இசுசூ நிறுவனம் தனது உயர்மட்ட நிர்வாகிகளை மாற்றுகிறது
இசுசூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு சில உயர்மட்ட நிர்வாகிகளை மாற்றியுள்ளது. உயர்மட்ட நிர்வாகிகளின் பிரிவில், புதிய டெபுட்டி மேனேஜிங் டைரக்டர் மற்றும் புதிய டிவிஷன் COO ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை இந்நிறுவனம் நேற்று அறிவித்தது. 2016 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 –ஆம் தேதி முதல், இந்த மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன. தற்போது இசுசூ வர்த்தகப் பிரிவில் உள்ள, இசுசூ ஏசியா டிவிஷனில் ஜெனரல் மேனேஜராகப் பணிபுரியும் திரு. ஹிட்டோஷி கோனோ அவர்கள், புதிய டெபுட்டி மேனேஜிங் டைரக்டராகப் பதவி ஏற்பார். அதே நேரம், தற்போது டெபுட்டி மேனேஜிங் டைரக்டராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. ஷிகேரு வாகாபயாஷி அவர்கள், இனி ஜப்பானிய மிட்சுபீஷி கார்ப்பரேஷனின் இசுசூ வர்த்தக பிரிவின் டிவிஷன் COO –வாகப் பொறுப்பேர்ப்பர்.
புதிய நியமனத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ள திரு. வாகாபயாஷி, “இன்று வரை, இந்தியாவில் இசுஸூ நிறுவனத்தின் பயணம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்து வருகிறது. இந்தியாவில் இசுஸூ நிறுவனம் காலெடுத்து வைத்ததில் இருந்து, இன்று வரை இந்நிறுவனம் கடந்து வந்துள்ள ஏராளமான மைல்கற்களைப் பார்க்கும் போது நான் மிகவும் பிரம்மிப்படைகிறேன். இசுசூ நிறுவனம், மிகவும் குறுகிய காலத்திற்குள் இந்திய சந்தையின் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவியுள்ளது,” என்று கூறினார்.
திரு. ஹிட்டோஷி கோனோ தனது புதிய நியமனத்தைப் பற்றி குறிப்பிடும் போது, “இந்தியாவில் உள்ள இசுசூ குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில், இசுஸூவிற்கான எதிர்கால பாதையை, ஏற்கனவே திரு. வாகாபயாஷி அவர்கள் திறமையாக வகுத்துள்ளார். இந்தப் பதவியை ஏற்று, அவர் வகுத்துள்ள பாதையில் வரும் சவால்களைச் சமாளிக்க, நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் எங்களது திட்டம், இப்போது ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' (மேட் இன் இந்தியா) தயாரிப்புகளை இங்கேயே அறிமுகப்படுத்துவது என்ற, மிகவும் முக்கியமான கட்டத்தில் நுழைந்து கொண்டிருக்கிறது,” என்றார். மேலும், அவர், “இசுசூ, இந்தியாவில் மாபெரும் வெற்றியடையும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்றும் கூறினார்.
2016 ஆட்டோ எக்ஸ்போவில் இசுசூ நிறுவனம் கலந்து கொண்டு, தனது டி மேக்ஸ் வி க்ராஸ் வாகனத்தைக் காட்சிக்கு வைத்திருந்தது. இப்போதே ரூ. 15 லட்சங்கள் கொடுத்து, டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்அப் டிரக்கை நீங்கள் பிரைவேட் ரெஜிஸ்டிரேசன் செய்து கொள்ளலாம். இந்த ஆண்டின் நடுப் பகுதியில், இந்த டிரக் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாகசப் பயன்பாட்டு வாகனப் (அட்வென்ச்சர் யுடிலிட்டி வெஹிகில்) பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த டிரக்கை, சுமார் 130 bhp சக்தியை உற்பத்தி செய்யக் கூடிய உயர் அழுத்த CRDi இஞ்ஜின் இயக்குகிறது. வேரியபிள் ஜ்யோமெட்ரி டர்போ சார்ஜர் மற்றும் இன்டர்கூலர் வசதிகள் கொண்ட இந்த இஞ்ஜின், அதிகபட்சமாக 320 Nm என்ற அளவு டார்க்கை உற்பத்தி செய்கிறது. அது மட்டுமல்ல, இவற்றோடு 4x4 ட்ரைவ் அமைப்பும் இணைவதால், இந்த டிரக் எந்த விதமான நிலப்பரப்பிலும் தடை இல்லாமல் ஓடக்கூடிய திறன் வாய்ந்ததாக இருக்கிறது.
மேலும் வாசிக்க ஆட்டோ எக்ஸ்போ 2016 வெற்றிகரமாக நிறைவடைந்தது. மொத்தம் 6 லட்சம் பேர் கண்டு களித்தனர்.