க்யு30 சொகுசு சிறிய கார்கள் பற்றிய தகவல் மற்றும் மாதிரியை இன்பினிட்டி வெளியிட்டது.
published on ஜூலை 24, 2015 01:28 pm by sourabh
- 21 Views
- 3 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: நிஸ்ஸான் நிறுவனத்தின் சொகுசு கார் தயாரிப்பு பிராண்டான இன்பினிட்டி தனது புதிய தயாரிப்பான க்யு30 பற்றிய தகவலை வெளியிட்டது. இந்த க்யு30 மாடல் காரின் மாதிரி வடிவமைப்பு சிறப்பம்சங்கள் முதன் முதலில் 2013 ம் ஆண்டு பிராங்க்பர்ட் நகரில் நடந்த ஆட்டோ ஷோவில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. முறையான விற்பனைக்கான அறிமுகம் அதே பிராங்க்பர்ட் ஆட்டோ ஷோவில் இந்த வருடம் அறிமுகம் ஆக உள்ளது. பி எம் டபுள்யூ1 சீரீஸ்,மெர்செடெஸ் பென்ஸ் ஏ கிளாஸ் மற்றும் வோல்வோ வி 40 மாடல் கார்களுக்கு இந்த புதிய க்யு30 மாடல் கார் கடும் போட்டியாக அமையும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
உற்பத்திக்கு தயாராக இருக்கும் இந்த மாடல் கார்கள் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பிரான்க்பர்ட் ஆட்டோ ஷோவில் சொல்லப்பட்ட அதே கான்செப்டுடன்(மாதிரி வடிவம்) தான் தயாரிக்கப்பட உள்ளன.அதே பின்பக்கமாக சற்று சாய்ந்த வாக்கில் அமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள்(ச்வப்ட் பாக் ஹெட்லேம்ப்ஸ்), நன்கு எடுப்பாக தெரியும் முன்புற க்ரில் நன்கு பளிச்சென்று தெரியும் கிரீஸ் லைன் மற்றும் ரூப் லைன் அமையப்பெற்றுள்ளன. முன்புற பம்பர், காற்று தடுப்பன்(எயர்டேம்ஸ்) மற்றும் ஏயர்வென்ட் முதலியன கான்செப்டில் சொல்லப்பட்டது போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ORVM மற்றும் சக்கரங்களும் கான்செப்ட் மாடலில் சொல்லப்பட்டதைப்போல் இல்லாமல் வித்தியாசமான வடிவமைப்பை பெற்றுள்ளன.காரின் உட்புறத் தோற்றம் மற்றும் எஞ்சின் பற்றிய விவரங்கள் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில் எதிர் வரும் ஆட்டோ ஷோவில் இந்த தகவல்களையும் நிஸ்ஸான் இன்பினிட்டி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்பிநிடியின் இந்த க்யு30 model கார்கள் தான் இந்த நிறுவனம் ஐரோப்பாவில் முதல் முதலாக தயாரிக்கப் போகும் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் தயாரிப்பு முழு வீச்சில் தொடங்கும் என்றும் இந்த மாடலின் கிராஸ்ஓவர் மாடல்களின் உற்பத்தி 2016 ம் ஆண்டு தொடங்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.