ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஸ்லோவாகியா நாட்டில் தொழிற்சாலை தொடங்குவது உறுதியானது .
published on டிசம்பர் 15, 2015 05:11 pm by akshit
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
டெல்லி : டாடாவிற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஸ்லோவாகியா நாட்டு அரசு அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின் தங்களது புதிய தொழிற்சாலை ஒன்றை ஸ்லோவாகியா நாட்டில் தொடங்குவது என முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்லோவாகியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நித்ரா நகரில் இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டு 2018 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக ஜாகுவார் நிறுவனம் அறிவித்துள்ளது.
2,800 பணியாளர்கள் நேரிடையாக இந்த தொழிற்சாலையில் நியமிக்க பட உள்ளனர். USD (அமெரிக்க டாலர்) 1.5 பில்லியன் முதலீடு செய்யப்பட உள்ளது. ஆரம்ப நிலையில் 1,50,000 வாகனங்கள் இங்கே தயாரிக்கப்படும் என்றாலும், இந்த தொழிற்சாலை முழு வீச்சில் செயல்பட தொடங்கும் போது 3,00,000 என்ற அளவுக்கு இந்த எண்ணிக்கை உயரும் என்று இந்த பிரிட்டன் நாட்டு கார் தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். தற்போது ஜேஎல்ஆர் நிறுவனம் பிரேசில் , சீனா ,இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தங்களது உலக தரம் வாய்ந்த கார்களை தயாரித்து வருகிறது. ஜாகுவார் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளில் ஒருவரான ரேல்ப் ஸ்மித் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் , “ ஸ்லோவாகியா நாட்டை எங்கள் ஜாகுவார் லேண்ட் ரோவர் குடும்பத்திற்குள் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம். இங்கிலாந்து, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் உள்ளது போன்றே எங்களது இந்த புதிய ஸ்லோவாகியா நாட்டு தொழிற்சாலையும் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டதாக இருக்கும் என்பது மட்டுமல்ல , எங்களது சர்வதேச வர்த்தக திட்ட விரிவாக்கத்தில் இந்த ஸ்லோவாகியா தொழிற்சாலை ஒரு முக்கிய நகர்வாக அமையும்" என்று கூறினார்.
ஜாகுவார் நிறுவனம் , முற்றிலும் புதிய அலுமினியம் கொண்டு உருவாக்கப்படும் வாகனங்களை இந்த தொழிற்சாலையில் தயாரிக்கும் என்று அறிவித்திருந்தாலும் , எந்தெந்த வாகனங்கள் அவ்வாறு தயாரிக்கப்படும் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் 2018 ஆம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் அடுத்த - தலைமுறை லேண்ட் ரோவர் டிபண்டர் வாகனங்கள் இங்கே தயாரிக்கப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது.
ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர், ராபர்ட் பிகோ, “ தங்களுடைய உலக தரம் வாய்ந்த தொழிற்சாலையை எங்கள் நாட்டில் தொடங்க ஜாகுவார் முடிவு செய்துள்ளது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எங்கள் நாட்டில் நிலவும் நிலையான மற்றும் வலுவான வர்த்தகம் செய்வதற்கான சூழல் முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கிறது என்பதையே இந்த ஜாகுவார் நிறுவனத்தின் முடிவு நமக்கு காட்டுகிறது . மேலும் ஸ்லோவாகியா நாட்டு நுணுக்கமான வேலைப்பாட்டு திறனும் இங்கிலாந்து நாட்டின் பொறியியல் அறிவும் இணைந்து அற்புதமான தயாரிப்புக்களை உலகிற்கு அளிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகி உள்ளது.
இதையும் படியுங்கள்