இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் 2016 டொயோட்டா ஃபார்ச்யூனர், ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
raunak ஆல் அக்டோபர் 21, 2015 05:15 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 19 Views
- 5 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
டொயோட்டா நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான ஃபார்ச்யூனரை, ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டாம் தலைமுறைக்கான SUV-க்கு 47,990 ஆஸ்திரேலியன் டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய ரூ.22 லட்சத்திற்கு சமம் ஆகும். இந்தியாவில் இதன் அறிமுகம் குறித்து பார்த்தால், அநேகமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ-வில், டொயோட்டா நிறுவனத்தினால் இது காட்சிக்கு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2016 ஆம் ஆண்டிலோ அல்லது 2017 ஆம் ஆண்டின் துவக்கத்திலோ இதன் அறிமுகம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்ரோலேட் ட்ரையல்பிளேஸர், அடுத்து வரவுள்ள 2016 ஃபோர்டு எண்டோவர் மற்றும் புதிய மிட்சுபிஷி பஜேரா ஸ்போர்ட் ஆகியவற்றுடன் இந்த வாகனம் போட்டியிட உள்ளது.
ஆஸ்திரேலியாவில், இந்த இரண்டாவது தலைமுறை ஃபார்ச்யூனர், 2.8-லிட்டர் டீசல் என்ற ஒரே வகையில் மட்டுமே கிடைக்கிறது. கடந்த ஆண்டு டொயோட்டா நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இரு புதிய என்ஜின்களில், இதுவும் ஒன்றாகும். நான்கு சிலிண்டர் டையரேக்ட்-இன்ஞ்சக்ட்டு டர்போடீசல் மூலம் 174.3 bhp ஆற்றலையும், அதிகபட்சமாக 450 Nm முடுக்குவிசையையும் அளித்து, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 6-ஸ்பீடு மேனுவல் உடன் பொருத்தப்படும் போது, 420 Nm முடுக்குவிசையை அளிக்கிறது. 2.8-லிட்டர் மோட்டாரை தவிர, டொயோட்டா நிறுவனத்தால் 2.4-லிட்டர் மோட்டாரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான புதிய ஃபார்ச்யூனரை இயக்க, மேற்கூறிய 2.8-லிட்டர் மற்றும் 2.4-லிட்டர் ஆகிய இரண்டையும் எதிர்பார்க்கலாம்.
இயக்குத் திறனை பொறுத்த வரை, 2.8-லிட்டர் மோட்டாருக்கு 100 கி.மீ. அடைய 7.8 லிட்டர் (ஏறக்குறைய லிட்டருக்கு 12 கி.மீ.) தேவைப்படும் என்றும், அதே நேரத்தில் ஆட்டோமேட்டிக்கிற்கு 100 கி.மீ. அடைய 8.6 லிட்டர் (ஏறக்குறைய லிட்டருக்கு 11 கி.மீ) தேவைப்படும் என்றும் டொயோட்டா ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. மேலும் இதில் 80 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு எரிபொருள் டேங்க்கை கொண்டுள்ளது.
பரிந்துரை: இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் 2016 ஃபார்ச்யூனரை டொயோட்டா வெளியிட்டது
மேலும் படிக்க: