• English
  • Login / Register

இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் GLC-யை IIMS 2015-ல்

published on ஆகஸ்ட் 24, 2015 12:57 pm by nabeel

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

காட்சிக்கு வைத்தது மெர்சிடிஸ்-பென்ஸ்

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் GLC-யை 2015 IIMS-ல் (இந்தோனேஷியா இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ) காட்சிக்கு வைத்தது. இந்த கார் ஏற்கனவே ஜெர்மனியில் காட்சிக்கு வைக்கப்பட்டாலும், இது GLC-யின் சர்வதேச ஆட்டோ ஷோ பிரிமியர் ஆகும். இந்த ஜெர்மன் தயாரிப்பு வரும் 2016 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. GLK என்ற தற்போதைய மாடலை விட, இந்த புதிய தலைமுறை காரில் அதிக இடவசதி உள்ளது. GLC-யில் அதிக ஷோல்டர் ரூம், லெக் ரூம் மற்றும் பழைய மாடலில் இருந்த 1550 லிட்டர் பூட் அளவை விட அதிகமாக, அதாவது 1600 லிட்டர் பூட் அளவு போன்ற அம்சங்கள் இருப்பதாக மெர்சிடிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோடி உடன் ஒப்பிட்டால் அளவில் சற்று பெரியதாக இருந்தாலும், 19% அதிக எரிபொருள் சிக்கனத்தில் ஈடுபட்டு நம்பிக்கை அளிக்கிறது. GLK-யைப் போல இல்லாமல், புதிய GLC-யில் வலதுகையில் ஓட்டும் (ரைட்ஹேன்டு ட்ரைவ்) வசதியைக் கொண்டு, C-கிளாஸின் ஒழுங்குபடுத்தப்பட்ட பின்-சக்கர ஓட்டுதல் கட்டமைப்பு (மாடுலார் ரியர்-வீல் ட்ரைவ் ஆர்ச்சிடெக்சர் – MRA பிளாட்ஃபாம்)-யை அடிப்படையாக கொண்டது.

2-லிட்டர் நான்கு-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் 350 Nm டார்க் மற்றும் 211 hp-யை அளிக்கும் GLC 250 4MATIC வகை, இந்தோனேஷியாவில் விற்பனைக்கு அளிக்கப்பட உள்ளது. 9-ஸ்பீடு 9G-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் செயல்படும் இந்த GLC, 8 விநாடிகளில் மணிக்கு 0-வில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டி விடுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 222 கி.மீ வேகம் வரை செல்லலாம்.

ஆரம்பத்தில் GLC-யை பிளெக்-இன் ஹைபிரிட் வகை உட்பட மொத்தம் 4 வகைகளில் உலகமெங்கும் அறிமுகப்படுத்த உள்ளதாக மெர்சிடிஸ்-பென்ஸ் கூறியுள்ளது. GLC மாடல்கள் பின்வருமாறு: GLC 220d, GLC 250d, GLC 250 மற்றும் GLC 350e பிளெக்-இன் ஹைபிரிட் ஆகியவை 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை கொண்டு கிடைக்கும்.

டீசல் 

மாடல்

BHP டார்க்
GLC 220d 170 400 Nm
GLC 250d 204 500 Nm

பெட்ரோல்

மாடல்

BHP

டார்க்

GLC 250 211 350 Nm
GLC 350e 320 -

GLC 350e பிளெக்-இன் ஹைபிரிட்டின் எரிபொருள் சிக்கனத்தை பொறுத்த வரை, லிட்டருக்கு 38.46 கி.மீ அளிக்கிறது. இதில் 34 கி.மீ வரையுள்ள பயணத்தை மின்னாற்றாலை மட்டுமே கொண்டு செயல்படும்.

இந்த 2-லிட்டர் ஆற்றல் கொண்ட கார்களில் 9G-ட்ரோனிக் ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஹைபிரிட் வகையில் மட்டும் மாறுபட்ட அம்சமாக 7G-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. எல்லா GLC மாடல்களிலும் 4MATIC ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டத்தை ஒரு தரமான அம்சமாகவே, மெர்சிடிஸ்-பென்ஸ் வைத்துள்ளது. கரடுமுரடான பாதைகளுக்கு என கூடுதல் தேர்வாக, ஏர்மெட்டிக் ஏர் சஸ்பென்ஸன் சிஸ்டம் வைக்கப்பட்டுள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience