• English
  • Login / Register

இந்தியாவில் புதிய நிறுவனத்தை இசுசு உருவாக்குகிறது

published on நவ 03, 2015 12:34 pm by konark for இசுசு எம்யூ 7

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டெல்லி:

ஜப்பானை சேர்ந்த இசுசு மோட்டார்ஸ் லிமிடேட் மூலம், இசுசு இன்ஜினியரிங் பிஸ்னஸ் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடேட் (IEBCI) என்ற ஒருங்கிணைந்த புதிய நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எல்லா வகையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளை கையாளுதல், இந்நிறுவனத்தின் சோர்ஸிங் தொடர்பான செயல்பாடுகள் ஆகியவற்றையும், அதனோடு கூட இசுசு மோட்டார்ஸ் இந்தியா (IMI) தயாரிப்புகளின் திறன் மற்றும் தரம் ஆகியவற்றின் நிலைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதல் ஆகிய பணிகளையும் மேற்கொள்ளும். மேலும் இந்த புதிய வியாபார யூனிட் மூலம் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் துவக்க நிலையிலேயே 70% வரை உள்ளூரில் பரவல்படுத்தவும், எதிர்காலத்தில் அதை முழுமைப்படுத்தவும் முடியும். அதேபோல இசுசுவின் சர்வதேச செயல்பாடுகளுக்கான மூலப் பாகங்களுக்கு சமர்ப்பணம் மிகுந்த மையமாகவும் IEBCI பணியாற்ற வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

D-மேக்ஸ் முதலீடுகளை இசுசு விரிவாக்கம் செய்கிறது

இசுசு மோட்டார்ஸ் இந்தியாவின் தற்போதைய நிர்வாக இயக்குனராக உள்ள நயோஹிரொ யாமாகுசி, இசுசு என்ஜினியரிங் பிஸ்னஸ் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடேட்டின் இயக்குநராகவும் செயல்படுவார். இசுசு மோட்டார்ஸ் இந்தியாவின் உள்ளூர் பரவலுக்கு IEBCI உதவிகரமாக இருப்பதோடு, நிறுவனத்தின் கூறுகள் மற்றும் சோர்ஸிங் பாகங்களின் தரத்தின் நிலையை உயர்த்துவதற்கும் உதவும். இந்த புதிய நிறுவனம், IMI-யின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செயல்பாடுகளுக்கு உதவி செய்து, இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை இந்நிறுவனம் பூர்த்தி செய்ய வழிவகை செய்யும்.

இது குறித்து IEBCI மற்றும் IMI இயக்குநர் திரு.நயோஹிரொ யாமாகுசி கூறுகையில், “இந்திய வாடிக்கையாளர்களுக்கு தரமான மற்றும் மதிப்பு மிகுந்த தயாரிப்புகளை அளிக்க வேண்டும் என்ற எங்களின் தொடர்ச்சியான செயல்பாட்டில் இது ஒரு பகுதியாகும். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது செயல்பாடுகளை ISUZU துவங்கியதில் இருந்து, உண்மையிலேயே இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும். அடுத்தாண்டின் துவக்கத்தில் ஸ்ரீசிட்டியில் துவங்க உள்ள புதிய IMI தயாரிப்பு தொழிற்சாலையை பயன்படுத்தி, IEBCI-யின் மூலம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, பொருட்களின் விலை, வழங்குபவர் தரம் ஆகியவற்றின் மீதான உன்னிப்பான கவனத்தை நம்மால் பெற முடியும். இதன்மூலம் இரு நிறுவனங்களின் வலிமைக்கும் முட்டுக் கொடுப்பது போல அமைந்து, முக்கியமாக இந்தியாவில் முழு முயற்சியோடு கூடிய செயல்பாடுகளின் முக்கிய தருணத்தில் IMI இருக்கும் நிலையில், இருவரும் ஒரு இயற்கையான வளர்ச்சியை எட்டி சேர முடியும். அதேபோல ISUZU-ன் சோர்ஸிங் பாகங்கள் மூலம் சர்வதேச அளவிலான செயல்பாடுகளுக்கு IEBCI பெரும் ஆதரவாக இருக்கும். இதற்கு உதவியாக மற்ற பல நாடுகளின் மீதான சிறந்த சப்ளையர் பேஸாக இந்தியா உள்ளது” என்றார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த இசுசு மோட்டார்ஸ், தற்போது நாடெங்கிலும் உள்ள 27 டீலர்ஷிப்கள் மூலம் பிக்-அப் ட்ரக்ஸ் வகையை சேர்ந்த இசுசு D-மேக்ஸ் மற்றும் MU-7 SUV ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.

மேலும் படிக்க

இசுசு MU-7 AT அறிமுகம்
இந்தியாவில் பிக்-அப் ட்ரக்ஸ்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Isuzu MU 7

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience