இந்த கார்கள் விற்பனை செய்யப்பட்டன. “ முற்றிலும் புதிய வாடிக்கையாளர்களை எங்கள் லேண்ட் ரோவர் ப்ரேன்ட் பக்கம் இந்த டிஸ்கவரி ஸ்போர்ட் கவர்ந்திழுக்க உதவியது " என்று ஜாகுவார் லேண்ட் ரோவர் ( வட அமெரிக்க பிராந்தியத்தின்) CEO ஜோ எபர்ஹார்ட் ஒப்புக் கொண்டுள்ளார். இதைத்தவிர கடந்த ஆண்டு அமெரிக்காவில் விற்பனையான மொத்த லேண்ட் ரோவர் வாகனத்தில் ரேன்ஜ் ரோவர் எவோக் மற்றும் ரேன்ஜ் ரோவர் வாகனங்களின் பங்களிப்பு முறையே 20 மற்றும் 25 சதவிகிதமாகும். ரேன்ஜ் ரோவர் இந்நிறுவனத்தின் மிக பிரபலமான தயாரிப்பாகும். இந்த ரேன்ஜ் ரோவர் அமெரிக்க சந்தையில் $85,000 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலே சொன்ன எண்ணிக்கைகள் மிகப்பெரியது இல்லை தான் என்றாலும் , தாங்கள் அதிகமான எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பதை விட சிறந்த , வாடிக்கையாளரை பெருமிதம் கொள்ள செய்யும் வாகனங்களை தயாரிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளோம். ஆடி, மெர்சிடீஸ் மற்றும் BMW நிறுவனங்கள் சந்தையில் ஏராளமான SUV வாகனங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வரும் நிலையில் , அந்த அளவுக்கு விலை கொடுத்து SUV வாகனங்களை வாங்கக் கூடிய வாடிக்கையாளர்கள் புதுமையை , தனித்துவத்தை தாங்கள் வாங்கும் வாகனங்களில் எதிர்பார்க்க துவங்கினர். ஆடி , மெர்சிடீஸ் மற்றும் BMW வெளியிடும் வாகனங்களைக் காட்டிலும் அதிகம் பிரபலமடையாத வாகனங்கள் மீதே வாடிக்கையாளர்களின் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது என்று கெவின் டைனன் என்ற ஒரு திறமையான ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார். “ "அனைவரும் ஒருவருக்கொருவர் கடும் போட்டியில் இருந்த போது வித்தியாசத்தை நாடி வாடிக்கையாளர்களின் எண்ணம் செல்லத் தொடங்கியது. லேண்ட் ரோவர் நிறுவனமும் , வாடிக்கையாளரின் இந்த ஈர்ப்பை புரிந்துக் கொண்டு தனது தயாரிப்புக்களின் தரத்தை பெருமளவு உயர்த்தி உள்ளது " என்று மேலும் பேசுகையில் அவர் கூறியுள்ளார்.
லேண்ட் ரோவரின் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த எபர்ஹார்ட் " மீண்டும் லேசாக பிரிட்டானியாவின் ஆதிக்கம் வந்துள்ளது " என்று கூறினார்.
மேலும் வாசிக்க