சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ரெனால்ட் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் முன்பே ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது

published on மார்ச் 13, 2020 12:53 pm by sonny for ரெனால்ட் காப்டர்

இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதில் புதிய இயந்திர விருப்பத்துடன் சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் சிறப்பம்ச புதுப்பிப்புகளைப் பெறும்

  • புதிய முன்பக்க பாதுகாப்பு சட்டகம் மற்றும் பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட உட்புற வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

  • இந்திய-சிறப்பம்சம் பொருந்திய கேப்டூரிலும் இதே புதுப்பிப்புகளை எதிர்பார்க்கலாம்.

  • இந்திய சிறப்பம்சம் பொருந்திய ரெனால்ட் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைப் பெறாது.

  • புதிய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட கேப்டூர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

  • இந்திய-சிறப்பம்சம் பொருந்திய ரெனால்ட் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரெனால்ட் கேப்டூர் காம்பாக்ட் எஸ்யூவி பிஎஸ்6 விதிமுறைகளுக்கு ஏற்ப இயந்திரங்கள் மற்றும் அதன் மையப்பகுதியில் புதுப்பிப்பு ஆகியவற்றைப் பெறுகிறது. முன்பே அதன் ரஷ்ய-சிறப்பம்சம் பொருந்திய தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது ஜூன் 2020 க்குள் முழுமையாகக் காட்சிப்படுத்தப்படும்.

ரஷ்யாவில் கப்தூர் என அடையாளம் காணப்பட கேப்டூர், புதுப்பிக்கப்பட்ட முன்பக்க பாதுகாப்பு சட்டகத்தைக் கொண்டுள்ளது, அதே சமயம் முன் புற வடிவமைப்பு மாறாமல் இருக்கின்றது. இது ஒரு புதிய, ஸ்போர்ட்டியர் உலோக சக்கர வடிவமைப்பையும் பெறுகிறது. இருப்பினும், கார் தயாரிப்பு நிறுவனம் ரஷ்யாவில் 2020 கேப்டூரை அதிக அளவிலான தனித்துவத்துடன் வழங்க திட்டமிட்டுள்ளது. இது முகப்பு பெட்டி மற்றும் முன்புறம் ஓட்டுனர் அல்லது பயணிகள் வசதியாக இருப்பதற்கான அமைப்பைச் சுற்றி விளக்கு அமைப்புகளைச் சேர்ப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் புதுப்பிக்கப்பட்ட உட்புற அமைப்பையும் பெறுகிறது. புதிய கேப்டூர் முன்காட்சியில் வெளிப்புற வண்ணத்திற்கு ஏற்ற சரிசெய்யக்கூடிய தலைசாய்க்கும் அமைப்பைப் பெறுகிறது. புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச பட்டியலை இதற்கு எதிர்பார்க்கலாம்,இது இன்னும் காட்சிப்படுத்தவில்லை.

விதிமுறைகளுக்கான விருப்பங்களைப் பொறுத்தவரை, இந்திய-சிறப்பம்சம் பொருந்திய எஸ்யூவி தற்போதைய கேப்டூரில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் இயந்திரத்தில் பிஎஸ்6 இணக்கமான பதிப்பைப் பெறும். பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப ரெனால்ட் இந்தியாவில் டீசல் இயந்திர விருப்பத்தை நிறுத்தி வருவதால், ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட புதிய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரத்தை முகப்பு மாற்றம் செய்யப்பட்டகேப்டூர் பெறலாம். இந்தியாவில் விற்கப்படும் ரெனால்ட்-நிஸான் மாதிரிகளில் வழங்கப்படும் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்திற்குப் பதிலாக ஒருவேளை மாற்றக்கூடும். கைமுறை மற்றும் தானியங்கி முறை செலுத்துதல் விருப்பங்களில் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட கேப்டூர் வழங்கப்படலாம். 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திரத்துடன் சிவிடி தானியங்கி முறை விருப்பத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகப்பு மாற்றம் செய்யப்பட்ட ரெனால்ட் கேப்டூர் செப்டம்பர் 2020 க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா, க்யா செல்டோஸ் மற்றும் நிஸான் கிக்ஸ் போன்றவற்றிற்குத் தொடர்ந்து போட்டியாக இருக்கும். தற்போதைய மாதிரியின் விலை ரூபாய் 9.5 லட்சத்திலிருந்து ரூபாய் 13 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் டெல்லி) இருக்கும். தூய்மையான இயந்திர விருப்பங்கள் மற்றும் சிறப்பம்ச புதுப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, முகப்பு மாற்றம் செய்யப்பட்ட கேப்டூருக்கு கொஞ்சம் விலை உயர்வை எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க: கேப்டூர் டீசல்

s
வெளியிட்டவர்

sonny

  • 32 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ரெனால்ட் காப்டர்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை