சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஹூண்டாய் க்ரேடா Vs மாருதி எஸ் கிராஸ் Vs ஹோண்டா ஜாஸ்: ஆமாம் உங்களுக்கு சரியாக தான் கேட்டது!

published on ஆகஸ்ட் 18, 2015 03:08 pm by அபிஜித் for ஹூண்டாய் கிரெட்டா 2015-2020

ஜெய்ப்பூர்:

இந்த மூன்று வாகனங்களையும் ஒப்பிடுவது ஒத்து வராதது போல தோன்றுவது எனக்கு புரிகிறது. ஆனால் இம்மூன்று வாகனங்களில் உள்ள சில வகைகளை குறித்து நாம் பார்க்கும் போது, அவற்றின் விலை நிர்ணயத்தில் ஒன்றி காணப்படுவதை அறியலாம். துவக்கத்தில், எஸ் கிராஸ் மற்றும் க்ரேடா போன்ற வாகனங்களை, ஹாட்ச்பேக் வாகனமான ஜாஸ் உடன் ஒப்பிடுவது ஒவ்வாதது போல எனக்கும் தோன்றியது. ஆனால் இம்மூன்று வாகனங்களையும் ஒப்பிட்டு பார்த்த பிறகு, உயர்ந்த சிறப்பு தன்மைகளை கொண்ட ஜாஸ், மற்ற இரு சாதாரண கார்களை விட, ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது என்பதை கண்டுக் கொண்டேன். எக்ஸ்-ஷோரூம் புதுடெல்லி விலை மதிப்பு (நம்பர் பிராக்கெட்) அடிப்படையில் ரூ.8.0 லட்சத்தில் இருந்து 8.8 லட்சம் வரை எடுத்துக் கொள்வோம். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மேற்கூறிய மூன்று கார்களின் வகைகளில், இந்த விலை மதிப்பிற்கு உட்பட்டதாக உள்ள கார்களை ஒப்பிட்டு பார்ப்போம்.

க்ரேடா: SUV விரும்பிகளுக்காக!

அதன் சமகால அமைப்பை கொண்டு, ஒரு SUV-யை போல தோற்றமளிப்பதில் க்ரேடாவை முன்னே நிறுத்தியுள்ள சிறப்பு ஹூண்டாயின் ஃப்ளூய்டிக் டிசைன் 2.0-யையே சேரும். அப்படிப்பட்ட ஒரு வடிவமைப்பை கொண்ட காரை விரும்புவோருக்கு இது திருப்தி அளிப்பதாக தெரியலாம். ஆனால் இதை சிறந்தது என்று கூற முடியாது. ஏனெனில் இந்த விலை மதிப்பில் நமக்கு கிடைப்பது அடிப்படையான 1.6 பெட்ரோல் என்ஜின் மட்டுமே. இருப்பினும், இதன் சாலை செயல்பாடு மற்றும் ஓடுதிறன் ஆகியவை சிறப்பாக உள்ளது. ஆனால் பெட்ரோல் மோட்டார் கொண்டு இயங்கும் இந்த காரின் குறைவான மைலேஜ், இந்த வகையை விரும்புவதற்கு ஒரு தடைக்கல்லாக நிற்கிறது. டீசல் வகைகளை பார்த்தால், எக்ஸ்-ஷோரூம் விலையே ஒரேயடியாக ரூ.9.5 லட்சம் என்று மிக அதிகமாக காணப்படுகிறது.

எஸ்-கிராஸ்: ஒரு பெரிய பிரிமியம் கார்!

க்ரேடாவில் உள்ள பெட்ரோல் செலவீன பிரச்சனையை தீர்க்க விரும்புவோர், எஸ்-கிராஸின் வகையான DDiS200 சிக்மாவின் பக்கம் திரும்பலாம். ஏனெனில் இதன் டீசல் வாகனம் கூட, நாம் ஒப்பிட்டிற்கு எடுத்துக் கொண்ட விலை நிர்ணயத்திற்குள்ளேயே கிடைக்கிறது. ஆனால் க்ரேடாவில் உள்ளது போன்ற ஒரு எளிய மியூசிக் சிஸ்டம் கூட இதில் கிடையாது என்பதால், காரில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களை வைத்து பார்க்கும் போது, அடிப்படை வகையாக காட்சியளித்து பின்னடைவை அடைகிறது. ABS, EBD, தரமான டிரைவர் மற்றும் பயணிகள் ஏர்பேக்குகள் ஆகியவற்றை கொண்டு ஒரு பாதுகாப்பான காராக இருப்பது இதன் சிறப்பாக பகுதியாகும்.

ஜாஸ்: தி வேல்யூ டீல்!

சுகமான பயணத்தை அளிக்கும் வகையிலான எல்லா வசதிகளையும் உட்கொண்டு, எஸ்-கிராஸ் மற்றும் க்ரேடாவை விட அதிக இடவசதியை பெற்று, கையாளுவதற்கு எளிமையாகவும், மிக குறைந்த விலையிலும் கிடைக்கும் ஜாஸ், ஒரு மதிப்புள்ள வியாபாரத்தை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக அமையும். எஸ்-கிராஸ் உடன் ஒப்பிடும் போது, பெட்ரோல் கொள்அளவு வசதியில், ஜாஸ் ஒரு லிட்டர் குறைவாக இடத்தை கொண்டுள்ளது. 354 லிட்டரில், ஒரு ஹாட்ச்பேக்காக தெரியும் ஜாஸின் துவக்கம் சிறப்பாக அமைகிறது. மேலும் சிறப்பம்சங்களை கொண்ட இக்காரில் உள்ள மேஜிக் சீட்கள் மூலம் மகிழ்ச்சி அடையலாம்.

வெளியிட்டவர்

அபிஜித்

  • 11 பார்வைகள்
  • 1 கருத்துகள்

Write your Comment மீது ஹூண்டாய் கிரெட்டா 2015-2020

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை