இன்பினிட்டி QX 30 க்ராஸ்ஓவர் வெளியிடப்பட்டது
published on நவ 19, 2015 06:39 pm by manish
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
ஜப்பானிய கார் தயாரிப்பாளர்களான இன்பினிட்டி தன்னுடைய இன்பினிட்டி QX 30 கார்களின் தகவல்களை வெளியிட்டனர். ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த QX 30 காரின் கான்சப்டை வெளியிட்ட இந்த நிறுவனம் , இப்போது தயாரிப்புக்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த QX 30 க்ராஸ் ஓவர் தோற்றத்துடன் மிகவும் பொருந்தி போகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு முற்றிலும் புதிய AWD ( ஆல் வில் ட்ரைவ்) தொழில்நுட்ப அம்சம் கொண்ட கிராஸ் ஓவர் கார்கள் இந்த QX 30 கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேல் மற்றும் கீழ்புற ஓரங்களில் குரோம் பூச்சுக்களுக்கு நடுவே இன்பிநிடியின் பிரபலமான மெஷ் க்ரில் பொருத்தப்பட்டுள்ளது. இரட்டை எக்ஸ்ஹாஸ்ட் கொண்ட நன்கு எடுப்பாக தெரியும் பாக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் 45 மிமீ வரை உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் கருப்பு வண்ண பாடி க்லேடிங் கொடுக்கப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. நேர்த்தியான விண்ட்ஷீல்ட் மற்றும் LED பின்புற விளக்குகளும் கண்களை பறிக்கின்றன.
உட்புறத்தைப் பொறுத்தவரை இந்த காரின் ஹேட்ச்பேக் வெர்ஷனில் உள்ளது போன்ற 7 அங்குல இந்போடைன்மென்ட் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அறௌன்ட் வியு மானிடர் , அடேப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் , பார்கிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள அதிக விறைப்பான ஸ்ப்ரிங் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் ஆன்டி ரோல் பார்கள் காரின் சொகுசு தன்மைக்கு மேலும் வலு சேர்கிறது. இன்னும் சற்று உள்ளார்ந்து பார்கையில் AWD Q30 கார்களில் உள்ளது போன்ற 2.2 லிட்டர் டீசல் அல்லது 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இந்த புதிய QX 30 க்ராஸ் ஓவர் கார்களிலும் பொருத்தப்படும் என்று தெரிகிறது. இந்த எஞ்சின்கள் முறையே 168பிஎச்பி மற்றும் 203பிஎச்பி சக்தியையும் வெளியிடும் ஆற்றல் கொண்டவை. உலகளவில் 2016 ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கார்கள் மெர்சிடீஸ் - பென்ஸ் GLA மற்றும் BMW X1 கார்களுடன் போட்டியிடும்.
இதையும் படியுங்கள் : க்யு30 சொகுசு சிறிய கார்கள் பற்றிய தகவல் மற்றும் மாதிரியை இன்பினிட்டி வெளியிட்டது.
0 out of 0 found this helpful