இந்தாண்டின் முதல் பாதியில் ஸ்போர்ட்ஸ் கா ர்களில் அதிகம் விற்பனையான கார்: இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஃபோர்டு முஸ்டாங்
modified on செப் 14, 2015 04:48 pm by raunak for போர்டு மாஸ்டங் 2016-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
இன்னும் துவக்கப்படாத நிலையில், முதல் முறையாக முஸ்டாங் உலக சுற்றுலா செய்து வருகிறது. கடந்த 6 மாதங்களில், உலகமெங்கும் 76,124 முஸ்டாங்களை பதிவு செய்துள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், அதிகம் விற்கப்பட்ட ஸ்போர்ட் கார்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஜெய்ப்பூர்: 2015 ஆம் ஆண்டின் முதல் பாதியில், உலகில் அதிகம் விற்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெயரை ஃபோர்டு முஸ்டாங் பெற்றுள்ளது. ஆச்சரியமாக உள்ளதா? உண்மை தான். ஃபோர்டு நிறுவனத்தின் ஆறாவது தலைமுறையை சேர்ந்த முஸ்டாங் காரை விட, வேறு எந்த காரும் நம்மை இவ்வளவு திடுக்கிட வைக்கவில்லை. அட்லாண்டிக்கின் இடதுபுறத்தை தாண்டி, இந்நிறுவனம் முதல் முறையாக முஸ்டாங் காரை வெளியே விற்பனை செய்கிறது. இந்த அட்டகாசமான காருக்காக முழு உலகமும் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில், இதற்கான முடிவுகள் வெளிப்படையாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் முஸ்டாங் காரை அறிமுகம் செய்ய ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக புனே நகரில் உள்ள ARAI-யில் முஸ்டாங் காரை, நாங்கள் உளவு பார்த்தோம். இந்த ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிலோ, இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறாம் தலைமுறை முஸ்டாங் காரின் விற்பனை, கடந்த குளிர் காலத்தில் ஆசியா மற்றும் அமெரிக்காவில் துவக்கப்பட்டது. இந்த கோடை காலத்தில் முஸ்டாங் கார், ஐரோப்பிய சந்தைக்குள் (வலது-கை கொண்டு ஓட்டும் வகை – RHD உட்பட) பிரவேசித்தது. முஸ்டாங் காரின் கடந்த 50 ஆண்டுகால சரித்திரத்தில், முதல் முறையாக வலது கையால் ஓட்டும் வாகனங்களின் தயாரிப்பு சமீபத்தில் தான் துவங்கியுள்ளது. மேலும் ஃபோர்டின் ஃபிளாட் ராக் தயாரிப்பு தொழிற்சாலையில், LHD தயாரிப்பு கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
IHS ஆட்டோமோட்டிவ் ரெஜிஸ்ட்ரேஷன் டேட்டா-வின்படி, அமெரிக்க வாகன தயாரிப்பாளரான ஃபோர்டு, கடந்த ஆறு மாதங்களில் 76,124 முஸ்டாங் கார்களை பதிவு செய்துள்ளது. இதோடு கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிட்டால், இது 56 சதவீதம் உயர்வு ஆகும். விற்பனை பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனா சந்தைகள் முன்னணி வகிக்கின்றன. RHD சந்தையை பொறுத்த வரை, ஐரோப்பாவில் இருந்து 2000 முன்பதிவுகளை பெற்றுள்ள ஃபோர்டு நிறுவனம், ஆஸ்திரேலியாவில் இருந்து 3000-மும், நியூஸ்லாந்தில் இருந்து 400 கார்களுக்கும் முன்பதிவை பெற்றுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் துவக்க நிலை RHD வாகனங்கள் வழங்குவது துவக்கப்படும்.
0 out of 0 found this helpful